32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 93 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 93)
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் விவரம் -முழு விபரம்! Exclusive

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் விவரம் -முழு விபரம்!

சென்னை பெருநகர மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கும் ரூ.70 கோடி மாமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இன்று தாக்கல் செய்யப்பட்ட மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் விவரம் வருமாறு:– பெருநகர சென்னை மாநகராட்சியில்‌ உள்ள அனைத்து சாலைகளும்‌, பொது மக்கள்‌ அனைவரும்‌ சிரமமின்றி தங்களது வாகனங்களில்‌ பயணிக்க ஏதுவாக சீரமைக்கப்பட்டு வருகிறது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்‌ கீழ்‌ 39.87 கி.மீ நீளமுடைய 59 சாலைகள்‌ ரூ.37.58 கோடி மதிப்பீட்டில்‌ மேம்படுத்தும்‌ பணிகள்‌ நடைபெற்று […]

April 9, 2022 admin
வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5 சதவீதத்தை உறுதி செய்ய வேண்டும்!- முதல்வரிடம் அன்புமணி கோரிக்கை! Exclusive

வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5 சதவீதத்தை உறுதி செய்ய வேண்டும்!- முதல்வரிடம் அன்புமணி கோரிக்கை!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அன்புமணி ராமதாஸ், வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5 சதவீதத்தை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் மாநில அரசு வன்னியர்களுக்கு 10.5 % உள் ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை, அதற்குத் தேவையான தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாநில அரசுக்கு அதிகாரம் உள்ள நிலையில், 10.5 % உள் ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு நிச்சயம் வழங்கும் என்று […]

April 8, 2022 admin
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் – ஐகோர்ட் Exclusive

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் – ஐகோர்ட்

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. ‘நீட்’ தேர்வு காரணமாக, தனியார் பயிற்சி நிறுவனங்களில் லட்சக்கணக்கில் பணம் செலவளித்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மட்டுமே, மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஏழை மாணவர்களும் ஊரகப் பகுதி மாணவர்களும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே, பெரும் தொகை செலவளித்து தனியார் […]

April 7, 2022 admin
சொத்துவரி உயர்வால் மாநிலம் வளர்ச்சி அடைகிறது – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்! Exclusive

சொத்துவரி உயர்வால் மாநிலம் வளர்ச்சி அடைகிறது – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

“சொத்து வரி உயர்வை மனமுவந்து செய்யவில்லை. உள்ளாட்சி அமைப்புகள் வருவாய் பற்றாக்குறையில் இருக்கும் நிலையில் அதைச் சமாளிக்க சொத்து வரி உயர்வு தேவை. ஏழை எளிய, நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எதிர்க்கட்சிகளும், தோழமைக் கட்சிகளும் துணை நிற்க வேண்டும். மாநில வளர்ச்சியில் எந்தவித அரசியலும் செய்ய வேண்டாம்” என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை […]

April 6, 2022 admin
டாஸ்மாக் பார்களை மூடணுமுன்னு சொன்னது செல்லாது – ஐகோர்ட் ஆர்டர்! Exclusive

டாஸ்மாக் பார்களை மூடணுமுன்னு சொன்னது செல்லாது – ஐகோர்ட் ஆர்டர்!

தமிழ்நாட்டிலுள்ள டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்களில் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் இடைகால தடை விதித்துள்ளது. தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 7 ஆயிரத்திற்கும் கூடுதலான மதுக்கடைகளும், 4500-க்கும் அதிகமான பார்களும் இருந்தன. ஆனால் அசில பல சர்ச்சைகள் காரணமாக 5,402 மதுக்கடைகள், 2,808 பார்களாக குறைந்தன. அவற்றிலும் இப்போது 5,387 மதுக்கடைகளும், 2,168 பார்களும் தான் செயல்பட்டு வருகின்றன. இச்சூழலில் டாஸ்மாக் பார் டெண்டர் புதிய விதிகளை எதிர்த்து […]

April 5, 2022 admin
முதல்வர் முன்னிலையில் சமத்துவபுர நுழைவு வாயிலை திறந்து வைத்த பெண்மணி – வீடியோ! Exclusive

முதல்வர் முன்னிலையில் சமத்துவபுர நுழைவு வாயிலை திறந்து வைத்த பெண்மணி – வீடியோ!

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள பெரியகொழுவாரி கிராமத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தின் நுழைவு வாயிலை பெண்மணி ஒருவர் திறந்துவைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியால் அந்த பெண் நெகிழ்ந்து போனார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு, தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சி அமைத்ததும், அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பல்வேறு முற்போக்கு வளர்ச்சி திட்டத்தை மீண்டும் தொடங்குவோம் என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரியில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2022ஆம் ஆண்டுக்கான […]

April 5, 2022 admin
தமிழக கவர்னர் ரவியை திரும்பப் பெறக்கோரி கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் – திமுக அதிரடி. Exclusive

தமிழக கவர்னர் ரவியை திரும்பப் பெறக்கோரி கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் – திமுக அதிரடி.

தமிழக கவர்னர்ர் ஆர்.என். ரவியை திரும்பப் பெறக்கோரி நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொண்டு வந்தது.மக்களவை சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசை திமுக எம்.பி.டி.ஆர். பாலு தாக்கல் செய்தார். தமிழக மாணவர்களை காவு வாங்கி வரும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைத்தது தமிழக அரசு. ஆனால், இந்த மசோதாவை […]

April 4, 2022 admin
ரமலான் @ ரம்ஜான் நோன்பு துவங்கியது! Exclusive

ரமலான் @ ரம்ஜான் நோன்பு துவங்கியது!

இஸ்லாம் என்னும் மார்க்கம் தனது சகாக்களுக்கு ஐந்து பெரும் கடமைகளை போதிக்கிறது. அவை முறையே இறை நம்பிக்கை (கலிமா), இறை வழிபாடு (தொழுகை), தான தர்மங்கள் செய்தல் (ஜாகத்), ரமலான் நோன்பு மற்றும் புனித பயணம் (ஹஜ்). மற்ற இஸ்லாமிய மாதங்களை விட இந்த ரமலான் மாதம் சிறப்பு பெற்ற இறைஅருள் மாதம் ஆகிறது. இந்த ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள். தற்சமயம் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய தோழர்கள் மார்க்கத்தின் […]

April 3, 2022 admin
போக்சோ வழக்குகளை கையாளுவது எப்படி? : காவலர்களுக்கு 9 நாட்கள் பயிற்சி வகுப்பு !! Exclusive

போக்சோ வழக்குகளை கையாளுவது எப்படி? : காவலர்களுக்கு 9 நாட்கள் பயிற்சி வகுப்பு !!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது இச்சூழலில் சென்னையிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களையும் உள்ளடக்கி காவலர்களுக்கு போக்சோ வழக்குகளை மேலும் திறம்பட கையாளும் வகையில் 9 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மகளிர் காவல் நிலையங்களில் போக்சோ சட்டப்பிரிவுகளில் பதிவு […]

April 2, 2022 admin
கள்ளழகர் எதிர்சேவையில் அடிக்கப்படும் தண்ணீரால் சாமி சிலை சேதாரம்! Exclusive

கள்ளழகர் எதிர்சேவையில் அடிக்கப்படும் தண்ணீரால் சாமி சிலை சேதாரம்!

மதுரை அழகர்கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பிரசிதிபெற்ற கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 14-ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில் சிகர நிகழ்வாக மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிப்பதற்காக வருகை தரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வு ஏப்ரல்-16ஆம் தேதி அதிகாலை காலை 5.50 மணிக்கு மேல் 6.20க்குள் நடைபெறவுள்ளது இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கோவில் துணை ஆணையர் அனிதா பேசுகையில் : திருவிழா 14 ம் […]

April 2, 2022 admin
உடனடி செய்திகள்