பபாசி கும்பல் நடத்திய புத்தக.. ஸாரி குத்தக கண்காட்சியின் சோகங்கள்!

பபாசி கும்பல் நடத்திய புத்தக.. ஸாரி குத்தக கண்காட்சியின் சோகங்கள்!

சென்னையில் நடைபெற்றுவந்த புத்தக கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. புத்தக கண்காட்சிக்கு 15 லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளன. ஆனால் பலருக்கும் இக்கண்காட்சி துன்பியல் அனுவபத்தையே கொடுத்துள்ளது. நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே கழிவறை சரியில்லை என்று ஓங்கி ஒலித்தக் குரலைக் கூட கேட்க நாதியற்றோரால் சீர் செய்ய முடிய வில்லை என்ற சோகத்தை பலரும் பகிர்ந்துள்ளார்கள்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் ‘பபாசி’யின் 45-வது புத்தக கண்காட்சி, கடந்த ஜனவரி 6-ந் தேதி தொடங்கப்படுவதாக இருந்தது. பின்னர் கொரோனா சூழல் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து பெருந்தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தினந்தோறும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை வாசகர்கள் கண்காட்சிக்கு வருகை தந்தனர். இதுதவிர ஒவ்வொரு நாளும் எழுத்தாளர்களின் சிறப்புரை, பட்டிமன்றம், சிறந்த நூல்களுக்கு விருது வழங்குதல் என சிறப்பு நிகழ்ச்சிகளும் அரங்கேறி வந்தன. இதில் தமிழ் அறிஞர்கள் பலரும் பங்கேற்றனர். கடந்த 19 நாட்களாக நடந்து வந்த புத்தக கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது.

நிறைவு விழா, கண்காட்சி வளாகத்தில் உள்ள விழா அரங்கில் நேற்று மாலை நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மகாதேவன் கலந்துகொண்டார். ‘பபாசி’ தலைவர் எஸ்.வயிரவன், செயலாளர் எஸ்.கே.முருகன், பொருளாளர் குமரன், துணைத்தலைவர் சுப்ரமணியன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

25 ஆண்டுகள் பதிப்பு துறையில் பணியாற்றியவர்கள், புத்தக கண்காட்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர். மேலும் புத்தக கண்காட்சியின்போது நடந்த ஓவியம், பேச்சு, திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ- – மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

நிறைவு நாளான நேற்று புத்தக கண்காட்சியில் வாசகர்கள் எண்ணிக்கை மிகுதியாகவே இருந்தது. விடுமுறை நாள் என்பதால் குடும்பம் குடும்பமாக வாசகர்கள் திரண்டனர். இதனால் அனைத்து அரங்குகளிலும் பெரும் கூட்டம் காணப்பட்டது.

இந்த ஆண்டு, சிறுகதைகள், வரலாற்று நூல்கள், புதினங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், வாழ்க்கைத் தத்துவங்கள் போன்ற வகை புத்தகங்கள் அதிகளவு விற்பனை ஆகின. சென்னை புத்தக கண்காட்சியில் 800-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. புத்தக கண்காட்சிக்கு 15 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாகவும், ரூ.15 கோடி அளவில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றும் பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கண்காட்சி நடந்த நாட்களில் பொதுமக்களுக்குத் தேவையான அறிவிப்புகளை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஜென்சி என்ற திருநங்கை ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து வந்தார். கண்காட்சியின் நிறைவில் அவருக்கும் ‘பபாசி’ நிர்வாகிகள், பதிப்பாளர்கள், வாசகர்கள் நன்றி தெரிவித்தனர்.

இச்சூழலில் தமிழகத்தில் பிரபலமான பாக்கெட் நாவல் அசோகன் தன் புத்தகக் கண்காட்சி அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்த சேதி இதோ:

குத்தக கண்காட்சி

எனக்கு புத்தக கண்காட்சிக்கு போக விருப்பமே இல்லை…

காரணம் பல, நாம போயி அவைகளைப் பற்றி எழுத வேண்டிவரும் இது நமக்கு தேவையா என தோன்றும், அதனால் நான் போவதில்லை, என் நண்பன் முன்பு திருச்சியில் இருந்தான், புத்தக கண்காட்சிக்கு வர ஆசைப்படுவான் பணிநிமித்தத்தால் வரயியலாது, இந்த வருடம் அவனுக்கு சென்னைக்கு மாற்றலாகி வந்துவிட்டான், அவனும் கண்காட்சிக்கு போகலாமா என கேட்டான் என்பதால் ஞாயிறு கண்காட்சிக்கு போய்வர முடிவு செய்து நான்கு மணிக்கு கண்காட்சியில் சந்திக்க முடிவு செய்து, நான் சென்றுவிட்டேன்.. ஆனால் என் நண்பன்அவன் வராமல் வாட்ஸ்அப்பில் தகவல் வந்தது. தவிர்க்க இயலாது வரயியலவில்லை என. அடச்சே.. வந்துதான் தொலைத்து விட்டோம் என உள்ளே சென்றேன்.

கண்காட்சி நடந்த நாட்களில் மூன்று சனி ஞாயிறு தான் காப்பாற்றியதாம். கடைசி நாள் அதுவும் ஞாயிறு கூட்டம் அலைமோதியது ஆனால் விற்பனை மந்தம் தான் அதையும் மீறி விற்பனையிலும் வில்லங்கம் வந்தது ஆன்லைன் வரவு செலவில். ஆம் அங்கு இனைய தள இணைப்பு சரியில்லை, கிரிடிட் கார்டு மற்றும் கூகுல்பேவால் வாங்க முடியாமல் பாதி விற்பனை போய்விட்டது, அதையிம் மீறி பப்பாஸி அலுவலகத்தில் கார்டுகளை தேய்த்தால் 3% சதவிகிதம் கூடுதல் சேவை கட்டணமாம், பப்பாஸி என்பது அந்த பதிப்பாளர்களின் சங்கம் அங்கு சரியான இனைய வசதி ஏற்பாடு செய்ய வேண்டிய அவர்கள் தண்டவரி வேறு. பப்பாசி பதிப்பாளர்களின் சங்கம், பதிப்பகம் எழுத்தாளர்களை நம்பியும் எழுத்தாளர்கள் பதிப்பாளர்களை நம்பியும் இருக்கு ஆனா இங்க எழுத்தாளர்களுக்கு தனி அங்கிகாரமும் அரவணைப்பும் கிடையாது.

எழுத்தாளர்களையும் பதிப்பகத்தார்களையும் வாழ வைப்பது அந்த வாசகன். அங்கு புத்தகம் வாங்குபவர்களை ஊக்குவிக்க எந்த கண்காணிப்பும் இல்லை. அதிக புத்தகங்கள் வாங்கும் வாசகனை கவுரவம் படுத்த வேண்டாமா. ஒரு புத்தகம் எழுதிய எழுத்தாளரும் ஆயிரம் புத்தகம் எழுதியவரும் எழுத்தாளர் தான். பப்பாசியில் உறுப்பினர்களாக உள்ள பதிப்பகங்களில் வெளியிடப்படும் புத்தகங்களில் எழுதும் எழுத்தாளர்களுக்கு ஒரு அடையாள அட்டை தரவேண்டும், அதைக் காட்டி அவர் டிக்கட் வாங்காமல் உள்ளே வர வேண்டும். அந்த அடையாள அட்டை வைத்திருக்கும் எழுத்தாளர்களுக்கு தனி இடம் ஒதுக்கி அங்கு அவர்கள் வந்து இயற்கை உபாதைகள் மற்றும் தேனீர் உபசரிப்பு வேண்டும். ஜன ரஞ்சன எழுத்தாளர்களான பட்டுக்கோட்டை பிரபாகர், இந்துமதி, சிவசங்கரி, ராஜேஷ்குமார், சுபா, ரமணி சந்திரன்,இந்திரா சௌந்தர்ராஜன், ஆர்னிகாநாசர், தேவிபாலா இதுபோல் பலர் உள்ளார்கள் அவர்களை அழைத்து கௌரவப்படுத்தலாமே. பாலகுமாரன் சுஜாதா போன்ற சாதனை எழுத்தாளர்கள் காலமானார் அந்த வருடம் அவர்களை நினைவு கூறலாமே.

மன்னிக்கவும் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். எதுவும் தப்பா இருந்த தப்பா எடுத்துக்க வேண்டாம். சரி சரி அது இருக்கட்டும் நீங்க என்ன புத்தகங்கள் வாங்கினீர்கள் என கேட்பது புரிகிறது. கோதை பதிப்பகத்தில் நான் ராஜாமகள் என்கிற தேன்மொழியின் ஸ்டாலில் இருந்த வீ. குணசுந்தரி என்னை அடையாளம் கண்டு அழைத்தார் சென்றேன், நான் ராஜாமகளையும் குணசுந்தரியுடன் பேசும் போது குணசுந்தரி எழுதிய குட்டி என்கிற விநாயகமூர்த்தி என்ற நாவலை வாங்கி வந்தேன், அதை உடனே படித்தேன் என் கண்கள் கலங்கி விட்டது இத்தனை சோதனைகள் இருந்தும் இந்த சகோதரியால் எப்படி சிரிக்க முடிகிறது.

ஊசிக்குறிப்பு :

குணசுந்தரியின் புத்தகத்தை படித்த கலங்கிய கண்களோடு கண்காட்சியை விட்டு வெளியே வந்தேன் வானமும் கண்கலங்குவது போல் தூவானம் போட்டது

ரெங்கராஜன்

error: Content is protected !!