32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 64 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 64)
அரசு மருத்துவரை கத்தியால் குத்தியது ஏன்? Exclusive

அரசு மருத்துவரை கத்தியால் குத்தியது ஏன்?

அரசு மருத்துவர் ஒருவர் கத்தியால் குத்தப் பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பொதுவாக அரசு மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழியும்.. இதன் காரணமாகவே பலரும் தனியார் மருத்துவமனைக்குப் போய் பணத்தை கொட்டுகிறார்கள்.அரசு மருத்துவமனைக்கு வரும் கூட்டத்திற்கு ஏற்ப மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கையும் இல்லை. இதனால் பொதுமக்களுக்கு பெரும் அவதி.. காத்திருப்பு என்று எரிச்சல் பலமடங்காகிறது. இதற்கு காரணம் ஆட்சியில் இருப்பவர்கள் என்ற புரிதல் மக்களுக்கு ஏற்பட வாய்ப்பில்லை. அவர்கள் கோபம் மருத்துவர்கள் மீதும் ஊழியர்கள் மீதும் […]

November 14, 2024 admin
காஷ்மீரில் நடந்தென்ன?அமரனில் காட்டியதென்ன? Running News

காஷ்மீரில் நடந்தென்ன?அமரனில் காட்டியதென்ன?

இங்கே நம் தமிழ்நாட்டில் சில நிமிஷம் மொபைல் டவர் வரலைன்னா… டவர் வந்த பிறகு… மக்கள் கடும் கோபத்தோடு இணைய சேவையை திட்டி ஒரு போஸ்ட் போடுகிறார்கள். மொபைல் சிக்னல் முழுசாய் கிடைக்காத வீடுகள் அல்லது வீட்டு மனைகள் இன்று விற்பனை ஆவதில்லை. மொபைல்.சிக்னல் கிடைக்காத வீடுகளுக்கு யாருமே வாடகைக்கு வருவதில்லை. இங்கே… நிலைமை இப்படி இருக்க… அங்கே காஷ்மீரில் நிலைமை எப்படி தெரியுமா..?!மென்பொருள் சுதந்திர சட்ட மையத்தின் அறிக்கைப்படி , காஷ்மீரில் இணையம் 2012 முதல் […]

November 11, 2024 admin
அமெரிக்க அதிபராவார் டிரம்ப் என்று அப்பவே தெரியுமே! எப்ப தெரியுமா? Exclusive

அமெரிக்க அதிபராவார் டிரம்ப் என்று அப்பவே தெரியுமே! எப்ப தெரியுமா?

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிக்கொடி நாட்டி விட்டார். ஜனவரி மாதத்தில் அவர் அதிபராக பதவியேற்கப் போகிறார். இதுதான் எங்களுக்குத் தெரியுமே. புதுசா ஏதாச்சும் தகவல் இருந்தா சொல்லுங்க என்கிறீர்களா? தகவல் இருக்கு.அதிபர் தேர்தலில் டிரம்ப்பின் இந்த வெற்றியைப் பற்றி கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் ஆரூடம்(!) சொல்லியிருக்கிறார். அவர்தான் நாஸ்டிரடாமஸ். (நாஸ்டிரடாமஸ் யார் என்று நான் விளக்கவுரை, பதவுரை, தெளிவுரை எல்லாம் கொடுக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். உங்களுக்கு அவரை ஏற்கெனவே தெரிந்திருக்கும். […]

November 9, 2024 admin
கோமாளிகளின் இராஜியமாக மாறியுள்ளது இன்றைய உலகம்! Exclusive

கோமாளிகளின் இராஜியமாக மாறியுள்ளது இன்றைய உலகம்!

கமலா ஹாரிஸின் தோல்வி எதிர்பார்த்த ஒன்றுதான். உலகிலேயே மிக மோசமான ஆணாதிக்கமும், மதவெறியும், இனவெறியும் கொண்ட ஒரு வெள்ளையின உளவியலைக் கொண்ட நாடு அமெரிக்கா. அங்கு வாக்குகளைத் தீர்மானிப்பது கிறித்துவ மதச்சார்பே. வெள்ளையினம் அறிவில் சிறந்தது, மனிதேயமிக்கது, நாகரீகமானது என்கிற புனைவை சிதறடிக்கும் தருணங்கள் இவை. அவைதான் உலகிற்கு பல கொள்ளை நோய்களை, பாசிசத்தை, போரை கொடையாக அளித்தன. அவைதான் இன்று உலகளாவிய மனிதப்பேரழிவிற்கான காரணங்களாக உள்ளன. இந்திய வலதுசாரி வளர்ச்சிக்கு அமெரிக்க என்ஆர்ஐ மூலதனம் ஒரு […]

November 8, 2024 admin
ஒரு புதிய பயணத்திற்கான தேடலோடு இந்த பயணிகளை பின்தொடர்கிறேன்! சொல்றாங்க

ஒரு புதிய பயணத்திற்கான தேடலோடு இந்த பயணிகளை பின்தொடர்கிறேன்!

நாம் வாழவேண்டும் என்று ஒரு கனவு வாழ்வு இருக்குமில்லையா, அதை இன்னொருவர் வாழ்வதை பார்க்கும்போது நமக்கு நிச்சயம் பொறாமை வரத்தான் செய்யும். அதுதான் இயற்கை. ஒருவேளை அப்படி வராவிட்டால் அந்த கனவில் நாம் அத்தனை தீவிரமாக இல்லை என்று எடுத்துக்கொள்ளலாம். பொதுவாக மனிதகுலமே பொறாமையினால் முன்னேற்றம் கண்டவர்கள்தான். இருந்தாலும் வெளிக்காட்டி கொள்ளமாட்டோம். பெருந்தன்மையாக நடிப்பதே நாகரிகம். ஆனால் மனிதர்களை மேலும் மேலும் நாகரிமானவர்களாக முன்னேற்றியதில் பொறாமைக்கு பெரும்பங்குண்டு. அதுதான் அவர்களை மேலும் மேலும் உழைக்கத்தூண்டுகிற பொறி! அப்படி […]

November 7, 2024 admin
மினிமலிசத்தின் குறிக்கோளை அறிந்து கடைபிடிப்போமே! Exclusive

மினிமலிசத்தின் குறிக்கோளை அறிந்து கடைபிடிப்போமே!

குறைந்த பட்சத் தேவைகளுடன் வாழ்தல் என்ற வகையிலான `மினிமலிசம்` எனப்படும் வாழ்வியலை, இப்போது ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் பரப்பி வருகிறார்கள்.உலக அளவில் நிறையப் பேரை இந்தக் கொள்கை கவர்ந்து வருகிறது. உண்மையில் இந்தச் சிந்தனை முதலில் தோன்றியது பாரத தேசத்தில்தான். இந்தக் கொள்கையின் அடிப்படையில் குடிலில் எளிய வாழ்க்கை வாழ்ந்த முனிவர்கள்தான் நம் முன்னோர். மினிமலிசக் கொள்கையின் அடிப்படை வேறேதும் அல்ல, காந்தியம்தான். ஒரு சிறிய பென்சிலைக் கூட அதன் இறுதிப் பயன்பாடு வரை உபயோகித்தால் […]

November 7, 2024 admin
உங்கள் பொன்னான வாக்கை டிரம்புக்கு அளிச்சிடுங்கோ..ஏன்னா? Exclusive

உங்கள் பொன்னான வாக்கை டிரம்புக்கு அளிச்சிடுங்கோ..ஏன்னா?

அமெரிக்காவில், இன்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள்!இந்தநேரத்தில், 2024 என்ற எண், 20ஆல் வகுபடுமா? என்று அமெரிக்கர்கள் பலபேர் கணக்குப் போட்டு கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.ஏன்? என்ன காரணமாம்?அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறுகிற ஆண்டை 20ஆல் வகுக்க முடிந்தால், அந்த ஆண்டில் வெற்றி பெற்று பதவிக்கு வரும் அதிபருக்கு அது ஆபத்தாக முடியுமாம்.இருபதால் வகுபடுகிற ஆண்டில் ஆட்சிக்கு வரும் அமெரிக்க அதிபர் ஒன்று படுகொலையாவார். அல்லது பதவியில் இருக்கும்போதே உடல்நலக்குறைவால் இறந்து போவார்.இதை ஒரு சாபம் என்கிறார்கள். இந்த […]

November 5, 2024 admin
தமிழ்த்தாய் வாழ்த்தில் தவறாமல் ஒன்றைக் கவனிக்கிறேன்! Exclusive

தமிழ்த்தாய் வாழ்த்தில் தவறாமல் ஒன்றைக் கவனிக்கிறேன்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் ஒவ்வொரு முறையும், அதில், ‘கெழிலொழுகும்’ என்ற சொல் வருகிறது.‘நிலமடந்தைக் கெழிலொழுகும்’ என்றுதான் மனோன்மணியம் சுந்தரனாரும் தமிழ்த்தாய் வாழ்த்தில் எழுதியிருக்கிறார். நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரு வதனம்’ என்றால், ‘நிலம் என்னும் பெண்ணின் அழகு ததும்பி வழியும் முகம்’ என்று பொருள் கொள்ளலாம். இந்த கெழிலொழுகும் என்ற சொல்லை எழிலொழுகும் என்று மாற்றிப் பாடலாமே. பாடினால் இன்னும் நன்றாக இருக்குமே. எழிலொழுகும் என்று பாடும்போது பாடலுக்கான அர்த்தம் கேட்பவர்களுக்கு இன்னும் தெளிவாய் புரியும். தமிழ்த்தாய் வாழ்த்தில், […]

November 4, 2024 admin
உணவுகள் ருசி மாறி விட்டன- காரணம் இதுதான்! Exclusive

உணவுகள் ருசி மாறி விட்டன- காரணம் இதுதான்!

மீடியமான ஒரு ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது சாம்பார் இனித்தது, காரக்குழம்பும் இனித்தது. கர்நாடகா ஹோட்டலில் தானே இப்படி இருக்கும். நம்ம ஊர்ல எப்படி என யோசித்தபோது, உள்ளே சமைக்கும் மாஸ்டர் வடமாநிலத்துக்காரர் என கேட்டு தெரிந்துக்கொண்டேன். மூன்று வருடங்களுக்கு முன்பு கணியம்பாடி அருகே உள்ள ஒரு சின்ன ஹோட்டலில் தான். இரவு தோசைக்கு சிக்கன் கிரேவி வாங்கி சாப்பிட்டுவிட்டு அதை ரிட்டன் செய்தேன். ரிட்டன் எடுக்கமாட்டேன் என்றவரிடம், ஜாம் மாதிரி இவ்ளோ டேஸ்டா இருந்தா […]

November 3, 2024 admin
வேண்டாத சர்ச்சையைக் கிளப்பிய கேரள பிரபல திருமணம்! Exclusive

வேண்டாத சர்ச்சையைக் கிளப்பிய கேரள பிரபல திருமணம்!

நம்மாளுங்களுக்கு என்ன தான் பிரச்சனை? விவாகரத்து பெற்று இரண்டு பிள்ளைகளுடன் வாழும் 42 வயது பெண் மீது சில ஆண்டுகள் மூத்தவரான ஒருவருக்கு காதல் பிறக்கிறது.திருமணமாகாத அவர் தன் காதலை சொல்கிறார். அந்தப் பெண்ணும் ஏற்றுக் கொள்கிறார். குடும்பங்களும் ஏற்றுக் கொள்கின்றன. தாயின் மறுமணத்துக்கு புத்தி தெரிந்த பிள்ளைகளும் பச்சைக்கொடி காட்டுகின்றன.கேரளாவில் தொலைக்காட்சி பிரபலங்கள் இருவருக்கிடையே இப்படித்தான் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. சமூக வலைத்தள வாசிகள் மனதில் பிரச்சனை எங்கு வெடிக்கிறது என்று பார்த்தால் அநேகமாக மணமகனின் […]

November 2, 2024 admin
உடனடி செய்திகள்