கோமாளிகளின் இராஜியமாக மாறியுள்ளது இன்றைய உலகம்!

கோமாளிகளின் இராஜியமாக மாறியுள்ளது இன்றைய உலகம்!

மலா ஹாரிஸின் தோல்வி எதிர்பார்த்த ஒன்றுதான். உலகிலேயே மிக மோசமான ஆணாதிக்கமும், மதவெறியும், இனவெறியும் கொண்ட ஒரு வெள்ளையின உளவியலைக் கொண்ட நாடு அமெரிக்கா. அங்கு வாக்குகளைத் தீர்மானிப்பது கிறித்துவ மதச்சார்பே.

வெள்ளையினம் அறிவில் சிறந்தது, மனிதேயமிக்கது, நாகரீகமானது என்கிற புனைவை சிதறடிக்கும் தருணங்கள் இவை. அவைதான் உலகிற்கு பல கொள்ளை நோய்களை, பாசிசத்தை, போரை கொடையாக அளித்தன. அவைதான் இன்று உலகளாவிய மனிதப்பேரழிவிற்கான காரணங்களாக உள்ளன. இந்திய வலதுசாரி வளர்ச்சிக்கு அமெரிக்க என்ஆர்ஐ மூலதனம் ஒரு முக்கியக் காரணம் என்பதை யாரும் மறுத்தவிட முடியாது.

உலகளாவிய வலதுசாரிகளின் வளர்ச்சியையும், அது பாப்புலிசமாக மாறி வெகுமக்கள் உளவியலை தீர்மாணிப்பதாக இருப்பதையும் இத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாக உள்ளது. இனவெறி, மதவெறி, ஆனாதிக்க கோமாளிகளைத்தான் இன்று தலைவர்களாக்கிக் கொண்டாடும் மனநிலையில் மக்கள் கூட்டம் கட்டமைக்கப்படுகிறது. ஒருபுறம் பொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வு மலைக்கும் மடுவிற்குமானதாக மாறியுள்ளது.

மற்றொருபுறம் வேலையில்லாத் திண்டாட்டம். உலகெங்கிலும் நிதி மூலதன ஆதிக்கத்தில் சிக்கித் தவிக்கும் அரசுகள். போர்களைத் தூண்டும் ஆயுத வியபார கார்பரெட் அரசியல் என உலகம் பல வினோதங்களை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. மத்தியதரவர்க்கத்தின் வளர்ச்சி இத்தகைய பிற்போக்கு வலதுசாரித்தனங்களை வரவேற்பதாக வாழவைப்பதாக மாறியுள்ளது.

இந்த உளவியலுக்கு எதிரான ஒரு பண்பாட்டு எதிர்ப்பை வலுவாக கட்டமைக்காமல் இவர்களை இந்த வலது மயக்கத்திலிருந்து மீட்டெடுப்பது கடினம். கோமாளித்தனத்தை நோக்கி நகரும் கோமாளிகளின் இராஜியமாக மாறியுள்ளது இன்றைய உலகம்.

ஜமாலன் தமிழ்

error: Content is protected !!