சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து & 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து  & 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!

ம் நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எகிறிக் கொண்டே போகிறது. இதனால், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்பு தேர்வுகள் மே மாதம் 4-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டுமென எதிர்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா, சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்யுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய கல்வித்துறை அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வரும் மே 4ம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் நாட்டில் கோவிட் 19 வைரஸ் தொற்று அதிகளவில் பரவி வரும் நிலையில் பொதுத் தேர்வுகள் நடத்தக்கூடாது என மாணவர்கள் தரப்பிலும் எதிர்க்கட்சிகள் தரப்பிலும் கோரிக்கைகள் வலுத்தன.தேர்வு மையங்கள் கோவிட் 19 வைரஸ் தொற்று பரவும் இடங்களாக மாறக்கூடாது. அப்படி நடந்தால் அதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சிபிஎஸ்.இ தேர்வுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் மற்றும் அதிகாரிகளுடன் நண்பகலில் ஆலோசனை மேற்கொண்டார்.இந்த கூட்டத்திற்கு பின் மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கோவிட் 19 வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக வரும் 4ம் தேதி நடைபெறவிருந்த சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஜூன் 1ம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!