32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 102 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 102)
இணையில்லாத இறையன்பு! காகிதப் படகில் சாகசப் பயணம்! Exclusive

இணையில்லாத இறையன்பு! காகிதப் படகில் சாகசப் பயணம்!

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு. “உங்களுக்கு எதிர்காலத்தில் யார் மாதிரி ஆக ஆசை?” என்று ஐஏஎஸ் அகாடமி ஒன்றில் பயிற்சிக்கு வந்திருந்த முருகன் என்கிற இளைஞரிடம் கேட்டேன். “இறையன்பு சார் மாதிரி ஆகணும்…” இதைச் சொல்லும்போது, அவர் விழிகள் மகிழ்ச்சியில் விரிந்தன. தொடர்ந்து அவர், “ஐஏஎஸ் அதிகாரி என்கிற ஸ்தானத்தை மதிப்புக்குரியதாக்கியவர். அவர்தான் என் ரோல் மாடல்… எனக்கு மட்டுமல்ல… என் நண்பர்களுக்கும் அவர்தான்…’ என்றார் நெகிழ்ச்சியுடன். ஆம். முன்னேறத் துடிக்கும் பல்வேறு இளைஞர்களின் கனவு […]

February 7, 2023 admin
அதா,,,நீ எனும் பலூன் உடைந்து விட்டது! Exclusive

அதா,,,நீ எனும் பலூன் உடைந்து விட்டது!

இரண்டுநாட்களாக பேஸ்புக்கில் என்னுடைய பதிவுகளின் விசிபிலிட்டி குறைக்கப்பட்டிருக்கிறது. காரணம் எளிதானது என்னுடைய சமீபத்திய பதிவுகள் ஒன்றிய அரசுக்கும் அதன் முதலாளி நண்பர்களுக்கும் எதிரான விமர்சனங்களை கொண்டிருந்தது. விசிபிலிட்டிதான் சமூக வலை தளங்களின் புதிய ஆயுதம் என்று சில நாட்களுக்கு முன்பே பதிவிட்டிருந்தேன். யார் காசு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு தோதான விஷயங்கள்தான் இனி டைம்லைனில் வரும். ஆளும் பீஜேபீ அதைத்தான் செய்கிறது. வெறும் சமூக வலைத்தளங்களில் மாத்திரமல்ல. இந்தியா முழுக்கவே இன்று செய்திகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. என்ன மாதிரி செய்திகள் […]

February 2, 2023 admin
‘ஹின்டன்பர்க் அறிக்கை ஒரு நிறுவனத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல! Running News

‘ஹின்டன்பர்க் அறிக்கை ஒரு நிறுவனத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல!

ஹின்டன்பர்க் அறிக்கைக்கு எதிராக அதானி குழுமம் பதில் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். ஹின்டன்பர்க் தங்களது அறிக்கை தயாரிக்க இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டார்கள் என்பதை வைத்து பாஜக அபிமானிகள் பலர் நக்கல் அடித்திருந்தார்கள். ‘அதானி ஆபீஸ் டீ, பக்கோடா செலவை கணக்கிடவே ரெண்டு வருஷம் போதாதே?’ என்று ஒருவர் கலாய்த்திருந்தார். ஆனால் 412 பக்கங்கள் கொண்ட தங்கள் பதில் அறிக்கையை அதானி குழுமம் மூன்று நாட்களில் தயாரித்து இருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதானி finance […]

January 30, 2023 admin
அ..தானி :  என்ன செய்யப் போகிறது செபி? என்ன செய்யப் போகிறது மோடி அரசு? Exclusive

அ..தானி : என்ன செய்யப் போகிறது செபி? என்ன செய்யப் போகிறது மோடி அரசு?

சந்தேகங்கள், யூகங்களின் அடிப்படையில் சில ஆண்டுகளாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும், ஆம் அவை உண்மைகளே என்று தெளிவாக்கி இருக்கிறது ஹின்டன்பர்க் நிறுவனத்தின் 109 பக்க இரண்டாண்டு புலனாய்வு அறிக்கை. அதானி குழும பங்குகளின் மதிப்பும், அதன் அடிப்படையில் அமைந்த சொத்துக்களின் மதிப்பும், பன்மடங்கு ஊதிப் பெருக்கப்பட்டவை என்று ஐயம் திரிபற நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆவணங்கள் பேசுகின்றன. கையாண்ட தில்லுமுல்லு வழிமுறைகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. பங்குச் சந்தையில் லிஸ்ட் ஆகி இருக்கும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் அதன் நிறுவனர் (குடும்பமும் […]

January 29, 2023 admin
சல்மான் ருஷ்டி புது  புத்தகமான. Victory City,வெற்றி நகரம்’ என்ற பெயருடைய புதிய நாவல் வரப் போகுது! Exclusive

சல்மான் ருஷ்டி புது புத்தகமான. Victory City,வெற்றி நகரம்’ என்ற பெயருடைய புதிய நாவல் வரப் போகுது!

முஸ்லிம்களால் முன்னெடுக்கப்பட்ட உலகளாவிய கலவரங்களினால் உந்தப்பட்டு, இஸ்லாமிய மதவெறியன் ஒருவனால் கொடூரமான கொலை முயற்சிக்கு உள்ளான சல்மான் ருஷ்டி மீண்டு வந்திருக்கிறார். ஒரு கண் மற்றும் ஒரு கையின் செயல்பாடுகள் இழந்தாலும் சிந்தனையிலும் உத்வேகத்திலும் மாற்றம் இல்லை என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த உலக மதமும் வாழ்வியல் ஒழுக்கங்கள் எதையும் கற்றுக் கொடுப்பதில்லை. கொடூர வன்முறையையும், சகிப்பின்மையையும், ஒடுக்குமுறைகளையும் மட்டுமே கற்றுக் கொடுக்கின்றன, என்பதற்கு வாழும் உதாரணமாக சல்மான் ருஷ்டியின் அந்தக் கண்ணும் கையும் திகழப் போகிறது. மதத்துக்கு […]

January 26, 2023 admin
இந்த ரசிகர்களை நினைத்தால்தான் கவலை! Exclusive

இந்த ரசிகர்களை நினைத்தால்தான் கவலை!

கமலுக்காக சனி, ஞாயிறுகளில் விடாமலும்.. மற்ற நாட்களில் அவ்வப்போதும் பிக் பாஸ் பார்த்துவந்தேன். எத்தனைச் சீண்டிப் பார்த்தாலும், கோபப்படுத்தினாலும் பொறுமையைக் கடைப்பிடித்து கண்ணியத்தை பேச்சிலும், செயலிலும் காட்டி, அறம் வெல்லும் என்று முழங்கியவர் வெல்லவில்லை! வரம்பு மீறாத, ரசிக்கும் குறும்புகளுடன், ஆரோக்கியமாக வாதங்களை வைத்த, அவர் திருநங்கை அல்ல.. பெண்தான் என்று எல்லோரின் மனங்களிலும் இயல்பாக ஏற்கவைத்த பிரதிநிதிப் பெண்மணியும் வெல்லவில்லை. வாரா வாரம் சக போட்டியாளர்கள், கமல் மற்றும் பார்வையாளர்களிடம் கண்டனங்களைப் பெறுவதும், உணர்ந்துவிட்டதாக உருகி சனி, […]

January 23, 2023 admin
பன்னாட்டுத் தொழில் நுட்ப நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கை – ஒரு பார்வை! Exclusive

பன்னாட்டுத் தொழில் நுட்ப நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கை – ஒரு பார்வை!

பன்னாட்டுத் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யும் செய்திகளைப் பகிர்ந்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். இதில் குறிப்பாக என்னை ஆச்சரியப்படுத்தியது இது கேபிட்டலிசத்தின் தோல்வி என்று செய்யப்படும் பரப்புரைகள். இதை செய்வது சோஷலிச, கம்யூனிச ஆதரவாளர்கள். அவற்றைப் பார்க்கும் போது ‘நான் எட்டாவது பாஸ்ண்ணே. நீங்க எஸ்எஸ்எல்சி ஃபெயில்,’ என்ற ஜோக்தான் நினைவுக்கு வருகிறது. அமெரிக்காவின் பொருளாதார தேக்கத்துக்கு அந்த நாட்டு மத்திய அரசின் நிதி மேலாண்மைக் கொள்கைகள்தான் காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.[1] ஆனால் […]

January 23, 2023 admin
இலங்கையை அடுத்து திவாலாகும் பாகிஸ்தான்! Exclusive

இலங்கையை அடுத்து திவாலாகும் பாகிஸ்தான்!

பாகிஸ்தானின் Foriegn $ ரிசர்வ் இருமாதங்களுக்கு கூட போதுமானதாக இல்லை. அதன் ரூபாய் மதிப்பு 80லிருந்து வீழ்ந்து 202 ஆக வீழ்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், கரண்ட் இல்லை, பங்குகள் அடித்து நொறுக்கப்படுவதால் இழுத்து மூடப்படுகிறது. அதனால் நாட்டின் உற்பத்தி திறன் வேகமாக குறைகிறது. கரண்ட் இல்லாததால் தெரு விளக்குகள் எரிவதில்லை. அதன் தாக்கம் கேஸ்கேடிங் எஃப்க்ட் ஆக ஒன்றன் பின் ஒன்றாக மூடுகிறார்கள். அதனால் வேலை வாய்ப்புகள் இல்லை. விலைவாசிகள் உச்சத்தை தொடுகிறது. நெய், எண்ணெய் 500 […]

January 21, 2023 admin
மாடுபிடி வீரர் மரணமும் ; உணர்ச்சிப் பிழம்புகளும்..! Exclusive

மாடுபிடி வீரர் மரணமும் ; உணர்ச்சிப் பிழம்புகளும்..!

ஏகப்பட்ட கடும் தடைகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பொங்கல் தோறும் பல ஊர்களில் நடைபெற்று வருகிறது ஜல்லிக்கட்டு. தமிழர்களின் வீரம், பாரம்பரிய விளையாட்டு என்ற வழக்கமான விஷயங்களையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு தற்போதைய பிரச்சனைக்குள் நுழைவோம். மாடுபிடி வீரர் மரணம் அடைந்ததும் உடனே வழக்கம் போல ஒரு தரப்பு, வீரவணக்கம் என்று மரியாதை செலுத்துகிறது. இன்னொரு தரப்பு, உயிரைப் போக்கும் இந்த அபாயகரமான விளையாட்டு தேவையா என்று கேட்கிறது. ஆயிரம் இருந்தாலும் உயிரை பலி கொடுத்தவரின் குடும்பத்தின் வலி மற்றவர்களுக்கு […]

January 17, 2023 admin
சினிமா ரசிகர்கள் காவடி குறித்து ஓவர் சலம்பல்! Exclusive

சினிமா ரசிகர்கள் காவடி குறித்து ஓவர் சலம்பல்!

காலை முதல் ரசிகர்களிடையே அஜித்-விஜய் போட்டி நடந்து வருகிறது. அது எதிர்பார்த்ததுதான். அதை விட அதிகம் எதிர்பார்த்தது அந்த ரசிகர்கள் குறித்த ரசிகர்களல்லாதவர்களின் விமர்சனம். ‘இவங்கள்லாம் உருப்படுவாங்களா?’, ‘இவங்க பெற்றோரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது’, ‘நாடு எங்கே போகிறது!’ என்றெல்லாம் பல்வேறு விதமான அங்கலாய்ப்புகள். ஒரு ரசிகர் ஒரு வண்டியில் இருந்து விழுந்து அடிபட்டு இறந்ததில் ‘அந்தப் பையனுக்கு நல்லா வேணும்!’ என்று சாபங்கள். என்னை குறிப்பாக ஆச்சரியப்படுத்தியது ஒரு நடிகரின் ரசிகர் அலகு குத்திக் கொண்டு […]

January 13, 2023 admin
உடனடி செய்திகள்