எங்க வழி தனி வழி – பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி- வீடியோ

எங்க வழி தனி வழி – பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி- வீடியோ

னியார் தொலைக்காட்சி ஒன்று  சென்னையில் நடத்திய கருத்தரங்கில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்துக்கொண்டு சிறப்புறையாற்றினார். அப்போது அவர் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

ஒரு கருத்தரங்கில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஒன்றிய அரசு கொண்டுவரும் ஒரே நாடு என்ற கருத்தாக்கத்தை பொருளாதார ரீதியில் ஏற்க முடியாது. கூட்டாட்சி தத்துவத்தை அனுசரித்து செயல்பட்டால்தான் நாடு வளர்ச்சி காணும். அதேவேளையில், பிற மாநிலங்களை விட தமிழகம் பெரும்பாலான துறைகளில் சிறந்து விளங்குகிறது. ஆனால், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்று தெரிவித்தார்.

பின்னர், கடந்த 10 ஆண்டுகள் தமிழ்நாட்டின் வளர்ச்சி அதாவது தனி நபர் வருவாய் இறங்கு முகத்தில் இருக்கே ஏன்? தமிழ்நாட்டோட GDP ரேங்க்கிங் குறைஞ்சிட்டு வருது என்ன காரணம் என நெறியாளர் கேள்விக்கு பதில் அளித்து பேசிய பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், வளர்ச்சிக்கான வரையறையா எதை சொல்லுவிங்க?

தமிழ்நாட்டின் தனிநபர் வருவாய் குஜராத்தை விட 10ல் இருந்து 15 ஆயிரம் குறைவுதான். நிதி மேலாண்மையில் குஜராத் சிறப்பாக செயல்படுகிறது. மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளில் 100% பள்ளிக்கு செல்கிறார்கள். பள்ளிக்கு போகாத 15 வயதிற்குட்பட்ட பெண்களே தமிழ்நாட்டில் இல்லை. அதேவேளையில், குஜராத்தில் 15 முதல் 20% பெண்கள் பள்ளிக்கூடம் போவதில்லை. இது எந்த மாதிரி வளர்ச்சி ?

அதுமட்டுமல்லாது, தமிழ்நாட்டில் ஆயிரம் பேருக்கு நான்கு மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதே குஜராத்தில் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் தான் இருக்கிறார். இதில் எந்த சமூக நிலையை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்? GDP மட்டுமே வளர்ச்சியை நிர்ணயிக்காது. நாங்கள் எங்களுக்கென தனி வழி வைத்திருக்கிறோம், அது எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்கும். அதற்கு பெயர் திராவிட மாடல் எனத் தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த பேச்சு, தமிழ்நாடு மட்டுமல்லாமல் வட மாநில மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Posts