சுல்தான் – விமர்சனம்
ஏனுங்க ஆந்தையாரே.. சுல்தான் படம் பார்த்தாச்சா? எப்படி இருக்குது..?
ஆங், பார்த்தாச்சு.. கார்த்தி -யை நேர்லே பார்த்து ரொம்ப நல்லா மெனக்கீட்டிருக்கீங்க-ன்னு சொல்லிட்டும் வந்தாச்சு
அது ரொம்ப முக்கியமா? படம் எப்படி?
ஆர்டிஸ்டிகளுக்கு பவுன்சரா இருந்த 50 டூ 60 பேரை ஆர்டிஸ்டா ஆக்கி இருக்காய்ங்க
அது.. சரிப்பா.. படம் எப்படி?
நீ அவனா, இவனா அல்லது எவனா வேணா-னுலும் ஆகிக்கோ.. ஆனா ஒரு விவசாயிதான் ரொம்ப முக்கியமுன்னு சொல்றாங்க
ஓஹோ..கார்த்தி ஐடி மேனா இருந்து விவசாயி ஆகற கதையா?
பொறவென்னா.. கல்வி-ன்னா சூர்யா.. விவசாய-முன்னா கார்த்தி-ன்னு புதுசா சொல்லணுமா?
அது போகட்டும் படம் எப்படிப்பா?
எம் ஜி ஆர் நடிச்ச பல்லாண்டு வாழ்க படத்தை இந்த காலத்துக்கு தகுந்த மாதிரி எடுத்து பொழுதை போக்க உதவி இருக்காய்ங்க..இது போதாதா?
கதை ரொம்ப சிம்பிள் .. நூறு ரவுடிகளால் வளர்க்கப்படும் நாயகன் ரோபோடிக் ஸ்டூடண்ட் விக்ரம் என்ற சுல்தான் அந்த ரவுடிகளை விவசாயிகளாக மாற்றுவதுதான் ஸ்டோரி.. ‘கைதி’ சூப்பர் ஹிட்-டுக்கு பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியாகியிருக்கும் இப்படமே கார்த்தி-க்காக உருவான கதை தெளிவாக புரிந்து மிகவும் இன்வால்வ் செய்து பாசம், அதிரடி, காமெடி, டான்ஸ், லவ் என் எல்லா தளத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக தன் அப்பாவைச் சுற்றி இருப்பது ரவுடிகள் என்று தெரியும் போதும், அடிதடியை முழுக்க வெறுக்கும் கார்த்தி, ஒரு கட்டத்தில் அதிரடியாக சண்டைப் போட்டும் திரையரங்கையே அதிர வைக்கிறார்.
தெலுங்கில் படு பிசியான நாயகி ராஷ்மிகா-க்கு இதுதான் முதல் நேரடி தமிழ் படம், கிராமத்து பெண்ணாக வருகிறார். வழக்கமான ஹீரோயின் ரோல் என்றாலும், கியூட்.
கார்த்தியின் தந்தையாக வரும் நெப்போலியனும், இவருக்கு நண்பராக வரும் லாலும் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். யோகி பாபுவும், சென்ராயனும் இருந்தும் சிரிப்பெல்லம் வரவில்லை என்பது வழக்கமாகி விட்டது.
யுவனின் பின்னணி இசை குறிப்பாக சண்டைக் காட்சிகளில் தன் மீதான் கவனத்தை முழுசாக பெறுகிறார். ஆனால் விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். சத்யன் சூரியனின் கேமரா வாவ் சொல்ல வைக்கிறது..
இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன், இயக்கி இருக்கும் இந்த சுல்தானில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருந்தாலும், சகல ரோல்களையும் அட்டகாசமாக கையாண்டுள்ளார். கதைக்களம் பக்கா கமர்ஷியல் என்றாலும் அதிலும் அன்பு, மண், விவசாயம் என்பதையெல்லாம் சொல்லி இருப்பதுதான் பெரும் பலம்
மொத்தத்தில் சுல்தான் – நல்லதொரு டைம்பாஸ் மூவி
மார்க் 3/5