32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 94 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 94)
வன்னியர்களுக்கான உள்இடஒதுக்கீடு செல்லாது என ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு செல்லும் – சுப்ரீம் கோர்ட் அதிரடி! Exclusive

வன்னியர்களுக்கான உள்இடஒதுக்கீடு செல்லாது என ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு செல்லும் – சுப்ரீம் கோர்ட் அதிரடி!

கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு சட்டத்தை இயற்றி அரசாணை வெளியிட்டது. அதாவது தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் சீர்மரபினருக்கு மொத்தமாக 20 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, இதில் வன்னியர் சமூகத்தினருக்கு மட்டும் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசு சட்டம் இயற்றியது. […]

March 31, 2022 admin
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு முழு விபரம்! Exclusive

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு முழு விபரம்!

வரும் ஏப்ரல் 6–ந்தேதி முதல் மே 10–ந்தேதி வரை தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தமிழக சட்டசபை கடந்த மார்ச் 18–ந்தேதி கூடியது. அன்றைய தினம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022–2023 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 19–ந்தேதி வேளாண் பட்ஜெட்டை அத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் 3 நாட்கள் நடைபெற்றது. 24–ந்தேதியுடன் முதல் அமர்வு நிறைவு பெற்றதையடுத்து, தமிழக […]

March 30, 2022 admin
அமைச்சர் ராஜ கண்ணப்பன் இலாகா மாற்றம்:  இதுதான் காரணம்?! Exclusive

அமைச்சர் ராஜ கண்ணப்பன் இலாகா மாற்றம்: இதுதான் காரணம்?!

அடுத்தடுத்து ஏதேதோ சர்ச்சைகளில் சிக்கி அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் ராஜகண்ணப்பன். அரசு பேருந்துகள் சைவ உணவகங்களில் மட்டுமே நிற்க வேண்டும் என சர்ச்சையான அறிக்கையை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார், அதன்பின்னர் எழுந்த எதிர்ப்பால் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். மேலும் பதவி உயர்வு வாங்கி தருவதாக சிலரிடம் லஞ்சம் வாங்கியதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. முன்னதாக திருமாவுக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என்றும் சேதி பரவியது நினைவிருக்கலாம். இப்படி தொடர்ந்து இவர் மீது எழுந்து வந்த புகாரால் […]

March 29, 2022 admin
இருவண்ணக் கரை வேட்டிதான் எப்போதும் கெத்து.!-முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! Exclusive

இருவண்ணக் கரை வேட்டிதான் எப்போதும் கெத்து.!-முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

“துபாய் சென்றதிலிருந்து பன்னாட்டு நிகழ்வுகள் பலவற்றில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால் கோட் – சூட் உடை அணிந்து சென்று வந்தேன். தமிழ்ச் சொந்தங்களை சந்திக்கும் நிகழ்வு என்றதுமே வழக்கம்போல வேட்டி – சட்டை அணிந்து சென்றேன். என்னை அந்த உடையில் பார்த்ததுமே, முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்கள், “இதுதாங்க சார் ரொம்ப நல்லா இருக்கு” என்றார். உண்மைதானே! கோட் – சூட் அணிந்தால் வெளிப்படும் கௌரவம், கெத்து இவற்றைவிட, வெள்ளை சட்டையும், இருவண்ணக் கரை வேட்டியும்தான் எப்போதும் […]

March 27, 2022 admin
மத்திய அரசு ஊழியர்களின் பொது வேலை நிறுத்தம் : தமிழக அரசு எச்சரிக்கை! Exclusive

மத்திய அரசு ஊழியர்களின் பொது வேலை நிறுத்தம் : தமிழக அரசு எச்சரிக்கை!

மத்திய அரசு ஊழியர்கள் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 28, 29ந் தேதிகளில் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.. இந்த நிலையில், வரும் 28, 29 தேதிகளில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிடில் ஊதியம் பிடித்த செய்யப்படும் என்று அனைத்து துறை செயலாளர்களுக்கும் தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் நேற்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொது செயலாளர் எம்.துரைபாண்டியன் நிருபர்களுக்குப் பேட்டி […]

March 25, 2022 admin
விஜய்சேதுபதி மூலம் ஒரு லட்சம் குடும்பத்துக்கு வேலை வாய்ப்பு! Exclusive

விஜய்சேதுபதி மூலம் ஒரு லட்சம் குடும்பத்துக்கு வேலை வாய்ப்பு!

தற்செயல்களால் ஆனது நம் இம்மானுட வாழ்வு. அப்படிப்பட்ட தற்செயல்களில், நம் மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை பொற்செயலாய் மாற்றும் இயல்பு கொண்ட மனிதர்கள் கோடியில் ஒருவர்தான். என்னது பீடிகை பெருசா இருக்கே என்று தோன்றலாம். சமூகத்துக்கு நல்ல காரியங்கள் செய்பவர்களில் பெரும்பாலானோர் விளம்பரத்தை விரும்பாதவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்களது தன்னடக்கத்தை புறம்தள்ளி, அச்செயலை வெளிக்கொண்டு வந்தால்தால்தான், அதை முன்னுதாரணமாகக் கொண்டு இன்னும் சிலர் வயலில் இறங்குவார்கள் என்பதற்காகவே இச்செய்தி. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளாலாரின் ஒற்றை வரியை […]

March 23, 2022 admin
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2022-23: முக்கிய அம்சங்கள்! Exclusive

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2022-23: முக்கிய அம்சங்கள்!

தமிழக சட்டமன்றத்தில் 202-23 நிதியாண்டுக்கான வேளாண் தனி பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்னிக்கு தாக்கல் செய்தார். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக தாக்கல் செய்யும் வேளாண் துறைக்கான பிரத்யேக பட்ஜெட் இது. இதன் சிறப்பம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம். 🌾தமிழ்நாட்டில் மண் வளம் குறித்து அறிந்து கொள்வதற்காக ‘தமிழ் மண் வளம்’ என்ற தனி இணைய முகப்பு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்படும். […]

March 19, 2022 admin
தமிழ்நாடு பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் சொன்னக் கருத்துகள் இதோ! Exclusive

தமிழ்நாடு பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் சொன்னக் கருத்துகள் இதோ!

தமிழ்நாடு பட்ஜெட் குறித்து இங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். வழக்கம் போல் திமுக கூட்டணி கட்சிகள் பட்ஜெட்டை வரவேற்றும் எதிர்க்கட்சிகள் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாகவும் கூறி உள்ளனர். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அதைத்தொடர்ந்து, தமிழகத்தின் 2022-23ம் நிதியாண்டுக்கான காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இதுவாகும். இன்று தாக்கல் […]

March 18, 2022 admin
நம்ம சென்னையில் நடக்கப் போகுது -செஸ் ஒலிம்பியாட் 2022 Exclusive

நம்ம சென்னையில் நடக்கப் போகுது -செஸ் ஒலிம்பியாட் 2022

FIDE பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி முதன்முறையாக இந்தியாவில், சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு இதோ:- ”FIDE செஸ் ஒலிம்பியாட் 2022 சர்வதேச சதுரங்க போட்டியை சென்னையில் நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்பதை அகில இந்திய செஸ் கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. நடந்துகொண்டிருக்கும் போர் சூழ்நிலை காரணமாக FIDE செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை ரஷ்யாவிலிருந்து […]

March 16, 2022 admin
திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்!- கோலாகலம்- வீடியோ Exclusive

திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்!- கோலாகலம்- வீடியோ

உலக பிரசித்திப் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். திருவாரூரில் தியாகராஜர் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். சைவ தலங்களில் பழமை வாய்ந்த இக்கோவில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த தலமாகும். சைவ மரபில் பெரிய கோவில் என அழைக்கப்படும் இக்கோவிலுக்கு சொந்தமான தேரை ஆழித்தேர் என அழைக்கின்றனர். ஆசியாவிலேயே மிகவும் பழமையான இந்த […]

March 15, 2022 admin
உடனடி செய்திகள்