ஐ.சி.எஸ்.இ. 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து!

ஐ.சி.எஸ்.இ. 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் எதிரொலியாக ஐ.சி.எஸ்.இ. 10–ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 12–ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொடங்கி, தொற்று பாதிப்புகள் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, தில்லி, கேரளா, தமிழகம் உள்ளிட்ட சில இடங்களில் கொரோனா பரவல் அதிகம் உள்ளது. இதை அடுத்து மாநிலக் கல்வித் திட்டம் மற்றும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயிலும் 10–-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தேர்வு எழுதுவதற்கு 15 நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐ.சி.எஸ்.இ. 10–ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. 12–ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!