32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 103 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 103)
தமிழ்நாடு ஆளுநர் உரையில் குழப்படிகள்! Exclusive

தமிழ்நாடு ஆளுநர் உரையில் குழப்படிகள்!

ஆளுநர் ரவிக்கும் தமிழ் நாட்டு அரசுக்கும் இடையில் நடந்து வந்த பனிப்போர் நேற்று முழுமையான போராக மாறி இருக்கிறது. நேற்று சட்ட மன்றத்தில் நடக்கவிருந்த உரைக்காக தமிழ் நாட்டு அரசு தயாரித்துக் கொடுத்திருந்த கன்டன்ட்டை முழுவதும் படிக்காமல் அதில் இருந்து சில பகுதிகளை ஆளுநர் தவிர்த்திருந்திருக்கிறார். ‘பெரியார், அண்ணா, அம்பேத்கர், கலைஞர், போன்றோர் வழிகாட்டுதலில் திராவிட மாடலைப் பின்பற்றும் அரசு,’ என்ற பத்தியை விட்டு விட்டிருக்கிறார். ‘தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து அந்நிய முதலீடுகளைக் குவித்து, அனைத்து […]

January 10, 2023 admin
அதிமுக – பாஜகவின் கூட்டணி சாத்தியமா? சாபமா?  இப்போதுள்ள உள்ள பிரச்சினைகள் என்ன? Exclusive

அதிமுக – பாஜகவின் கூட்டணி சாத்தியமா? சாபமா? இப்போதுள்ள உள்ள பிரச்சினைகள் என்ன?

அதிமுக-பாஜக கூட்டணி தொடர்வதை முற்றிலும் விரும்பாத கட்சி திமுக. அதை எப்பாடு பட்டாவது தடுப்பது என்று பல வகைகளில் முயற்சிக்கிறது. அதற்காக பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் என்று பல சிக்னல்களை திமுக கொடுத்தும் பாஜக அதற்கு தயாரில்லை. மருமகன் சபரீசன் பல முறை அமித்ஷாவை சந்திக்க முயற்சி செய்து இயலவில்லை. அதன் பின்னர் ஸ்டாலின் மோடியை சந்திக்க எடுத்த முயற்சிகள் பொய்த்தது. அடுத்து நிர்மலா சீதாராமனை சந்திக்க அண்ணாமலைக்கு எதிரான அணிகள் காய் நகர்த்தியதன் மூலம் அது […]

January 8, 2023 admin
தமிழ்நாடா.. தமிழகமா ? Exclusive

தமிழ்நாடா.. தமிழகமா ?

ஒவ்வொரு மாநிலப் பெயரும் எவ்வாறு வந்திருக்கிறது என்று பார்ப்போம். முதலில் கேரளத்தை எடுத்துக்கொள்வோம். மூவேந்தர்களான சேர சோழ பாண்டியரில் சேரன் முதலாமவன். சேரனின் ஆட்சிக்குட்பட்ட நாடு சேர நாடு. சேரன் என்னும் சொல் சேரல் என்பதிலிருந்து வந்தது. சேரமன்னர்களின் பெயர்களில் சேரன் என்றிருக்காது. சேரல் என்றிருக்கும். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (சேரல் + ஆதன்), பெருஞ்சேரல் இரும்பொறை, கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்று சேர மன்னர்களின் பெயர்கள் இருக்கின்றன. சேரல்கள் ஆண்ட நாடு சேரலம். இந்தச் சேரலம் என்ற சொல்லே […]

January 6, 2023 admin
இந்த நாட்டு மக்கள் குறித்த கடுகளவு அக்கறை கூட இல்லாதவர்தான் மோடி! Exclusive

இந்த நாட்டு மக்கள் குறித்த கடுகளவு அக்கறை கூட இல்லாதவர்தான் மோடி!

பண நீக்க நடவடிக்கை நியமானதா, சட்டபூர்வமானதா என்று பதியப்பட்ட பல்வேறு வழக்குகளில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. ஐந்து நீதிபதிகள் குழுவில் நான்கு பேர் இது சட்டபூர்வமானதுதான் என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள். ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இணைந்து கலந்தாலோசித்துதான் இந்த நடவடிக்கை வந்திருக்கிறது, என்று சொல்லி இருக்கிறார்கள். பழைய கரன்சி நோட்டுகளை பரிமாற்றம் செய்வதற்கு விதிக்கப்பட்ட வரம்புமே கூட சரிதான் என்று தீர்ப்பு கூறுகிறது. ஒரே ஒரு நீதிபதி மட்டும் மெஜாரிடி கருத்தில் இருந்து […]

January 3, 2023 admin
சீன கைக்கூலிகள் ஜாக்கிரதை! Exclusive

சீன கைக்கூலிகள் ஜாக்கிரதை!

கொரானாவை விட மோசமான அர்பன் நக்ஸல்கள், கம்யூனிஸ்ட் கைக்கூலி தலைவர்கள்! இங்கே இது சாதாரண தொண்டனை பற்தியது அல்ல, ஆனால் இந்த தலைவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்! 📌 சீனாவில் மீண்டும் கொரானா பரவலால் எல்லை மீறிப்போனது நிலை. அதில் இறந்தவர்களை கொரானா கணக்கில் வராமல் செய்வதற்காக அதை மறைக்கும் பொருட்டும் அதன் Parameters மாற்றி இருக்கிறது கம்யூனிஸ்ட் கபோதிகள். இதன் மூலம் 2020 ல் நடந்தது போல உண்மையான இறப்புகளை மறைக்க இது உதவும். ஆம ஆயிரக்கணக்கில் […]

December 24, 2022 admin
செறிவூட்டப்பட்ட அரிசி..!  – கொஞ்சம் விளக்கம்! Exclusive

செறிவூட்டப்பட்ட அரிசி..! – கொஞ்சம் விளக்கம்!

இந்தியாவில் ஊட்டசத்துக் குறைப்பாட்டை ஒழிப்பதற்காக ரேஷன் கடைகளிலும் மதிய உணவுத் திட்டங்களிலும் 2024ம் ஆண்டுமுதல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்படும் என்று தனது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். பல மாநிலங்களில் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. உணவு பொது விநியோகம் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சகம், இதுபோன்ற செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதலுக்கான விதிகளை சமீபத்தில் அறிவித்தது. பொது விநியோகத்துக்காகக் கொள்முதல் செய்யப்படும் அரிசியில் 1% செறிவூட்டப்பட்ட அரிசியாக இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. […]

December 23, 2022 admin
எம்பாப்பே எனும் எரிமலை! Exclusive

எம்பாப்பே எனும் எரிமலை!

மெஸ்ஸி,நெய்மர்,ரொனால்டோ,மோட்ரிச் போன்ற சமகால ஜாம்பவான்களுக்கு மத்தியில் கால்பந்து உலகம் உரக்க உச்சரிக்கும் ஒரு பெயர் கிலியன் எம்பாப்பே. பிரான்ஸ் நட்சத்திர வீரராக கடந்த 4 வருடங்களில் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கிறார் எம்பாப்பே.23 வயதே ஆன ஒரு இளைஞன் எதிரணி வீரர்களிடமிருந்து பந்தை லாவகமாக தட்டிச் சென்று கோல் வலைக்குள் தள்ளுவதில் கில்லாடி இவர். ஆட்டம் முடிய பத்தோ,பதினைந்தோ நிமிடங்கள்.எல்லாம் முடிந்து விட்டது விட்டது என நினைத்த நேரத்தில் சில நிமிட இடைவெளியில் பேக் டூ பேக் […]

December 19, 2022 admin
பீகார் கள்ளச் சாராய சாவுகள் – முதல்வர் நிதிஷ் குமாரின் அலட்சியம் சரியல்ல! Exclusive

பீகார் கள்ளச் சாராய சாவுகள் – முதல்வர் நிதிஷ் குமாரின் அலட்சியம் சரியல்ல!

பீகாரில் இன்னொரு கள்ள சாராய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. சரண் எனும் மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்து சாவுகள் நடந்திருக்கின்றன. அரசுத் தரப்பில் 30 பேர் என்று சொல்கிறார்கள். சம்பந்தப்பட்ட கிராமத்து மக்கள் 56 பேர் என்று கணக்கு சொல்கிறார்கள். பலருக்கு கண்ணும் போயிருக்கிறது. இறந்தவர் குடும்பங்களுக்கு 10 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று பாஜக போராட்டம் துவங்கி இருக்கிறது. நியாயமான கோரிக்கை. ஆனால் எந்த நஷ்ட ஈடும் கொடுக்கப்பட மாட்டாது என்று முதல்வர் […]

December 17, 2022 admin
செயற்கை கருப்பை தொழிற்சாலையே வந்தாச்சு! Exclusive

செயற்கை கருப்பை தொழிற்சாலையே வந்தாச்சு!

தாய்மை என்பதை ரொம்ப ஓவராக பில்டப் கொடுத்து அதை வைத்தே பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறோம் என்று பல முறை எழுதி இருக்கிறேன். தெற்காசியா போன்ற நாடுகளில் திருமணம் ஆனதும் பாதி பெண்கள் செய்து கொண்டிருந்த வேலையை விட நேருகிறது. இன்னுமொரு பாதி கர்ப்பமானதும் துறக்கிறார்கள். கலவியில் ஈடுபட்டாலே கர்ப்பமாகி விடும் என்ற தொல்லையே நவீன காலத்துக்கு முன்பு வரை பெண்களை கட்டுக்குள் வைத்திருக்கப் போதுமானதாக இருந்தது. இப்போது கருத்தடை சாதனங்கள் பரவலாக வந்து அந்தப் பிரச்சினை பெருமளவு […]

December 15, 2022 admin
மேடம் மேயர் அவர்களே.. இது ஆபத்தான விளையாட்டு! Exclusive

மேடம் மேயர் அவர்களே.. இது ஆபத்தான விளையாட்டு!

சென்னை மேயரும் மாநகராட்சி கமிஷனரும் ஒரு காரின் footboardடில் பயணித்தது சர்ச்சையாகி இருக்கிறது. அதற்கு ஆர் கெ நகர் எம்எல்ஏ ஒரு காரணமும் சொல்லி இருக்கிறார். முதல்வர் அவசர அவசரமாக போக வேண்டி இருந்தது. இவர்களுடைய கார் வேறெங்கோ டிராஃபிக்கில் மாட்டிக் கொண்டு விட்டது. எனவே அவசர அவசரமாக முதல்வருடன் கூடப் போகவே அப்படி வேறொரு ஓடும் காரின் footboardடில் ஏற வேண்டி இருந்தது என்று சொல்கிறார். திமுக விமர்சகர்கள் அந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். […]

December 12, 2022 admin
உடனடி செய்திகள்