32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 97 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 97)
ரேஷன் கடைகளில் விரல்ரேகை சரிபார்க்கும் நடைமுறையில் இடையூறுகள்!- அரசு முக்கிய அறிவிப்பு! Exclusive

ரேஷன் கடைகளில் விரல்ரேகை சரிபார்க்கும் நடைமுறையில் இடையூறுகள்!- அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்திலுள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசியப் பண்டங்கள் தரமாக விநியோகவும், நியாயவிலைக் கடைகளுக்கான விடுமுறை நாளை ரத்து செய்யப்பட்டுக் கடைகள் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நியாயவிலைக் கடைகள் வாயிலாகக் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கும்போது கைவிரல் ரேகை சரிபார்ப்பு முறை பின்பற்றப்படுகிறது. ஆதார் இணையத் தரவுத் தளம் வேலை செய்யவில்லை என்றும், இதனால் விரல் ரேகை சரிபார்ப்பு […]

February 25, 2022 admin
இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு குவியும் வாழ்த்துகள்! Exclusive

இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு குவியும் வாழ்த்துகள்!

உலக சதுரங்க சாம்பியனை தோற்கடித்த பிரக்ஞானந்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் சதுரங்க[ போட்டி இணையம் வழியாக நடைபெற்று வருகிறது. இதில் 16 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன் 8-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான 16 வயதான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலின் […]

February 23, 2022 admin
திமுக பிரமுகரை தாக்கிய விவகாரம் : ஜெயகுமார் கைதாகி சிறையில் அடைப்பு! Exclusive

திமுக பிரமுகரை தாக்கிய விவகாரம் : ஜெயகுமார் கைதாகி சிறையில் அடைப்பு!

கள்ள வாக்கு போட்டதாகக் கூறி திமுக பிரமுகர் பிடித்து வைத்து தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள 49ஆவது வார்டில், கடந்த சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவரை பிடித்து அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில், நரேஷின் சட்டையை சில அதிமுகவினர் கழற்றினர். பின்னர் […]

February 22, 2022 admin
வாக்களிக்க வந்த பெண்ணிடம் ஹிஜாப் உடை சர்ச்சையைக் கிளப்பிய பாஜக் முகவர்! – வீடியோ Exclusive

வாக்களிக்க வந்த பெண்ணிடம் ஹிஜாப் உடை சர்ச்சையைக் கிளப்பிய பாஜக் முகவர்! – வீடியோ

வாக்களிக்க வந்த பெண்ணிடம் ஹிஜாப் உடை சர்ச்சையைக் கிளப்பி காவல் துறையால் கைது செய்யப்பட்ட பாஜக முகவர் கிரிநந்தனை , மார்ச் 4 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எட்டாவது வார்டு வாக்கு பதிவு மையத்தில் ஹிஜாப் உடை அணிந்து வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாப் உடையை அகற்ற கூறிய விவகாரத்தில் மேலூர் காவல் துறையால் கைது […]

February 19, 2022 admin
டி.என்.பி.சி குரூப்-2 தேர்வு வரும் மே 21ம் தேதி நடைபெறும் – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ) அறிவிப்பு. Exclusive

டி.என்.பி.சி குரூப்-2 தேர்வு வரும் மே 21ம் தேதி நடைபெறும் – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ) அறிவிப்பு.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் போட்டி தேர்வுகள் ,நேர்காணல் தேர்வுகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் உள்ளன. இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் […]

February 18, 2022 admin
உள்ளாட்சித் தேர்தல் _ ஓய்ந்தது பரப்புரை! சனிக்கிழமை வாக்குப் பதிவு! Exclusive

உள்ளாட்சித் தேர்தல் _ ஓய்ந்தது பரப்புரை! சனிக்கிழமை வாக்குப் பதிவு!

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் தமிழகத்தில் வரும் சனிக்கிழமையன்று நடக்க இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது. இந்நிலையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 26ஆம் தேதி வெளியானது. மனுத்தாக்கல் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 4ஆம் தேதி வரை மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 5இல் வேட்புமனுக்கள் […]

February 17, 2022 admin
சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் 6 பேரை நீதிபதிகளாக்க சுப்ரீம் கோர்ட் பரிந்துரை! Exclusive

சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் 6 பேரை நீதிபதிகளாக்க சுப்ரீம் கோர்ட் பரிந்துரை!

சென்னை ஐகோர்ட்டின் ஆறு வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க, இந்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மும்பை ஐகோர்ட்டின் 10 வழக்கறிஞர்கள் மற்றும் சென்னை ஐகோர்ட்டின் 6 வழக்கறிஞர்கள் என மொத்தம் 16 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “2022 பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில், […]

February 17, 2022 admin
சென்னை புத்தகக் கண்காட்சியில்  ‘நான் எழுதிய உங்களில் ஒருவன்’!- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! Exclusive

சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘நான் எழுதிய உங்களில் ஒருவன்’!- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் 45-வது புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்தப் புத்தகக் காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் புத்தகக் காட்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் ஜனவரி 6ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெறுவதாக இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக அனைத்து விதமான கண்காட்சி மற்றும் பொருட்காட்சிக்குத் […]

February 16, 2022 admin
சாப்பாட்டுக்கு வழியில்லை: முதலைகள் சென்னையில் இருந்து குஜராத் பேக் அப்! Exclusive

சாப்பாட்டுக்கு வழியில்லை: முதலைகள் சென்னையில் இருந்து குஜராத் பேக் அப்!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை முதலைப் பண்ணையிலிருந்து 1000 முதலைகள், குஜராத்திலுள்ள ரிலையன்ஸ் முதலைப் பண்ணைக்கு எடுத்துச் செல்லும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையை அடுத்த மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வடநெம்மேலியில் உள்ள முதலைப் பண்ணையில், 17 வகைகளை சேர்ந்த சுமார் 2,000 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆசியா கண்டத்திலேயே அதிக முதலைகள் பராமரிக்கப்படும் பண்ணையாக இந்த முதலைப் பண்ணை திகழ்ந்து வருகிறது. இங்கே பராமரிக்கப்படும் பெரும்பாலான முதலைகள் சதுப்புநில முதலைகள் ஆகும். இத்தகைய பெருமை […]

February 14, 2022 admin
தஞ்சை மாணவி வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை : சுப்ரீம் கோர்ட் உத்தரவு! Exclusive

தஞ்சை மாணவி வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை : சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் தமிழ்நாட்டில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவியின் மரணத்துக்கு மதமாற்றம்தான் காரணம் என்று பாரதீய ஜனதா சர்ச்சை கிளப்பிய நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை ஐகோர்ட்டின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சார்பில் சுப்ரீம் […]

February 14, 2022 admin
உடனடி செய்திகள்