நாலே கால் கால ஆட்சியின் உண்மையான பிராகரஸ் ரிப்போர்ட்!
🦉From The Desk of நிலவளம் ரெங்கராஜன்
கண்ணை மூடிக் கொண்டுள்ள முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே..
முரசொலிக்கு பர்த் டே விஷ் எல்லாம் செய்து அந்த ஊடகத்தின் நயினா கலைஞர் கருணாநிதி போட்டோ எல்லாம் ஷேர் செஞ்ச் துர்கா மேடம் மணாளனே..
முரசொலியின் டேக் லைன் இன்றைய செய்தி நாளைய வரலாறு என்ற டேக் லைன் உருவாக்க கலைஞர் ஆறு நாள் பட்டப்பாடு தெரியுமா? உடன் அவஸ்தைப் பட்ட நாவலர் காலமாகி விட்டாலும் அந்த டேக் லைனுக்காக கருணாநிதியின் பிரசவ வேதனையை அண்ணா நகர் ஆற்காடு வீராசாமியிடம் போய் கேட்டு அறிய முயலுங்கள்..! அப்படி ஒவ்வொரு சொல்லுக்கும் தன் உயிர் கொடுத்து உருவாக்கிய முரசொலி இப்போது ஒரு ஃபுரூப் ரீடர் கூட இல்லாமல் பல பிழைகளுடன் வருவதைக் கூட அறியாதவர் ஆகிவிட்ட முதல்வரே..!
![]()
உங்கள் நாலே கால் கால ஆட்சியின் உண்மையான பிராகரஸ் ரிப்போர்ட் உங்கள் பார்வைக்குக் கூட வரவில்லை என்பது எவ்வளவு பெரிய இழுக்கு தெரியுமா?
அந்த ரிப்போர்ட் வரவில்லை என்றாலும் பரவாயில்லை..தமிழக தலைநகரான சிங்கார சென்னையின் ஹெட் குவார்ட்டர்ஸான ரிப்பன் பில்டிங் வாசலில் பத்து நாட்களுக்கும் மேலாக தங்கள் வாழ்வாதார கோரிக்கைக்காக போராடும் சில நூறு குடும்பங்களின் போராட்டக் குரல் உங்கள் கவனத்துக்கு வரவே இல்லை என்பதுதான் பெரும் சோகம்.. இன்றைக்கு ஒரு குடும்பத்தின் அடிப்படை தேவைகள் பூர்த்தியாவதற்கும், கண்ணியமாக வாழ்வதற்கும் குறைந்தபட்சம் ரூ 35,000 தேவைப்படுகிறது. இதை அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உத்திரவாதப்படுத்தாமல் வெறுமே, ‘சமூக நீதி’ என்று பேசிக் கொண்டிருப்பதெல்லாம் அநீதியல்லவா?
ஆம்.. இரண்டாவது வாரமாக சென்னை மாநகராட்சி துப்புறவு பணியாளர்கள் சென்னையில் குப்பை அகற்றும் பணியை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்கிறார்கள். ‘தனியார் மயமானால் தற்போது கிடைத்துக் கொண்டிருக்கும் குறைந்த பட்சக் கூலியையும் குறைத்து விடுவார்கள். ஒப்பந்த ஊழியர்களுக்கு வேலை பாதுகாப்பு பறிபோய் விடும்’ என தவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு துணையாக 120 பேர் கொண்ட போலீஸ் படை.. கண்காணிக்க சில யூட்யூப் உள்பட ஆறேழு சேனல் டீம்
ஏற்கெனவே போக்குவரத்துதுறையிலும் இது தான் நிலை எனபதையே மறந்து விட்டதும் பெரும் துயர்.தமிழக பேருந்து ஓட்டுநர்களில் பெரும்பாலானோர் உப்புக்கு சப்பாணி ஊதியத்திற்கு தினக் கூலியாக பல்லாண்டு பணியாற்றி வரும் நிலை உள்ளது. தினசரி பேருந்து சேவை மக்களுக்கு அவசியம் தானே. ஏன் அவர்களை நிரந்தரப்படுத்தி கண்ணியமான ஊதியம் தர முடியவில்லை?ஒயுவு பெற்ற ஊழியர்கள் தாங்கள் சேமிப்பு பணத்தை பெறுவதே சவாலாக உள்ளது. தற்போது போக்குவரத்து துறையையும் தனியார்மயமாக்கி வருகிறது திராவிட மாடல் அரசு.
கூடவே மாநில வரலாற்றை புரட்டுப் போடும் பள்ளிக் கல்வித் துறையில் பல்லாண்டுகள் பணியாற்றும் ஆசிரியர்களை வெறும் ரூ 12,500 தொகுப்பூதிய சம்பளத்திற்கும், உயர் கல்வித் துறையில் பேராசிரியர்களுக்கு மாதந்தோறும் தொகுப்பூதியமாக 25,000 ரூபாய் தருவதும், அரசு ஐடிஐகளில் பயிற்றுனர்களை ரூ 28,000 தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்வதுமாக ஓப்பேற்றிக் கொண்டிருப்பதும் உங்கள் நினைவில் தங்கவில்லை
இதை எல்லாம் தாண்டி கருணாநிதி அவர்களுக்கு மிகவும் ப்ரியமான மருத்துவத்துறையில் மருத்துவர்களையே தினக் கூலிகளாக்கி ரூ 2,000 ஊதியம் தரப்படுகிறது. செவிலியர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக டெக்னிஷியன்கள், பன்நோக்கு மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர் அனைத்து தரைப்பையுமே அத்துக் கூலி முறையில், முறையே மாத ஊதியமாக 18,000, 15,000, 13,000, 8,500 ஆகிய ஊதியத்தில் ஆண்டுக் கணக்கில் சுரண்டிக் கொழுப்பது முறையா? இதற்காகவே நிரந்தரப் பணியிடங்களை சரண்டர் செய்து, ஒப்பந்தக் கூலி முறைக்காக அரசாணை (அரசாணை எண் 300) பிறப்பிக்க வழி கோலியது முறையா?
செல்போனில் முடங்கிவிட்ட ஒரு குடும்பத்தின் அடிப்படை தேவைகள் பூர்த்தியாவதற்கும், கண்ணியமாக வாழ்வதற்கும் குறைந்தபட்சம் ரூ 35,000 தேவைப்படுகிறது. இதை அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்குக் கூட உத்திரவாதப்படுத்தாமல் வெறுமே, ‘சமூக நீதி’ என்று பேசிக் கொண்டிருப்பதெல்லாம் அடுக்குமா முத்துவேல் கருணாதி ஸ்டாலின் அவர்களே..!
நீங்கள் 2021இல் கொடுத்த தேர்தல் வாக்குறுதிப்படி என் ஜி ஓக்கள், சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், நூலகர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், NHM ஊழியர்கள், ஆதிதிராவிட நலத்துறை துப்புரவு பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் மற்றும் புற ஆதார ஊழியர்கள் ஆகியோர் எவருக்கும் நீங்கள் சொன்னதை செய்யவில்லை என்பதை நீங்களே மறந்தது போல் நடித்து 2026 மட்டுமல்ல.. 2031 மற்றும் 2036லும் திமுக ஆட்சி என்று கற்பனை காணும் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. உடனடியாக நீங்கள் பார்க்க மறந்தது மன நல மருத்துவர் என்பதை முரசொலி வாசகனாக சுட்டிக்காட்ட கடமைப் பட்டுள்ளேன்..!
இதற்கு மேல் அந்த துர்கா அம்மா கடாட்சம்..வேறென்ன சொல்ல!😨


