32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 64 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 64)
எட்டு & பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தபால் துறையில் வேலைவாய்ப்பு! Exclusive

எட்டு & பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தபால் துறையில் வேலைவாய்ப்பு!

தமிழக தபால் துறையில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. காலியிடம்: மோட்டார் மெக்கானிக் 5, காப்பர் 1, பெயின்டர் 1, டயர்மேன் 1, மோட்டார் வெகிக்கிள் எலக்ட்ரீசியன் 2, டிரைவர் 25 என மொத்தம் 35 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தொடர்பு டைய பிரிவில் சான்றிதழ் பெற்றி ருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு பத்தாம் வகுப்பும், மோட்டார் மெக்கானிக்கும் தெரிந் திருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு மூன்றாண்டு அனுபவம் […]

May 14, 2021 admin
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு! – ஸ்டாலின் அரசு அறிவிப்பு Exclusive

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு! – ஸ்டாலின் அரசு அறிவிப்பு

அண்மையில் நடைபெற்ற அண்ணாப் பல்கலைக் கழகத் தேர்வு முறையாக நடைபெறவில்லை என்றும், மதிப்பெண்கள் முறையாக வழங்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் இத்தேர்வுக்குக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனவும் உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ”சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நவம்பர் / டிசம்பர் 2020க்கான பருவத் தேர்வுகள் ஒழுங்கு நிகழ்நிலைத் தேர்வாக (Proctored Online Examination) 2021 பிப்ரவரி மாதம் […]

May 10, 2021 admin
ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு! Exclusive

ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு!

மத்திய அரசு பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் 2021 தேர்வு, ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுக்கு 4 முறை நடைபெறுகிறது. முதல் கட்டமாக பிப்ரவரி மாதமும் அதைத் தொடா்ந்து மாா்ச் மாதத்திலும் தோவு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நடைபெறும். ஒரே மாணவா் 4 முறையும் தேர்வை எழுதலாம். எனினும் அவற்றில் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் […]

May 4, 2021 admin
.எஸ்பிஐ வங்கியில் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு! Exclusive

.எஸ்பிஐ வங்கியில் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு!

பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவில் நிரப்பப்பட உள்ள 5000 இளநிலை அசோஸியோட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்புக்காக காத்திருந்த இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறவும். பணி: Junior Associate காலியிடங்கள்: 5000 (சென்னைக்கு 473 + புதுச்சேரிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன) வயது வரம்பு: 01.04.2021 தேதியின் படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் […]

April 29, 2021 admin
ஆசிரியர்களை கல்லூரிக்கு வர கட்டாயப்படுத்த கூடாது – தமிழக அரசு உத்தரவு Exclusive

ஆசிரியர்களை கல்லூரிக்கு வர கட்டாயப்படுத்த கூடாது – தமிழக அரசு உத்தரவு

கொரோனா நோய் இரண்டாம் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் கல்லூரி ஆசிரியர்களை கல்லூரிக்கு வர கட்டாயப்படுத்த கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கல்லூரிகள் இணை இயக்குநர் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ கொரோனா காலத்தில் கல்லூரி வகுப்புகளை இணையவழியாக வீட்டிலிருந்தவாறு மட்டுமே நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்ட நிலையில் சில கல்லூரிகளில் இணையவழியாக வகுப்புகளை எடுக்கவும் மற்றும் இதர கல்லூரி சார்ந்த பணிகளை மேற்கொள்ளவும் ஆசிரியர்களை கல்லூரிக்கு கண்டிப்பாக […]

April 28, 2021 admin
தமிழகத்திலுள்ள பல்வேறு  மாவட்ட நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு! Exclusive

தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு முழுக்க இருக்கும் பல்வேறு மாவட்ட வாரியாக நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம் : அலுவலக உதவியாளர் 1912, வாட்ச்மேன் 496, மசால்சி 485, ஸ்வீப்பர் 214, நைட் வாட்ச்மேன் 186, சானிடரி வொர்க்கர் 110, நைட் வாட்ச்மேன் வித் மாசால்சி 123, தோட்ட பராமரிப்பாளர் 28, காப்பிஸ்ட் அட்டென்டர் 3 என மொத்தம் 3557 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: அலுவலக உதவியாளர் பிரிவுக்கு எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மற்ற பிரிவுகளுக்கு […]

April 23, 2021 admin
ஐ.சி.எஸ்.இ. 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து! Exclusive

ஐ.சி.எஸ்.இ. 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் எதிரொலியாக ஐ.சி.எஸ்.இ. 10–ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 12–ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொடங்கி, தொற்று பாதிப்புகள் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, தில்லி, கேரளா, தமிழகம் உள்ளிட்ட சில இடங்களில் கொரோனா பரவல் அதிகம் உள்ளது. இதை அடுத்து மாநிலக் கல்வித் திட்டம் மற்றும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயிலும் 10–-ம் […]

April 20, 2021 admin
என்ஜினியரிங் படிப்புக்கான ஜேஇஇ (Main) தேர்வுகள் ஒத்திவைப்பு!! Exclusive

என்ஜினியரிங் படிப்புக்கான ஜேஇஇ (Main) தேர்வுகள் ஒத்திவைப்பு!!

இந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருந்த என்ஜினியரிங் படிப்புக்கான ஜேஇஇ (Main) தேர்வுகளை மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது. இந்தியாவில் பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ (Main) நுழைவுத் தேர்வு 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், ஏற்கனவே பிப்ரவரி, மார்ச் ஆகிய இரண்டு கட்டங்கள் நிறைவடைந்துள்ளது. அடுத்தகட்ட தேர்வு, ஏப்ரல் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று நோயின் தற்போதைய நிலைமையைப் கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற […]

April 18, 2021 admin
பிளஸ் 2 செய்முறை தேர்வு தொடங்கியது! Exclusive

பிளஸ் 2 செய்முறை தேர்வு தொடங்கியது!

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அதன் பின்னர் நோய் பரவல் சற்று குறைந்ததை அடுத்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. மீதமுள்ள வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும், பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் திட்டமிட்டபடி […]

April 16, 2021 admin
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து  & 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு! Exclusive

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து & 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!

நம் நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எகிறிக் கொண்டே போகிறது. இதனால், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்பு தேர்வுகள் மே மாதம் 4-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டுமென எதிர்கட்சித் தலைவர்கள் […]

April 14, 2021 admin
உடனடி செய்திகள்