32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 46 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 46)
ஜனநாயகத்தின் அடித்தளம் ஆட்டம் காண்கிறதா? – பூதத்தை கிளப்பிய பூனம் அகர்வால்! Exclusive

ஜனநாயகத்தின் அடித்தளம் ஆட்டம் காண்கிறதா? – பூதத்தை கிளப்பிய பூனம் அகர்வால்!

இந்தியாவின் ஜனநாயகம், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த எட்டு ஆண்டுகளாக, மூத்த பத்திரிகையாளர் பூனம் அகர்வால், இந்த அடித்தளத்தில் விரிசல்களைக் கண்டறிந்துள்ளார். குறிப்பாக, வாக்குப்பதிவு செய்யப்பட்ட வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை அவர் தனது ஆழமான புலனாய்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையம் (EC) பதிலளிக்காமல் இருப்பது, இந்தியாவின் தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ராகுல் காந்தி சமீபத்தில் முன்வைத்த “வாக்கு திருட்டு” (vote chori) […]

August 12, 2025 admin
இராமன் குறித்த சர்ச்சை:-வைரமுத்து மன்னிப்பு கேட்பது கெளரவம்! சொல்றாங்க

இராமன் குறித்த சர்ச்சை:-வைரமுத்து மன்னிப்பு கேட்பது கெளரவம்!

அண்மையில், சென்னையில் நடந்த கம்பன் விழா ஒன்றில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு கம்பன் விருது வழங்கப்பட்டது. அதில் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. அந்த விழாவில் வைரமுத்து பேசியதுதான் இராம பக்தர்கள் மத்தியில் ஒரு பெரும் பூகம்பத்தைக் கிளப்பி விட்டுவிட்டது. அன்று இராமனைப் பற்றி அவர் எவ்வளவோ பேசினாலும் அதில் அவர் பேசிய ஒரேயொரு சொல்தான் பூகம்பத்திற்குக் காரணமாகிவிட்டது. அதையொரு சொல் என்று சொல்வதைவிட, கம்பனின் ஒரு சொல்லுக்கு வைரமுத்து கொடுத்த விளக்கம்தான் வில்லங்கமாகிவிட்டது. வாலி வதைப்படலம்தான் […]

August 11, 2025 admin
நாலே கால் கால ஆட்சியின் உண்மையான பிராகரஸ் ரிப்போர்ட்! Exclusive

நாலே கால் கால ஆட்சியின் உண்மையான பிராகரஸ் ரிப்போர்ட்!

🦉From The Desk of நிலவளம் ரெங்கராஜன் கண்ணை மூடிக் கொண்டுள்ள முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. முரசொலிக்கு பர்த் டே விஷ் எல்லாம் செய்து அந்த ஊடகத்தின் நயினா கலைஞர் கருணாநிதி போட்டோ எல்லாம் ஷேர் செஞ்ச் துர்கா மேடம் மணாளனே.. முரசொலியின் டேக் லைன் இன்றைய செய்தி நாளைய வரலாறு என்ற டேக் லைன் உருவாக்க கலைஞர் ஆறு நாள் பட்டப்பாடு தெரியுமா? உடன் அவஸ்தைப் பட்ட நாவலர் காலமாகி விட்டாலும் அந்த டேக் […]

August 11, 2025 admin
“என் வாக்கு திருடப்படுகிறது” – தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம்! Exclusive

“என் வாக்கு திருடப்படுகிறது” – தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம்!

அன்புள்ள ஐயா, நான் உங்களுக்கு ஒரு குடிமகள் என்ற முறையில் எழுதுகிறேன். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கும், நாம் தேர்ந்தெடுக்கும் அரசாங்கம் அமைவதை உறுதி செய்வதற்கும் பொறுப்பான இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) கூட்டுறவோடு எனது வாக்கு திருடப்படுகிறது என்ற அச்சத்தில் நான் இருக்கிறேன். இப்போது தலையிடக்கூடிய ஒரே நபர் நீங்கள் மட்டுமே. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உச்ச நீதிமன்றத்தை, குடிமக்களாகிய நமக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு சுதந்திரமான அமைப்பாகக் கருதியது. நீங்கள் அதன் தலைவராக […]

August 9, 2025 admin
மோடியின் கண்ணசைக்கேற்ப செயல்படும் இந்திய ஊடகங்கள்! Exclusive

மோடியின் கண்ணசைக்கேற்ப செயல்படும் இந்திய ஊடகங்கள்!

நரேந்திர மோடியின் ஆட்சியில், இந்திய ஊடகங்கள் முன்னெப்போதும் இல்லாத அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றன. ஆதி சங்கரர் இரண்டு வகையான உண்மைகளைப் பற்றி விளக்கியிருந்தாலும்—சாதாரண மனிதர்களின் உண்மை மற்றும் பிரம்மத்தை உணர்ந்தவர்களின் உண்மை—இன்றைய இந்தியாவில் மூன்று வகையான உண்மைகள் நிலவுகின்றன: அரசாங்கத்திற்கு இணங்கும் பெருமளவிலான ஊடகங்களின் உண்மை, மாற்று ஊடகங்களின் எதிர்க்கருத்துகள், மற்றும் உண்மையில் நடந்தவை. இந்த மூன்று முகங்களுக்கு இடையிலான மோதல், இந்திய ஜனநாயகத்தின் மீதான ஆழமான கேள்விகளை எழுப்புகிறது. பெருமளவிலான ஊடகங்களின் நிலைப்பாடு பெருமளவிலான ஊடகங்கள், […]

August 7, 2025 admin
எதிர்க்கட்சித் தலைவரின் வலிமை, ஜனநாயகத்தின் எதிர்காலம்! Exclusive

எதிர்க்கட்சித் தலைவரின் வலிமை, ஜனநாயகத்தின் எதிர்காலம்!

இந்திய அரசியலில், ஆளும் கட்சிக்கு இணையாக ஒரு வலுவான எதிர்க்கட்சியின் பங்களிப்பு மிகவும் அவசியம். அதன் தலைவர், அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து, ஜனநாயகத்தின் காவலனாக செயல்பட வேண்டும். ஆனால், தற்போது இந்திய அரசியலில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் செயல்பாடு குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. காங்கிரஸ் கட்சி மாநில தேர்தல்களில் சில வெற்றிகளைப் பெற்றாலும், அது ராகுல் காந்தியால் அல்ல, மாறாக அவருடைய தலைமை இருந்தபோதிலும் தான் வெற்றிபெற்றது என்ற […]

August 3, 2025 admin
அடல்ஸ் ஒன்லி பட தா(த்)தா நாயகரின் கவனத்திற்கு…! Exclusive

அடல்ஸ் ஒன்லி பட தா(த்)தா நாயகரின் கவனத்திற்கு…!

தமிழ் சினிமாவில், குறிப்பாக முன்னணி நட்சத்திர ஹீரோக்களின் திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகளும் பல வடிவங்களில் வன்முறையை அப்பட்டமாகச் சித்தரிப்பதும் அதிகரித்துவருவதை நம்மில் பலரும் அடிக்கடி சுட்டிக்காட்டிக் கொண்டுதான் இருக்கிறோம்… !ஆனால் கதை, பாடல்கள், திரைக்கதைக்காக படங்கள் கொண்டாடப்பட்ட காலம் மாறி, அதிரடி அடிதடி சண்டைகளுக்காகவும், அதன் சவுண்ட் எஃபெக்ட்-களுக்காகவும் படங்கள் கொண்டாடப்படுவதுதான் இன்றைய நிலையா மாறிபுடுச்சு . ஃபீல் குட் திரைப்படங்களை விட அதிரடிப் படங்கள் அதிக வசூலைக் குவிப்பதா கணக்குக் காட்டறாய்ங்க. குறிப்பாக வன்முறை, கொலை, […]

August 2, 2025 admin
‘விஸ்வகுரு’வின் மௌனம்: பதிலற்ற கேள்விகளும் ‘சிந்தூரின்’ நிழலும்! Exclusive

‘விஸ்வகுரு’வின் மௌனம்: பதிலற்ற கேள்விகளும் ‘சிந்தூரின்’ நிழலும்!

இரண்டு நாள்களாக நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் எந்தக் கேள்விக்கும் முழுமையான அல்லது சரியான பதில் சொல்லப்பட்டதாகவே தெரிய வில்லை. ‘இந்தியா-பாகிஸ்தான் போர், நான் சொல்லித்தான் நிறுத்தப்பட்டது’ என டிரம்ப் முப்பது முறை சொல்லிவிட்டார். அதற்கு நம் இந்தியாவின் பதில் என்ன? ‘பாகிஸ்தான் தரப்பில் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதுதான் காரணமே தவிர, வேறு யாரும் காரணமல்ல.’ இதுதான் பதில். டிரம்ப் காரணமல்ல என்று அவர் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வதில் ‘விஸ்வகுரு’ வுக்கு என்ன தயக்கம்? அறுபத்தியொரு ஆண்டுகளுக்கு முன்பே […]

July 31, 2025 admin
நீதிக்காக சடலமாக கிடக்கிறான் கவின்! Exclusive

நீதிக்காக சடலமாக கிடக்கிறான் கவின்!

சுர்ஜித் என்கிற இளைஞனுக்கு வயது 24. நவநாகரீக இளைஞன். ஆங்கிலம் தெரியும். படித்தவன். அறிவியல் முன்னேற்றங்களை தெரிந்து வைத்திருப்பவன். அவனது பெற்றோர்கள் இருவரும் காவல்துறையில் பணி புரிகின்றனர். பணத்திற்கு பஞ்சமில்லை. அந்தஸ்த்திற்கும் குறைச்சல் இல்லை. அவனது அக்கா சுபாஷினி சித்தா மருத்துவர். அடுத்த 5 ஆண்டுகளில் அவனுக்கு திருமணம் நடந்திருக்கும். வசதி மிக்க நடுத்தர வாழ்க்கையில் நுழைந்தும் இருப்பான். அவன் அப்படி இருக்க வேண்டும் என்பது தான் நம் அனைவரின் விருப்பமாகவும் இருக்கும். ஆனால் அவனது அத்தனை […]

July 31, 2025 admin
பாலஸ்தீனத்தை தனிநாடாகப் போவதாக நடக்கும் நாடகம்! Exclusive

பாலஸ்தீனத்தை தனிநாடாகப் போவதாக நடக்கும் நாடகம்!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரானின் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் அறிக்கைகள் சில நாட்களாக மாஸ் மீடியாக்களிலும், சமுக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் உண்மையில் மெக்ரானின் இந்த அறிவிப்பு சாவதேச சமூகத்தை திசை திருப்பும் முயற்சியின் ஒரு பாகமே. சந்தேகமிருப்பவர்கள் இம்மானுவேல் மெக்ரானின் எக்ஸ் வலைதளத்திற்கு சென்று பார்வையிடவும். மத்திய கிழக்கின் சில பகுதிகளை எண்ணெய் மற்றும் எரிவாயு வள கொள்ளைக்காகவும், ஆப்பிரிக்காவின் பல பகுதிகளை தங்கம் மற்றும் கனிம வள கொள்ளைக்காகவும் […]

July 29, 2025 admin
உடனடி செய்திகள்