பிளஸ் 2 செய்முறை தேர்வு தொடங்கியது!

பிளஸ் 2 செய்முறை தேர்வு தொடங்கியது!

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று தொடங்கியது.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அதன் பின்னர் நோய் பரவல் சற்று குறைந்ததை அடுத்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. மீதமுள்ள வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும், பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் திட்டமிட்டபடி பொதுத்தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெறுகின்றன. கொரோனா பரவல் காரணமாக நான்கு குழுக்களாக மாணவர்களை பிரித்து, செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது.

அனைத்து மாணவர்கள், ஊழியர்களை தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர். மாணவர்களுக்கு 4 சதுர மீட்டர் தூரத்துக்குள் தேவையான சாதனங்கள் வைக்கப்பட்டிருந்தன.

தேர்வு தொடங்குவதற்கு முன்பும், தேர்வு முடிந்ததற்கு பிறகும் அந்த இடங்களையும், சாதனங்களையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.

மேலும் கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ள மாணவர்களுக்கு வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேதியியல் செய்முறைத் தேர்வில் வாய்வழியாக ரசாயனங்களை உறிய பயன்படுத்தப்படும் கருவியை மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. அதேபோல தாவரவியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவில் மாணவர்கள் மைக்ரோஸ்கோப் லென்ஸ் அருகே கண்களை பதித்து செய்முறை தேர்வில் ஈடுபடுவார்கள் என்பதால் இதற்கும் தடை விதிக்கப்பப்பட்டுள்ளது.

செய்முறை தேர்வு, மதிப்பெண் வழங்குவதற்கான விதிமுறைகளை அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஏற்கனவே சுற்றறிக்கையாக அனுப்பி இருந்தார்.

அதனை பின்பற்றி நடந்த செய்முறை தேர்வை 1.5 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனராக்கும்

error: Content is protected !!