32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 95 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 95)
சென்னை விமான நிலையத்திற்கு, சர்வதேச அளவில் எட்டாவது இடம்! Exclusive

சென்னை விமான நிலையத்திற்கு, சர்வதேச அளவில் எட்டாவது இடம்!

நம் நாட்டில் சரியான நேரத்திற்கு விமானங்கள் புறப்படுவதை உறுதி செய்வதில், சென்னை விமான நிலையத்திற்கு, சர்வதேச அளவில் எட்டாவது இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவிலேயே சென்னை விமான நிலையம் மட்டுமே இடம்பிடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தது. விமானத் துறை, விமானங்கள், விமான நிலையங்கள் குறித்த ஆய்வுகள், கட்டுரைகள், அதிகளவிலான தரவுகளை, லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ‘சிரியம்’ என்ற நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிறுவனம், 2021ல் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களின் குறித்த […]

March 13, 2022 admin
மதுரைச் சித்திரை விழாவில் எல்லோரும் கலந்துக்கலாம்! Exclusive

மதுரைச் சித்திரை விழாவில் எல்லோரும் கலந்துக்கலாம்!

மதுரை சித்திரை திருவிழா, ஏப்ரல் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவில் ஏப்ரல் 16-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம், திருக்கல்யாணம், திக்விஜயம் உள்ளிட்ட விழாக்கள் பக்தர்கள் அனுமதி இல்லாமல் நடைபெற்றது. மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்நிலையில் […]

March 10, 2022 admin
நான் சரவணபவன் ராஜகோபாலுக்கு சின்ன வீடு என்று சொல்வதா? – தடா ரஹீம் மீது போலீசில் ஜீவஜோதி புகார்! Exclusive

நான் சரவணபவன் ராஜகோபாலுக்கு சின்ன வீடு என்று சொல்வதா? – தடா ரஹீம் மீது போலீசில் ஜீவஜோதி புகார்!

உயர்தர சைவ உணவகத் தொழிலில் கொடிகட்டி பறந்த ராஜகோபால் & கோஷ்டியால் கொலை செய்யப்பட்ட தனது கணவர் சாந்தகுமார் வழக்கு குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்பிய தடா ரஹீம் மற்றும் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜீவஜோதி புகார் அளித்துள்ளார். தென்னிந்திய உணவின் சுவையை உலகம் முழுக்கக் கொண்டு சேர்த்தவர் ராஜகோபால். அப்படிப்பட்டவர் தன் வயதில் பாதியே இருந்த ஜீவஜோதியின் மீது ஆசைப்பட்டதும் அவரை அடைய […]

March 9, 2022 admin
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்! Exclusive

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்!

30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதந்தோறும் முதல் வாரத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது சுப்ரீம் கோர்ட்.! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்பட 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் தற்போது பரோலில் இருக்கிறார். உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசும், […]

March 9, 2022 admin
தமிழக பட்ஜெட்: மார்ச் 18ஆம் தேதி தாக்கல்-சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு! Exclusive

தமிழக பட்ஜெட்: மார்ச் 18ஆம் தேதி தாக்கல்-சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

2022 – 2023 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட உள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் நடத்துவது குறித்த கூட்டம் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஏற்கனவே நடைபெற்றது. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். பட்ஜெட் குறித்த […]

March 9, 2022 admin
பபாசி கும்பல் நடத்திய புத்தக.. ஸாரி குத்தக கண்காட்சியின் சோகங்கள்! Exclusive

பபாசி கும்பல் நடத்திய புத்தக.. ஸாரி குத்தக கண்காட்சியின் சோகங்கள்!

சென்னையில் நடைபெற்றுவந்த புத்தக கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. புத்தக கண்காட்சிக்கு 15 லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளன. ஆனால் பலருக்கும் இக்கண்காட்சி துன்பியல் அனுவபத்தையே கொடுத்துள்ளது. நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே கழிவறை சரியில்லை என்று ஓங்கி ஒலித்தக் குரலைக் கூட கேட்க நாதியற்றோரால் சீர் செய்ய முடிய வில்லை என்ற சோகத்தை பலரும் பகிர்ந்துள்ளார்கள் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக […]

March 7, 2022 admin
டாஸ்மாக் சரக்குகள் திடீர் விலை உயர்வு! – எந்த பிராண்டுக்கு எவ்வளவு அதிகரிப்பு? – முழு விபரம்! Exclusive

டாஸ்மாக் சரக்குகள் திடீர் விலை உயர்வு! – எந்த பிராண்டுக்கு எவ்வளவு அதிகரிப்பு? – முழு விபரம்!

தமிழகத்தில் அண்மையில் ஆவினில் தயிர் உள்ளிட்டவை விலை அதிகரித்தையே இன்னும் மக்கள் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் சூழலில் இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்களில் விலை ரூ. 10 முதல் ரூ. 80 வரை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு இன்று முதலே அமலுக்கு வந்ததால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் மதுபானங்கள் சில்லறையாகவும் மொத்தமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொதுவாக பகல் 12 மணி முதல் இரவு […]

March 7, 2022 admin
எங்க வழி தனி வழி – பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி- வீடியோ Exclusive

எங்க வழி தனி வழி – பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி- வீடியோ

தனியார் தொலைக்காட்சி ஒன்று  சென்னையில் நடத்திய கருத்தரங்கில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்துக்கொண்டு சிறப்புறையாற்றினார். அப்போது அவர் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. ஒரு கருத்தரங்கில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஒன்றிய அரசு கொண்டுவரும் ஒரே நாடு என்ற கருத்தாக்கத்தை பொருளாதார ரீதியில் ஏற்க முடியாது. கூட்டாட்சி தத்துவத்தை அனுசரித்து செயல்பட்டால்தான் நாடு வளர்ச்சி காணும். அதேவேளையில், பிற மாநிலங்களை விட தமிழகம் பெரும்பாலான துறைகளில் […]

March 6, 2022 admin
ஓபிஎஸ்-ன் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம்! Exclusive

ஓபிஎஸ்-ன் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம்!

கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாக கூறி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தேனி மாவட்ட ஆவின் தலைவரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரருமான ஓ.ராஜாவை கட்சியிலிருந்து நீக்கி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “கட்சியின் கொள்ளை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி […]

March 5, 2022 admin
கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள்- மதுரை நீதிமன்றம் அறிவிப்பு Exclusive

கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள்- மதுரை நீதிமன்றம் அறிவிப்பு

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என்று மதுரை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் 8ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். இவர் நாமக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்தார். கடந்த 2015-ம் ஆண்டு கல்லூரிக்கு சென்ற கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த […]

March 5, 2022 admin
உடனடி செய்திகள்