32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 23 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 23)
போகி பண்டிகையின் நோக்கம் என்ன தெரியுமோ? Exclusive

போகி பண்டிகையின் நோக்கம் என்ன தெரியுமோ?

தமிழ்நாட்டு உள்ளிட்ட தென்னிந்தியாவில் அறுவடை திருநாளாக கொண்டாடப்படும், பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படும். இதன் துவக்க நாளாக கொண்டாடப்படுவதே போகி பண்டிகையாகும். அதாவது மார்கழி மாதத்தின் நிறைவு நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படும். *”பழையன கழிதலும்…புதியன புகுதலும்” என்பதே போகி பண்டிகையின் நோக்கமாகும். இந்த நாளில் வீட்டில் உள்ள தேவையற்ற பழைய பொருட்களை எரித்து கொண்டாடுவார்கள். மேலும் இந்த தினத்தில் பழைய பொருட்களோடு நம் மனதில் உள்ள தீய எண்ணங்களையும் சேர்த்து (Pongal […]

January 13, 2025 admin
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வெற்றி எழுதி வைக்கப்பட்டு விட்டது!- சந்திரகுமார்! Exclusive

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வெற்றி எழுதி வைக்கப்பட்டு விட்டது!- சந்திரகுமார்!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ மறைவை அடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதியும் நடைபெற உள்ளது.திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக, தேமுதிக அறிவித்துள்ளன. பொங்கல் நாளில் வேட்பாளரை அறிவிப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பொது வேட்பாளரை நிறுத்தலாமா என்று ஆலோசித்து வந்த பாஜகவும் இத்தேர்தலை புறக்கணிப்பதாக தற்போது அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநில […]

January 13, 2025 admin
நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழந்தது! Exclusive

நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழந்தது!

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்த பெற்ற, நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் பழமை வாய்ந்தது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் சுவாமி அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது. இக்கோயில் விழாக்கள், தேரோட்டம் போன்ற நிகழ்வுகளில் சுவாமிக்கு முன் செல்லும் காந்திமதி என்ற பெயர் கொண்ட யானை   உயிரிழந்து விட்டது. நெல்லையப்பர் கோயிலில் உள்ள யானை காந்திமதி (56), நன்கொடையாளர்களால் 1985ல் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டது. வயது மூப்பு காரணமாக காந்திமதி உடல் எடை அதிகரிப்பு, மூட்டு வலி போன்றவற்றால் […]

January 12, 2025 admin
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்ட முன்வடிவுகள்-முதல்வர் அறிமுகம்! Exclusive

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்ட முன்வடிவுகள்-முதல்வர் அறிமுகம்!

அண்மையில் அண்ணா யுனிவர்சிட்டியில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டது. அதே சமயம் இந்த சம்பவத்தில் குற்றவாளியான ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந் நிலையில் தமிழக சட்டச்சபையில் அதிமுக கருப்பு சட்டை அணிந்தும், யார் அந்த சார் என்ற கேள்வி எழுப்பியும் வருகின்றனர். இச்சூழலில் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் 2025ம் […]

January 10, 2025 admin
முட்டுக்காடு படகு குழாமில் மிதவை உணவக கப்பல் வந்தாச்சு! Exclusive

முட்டுக்காடு படகு குழாமில் மிதவை உணவக கப்பல் வந்தாச்சு!

செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் புதுமையான அனுபவத்தை அளிக்க தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் மிதவை படகு உணவகத்தை பொது மக்களின் பயன்பாட்டுக்காக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ஆர். ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.இம்மிதவை படகு உணவகம் 3,000 சதுர அடி பரப்பளவுடன் இரண்டு அடுக்குகள் கொண்ட 100 நபர்கள் அமர்ந்து உணவருந்தும் வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கருத்தரங்குகள், அலுவலக கூட்டங்கள். பிறந்தநாள் கொண்டாட்டங்கள், கேளிக்கை விருந்துகள் போன்ற […]

January 9, 2025 admin
தமிழ் நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! Exclusive

தமிழ் நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில்,தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்! அப்போது அவர் கூறியதாவது. இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,36,12,950 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,11,74,027: பெண் வாக்காளர்கள் 3,24,29,803 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 9,120 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 27-சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 6,90,958 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் […]

January 7, 2025 admin
சட்டசபைக்கு கவர்னர் வந்தார், சென்றார்! – ஏன்? முழு விபரம்! Exclusive

சட்டசபைக்கு கவர்னர் வந்தார், சென்றார்! – ஏன்? முழு விபரம்!

தமிழ்நாடு சட்டசபையில் உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இது குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்ட விளக்கத்தில், “அரசமைப்புக்கும், தேசிய கீதத்துக்கும் அப்பட்டமான அவமரியாதை செய்பவர்களுடன் துணை நிற்கக்கூடாது என்பதால் கவர்னர் வருத்தத்துடன் அவையில் இருந்து வெளியேறினார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அமைச்சர் சிவசங்கர்,”தமிழக சட்டசபையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடுவதுதான் மரபு. தேசிய கீதத்தை அவமதிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு எப்போதும் இருந்தது இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட தான் பெரியவர் […]

January 6, 2025 admin
குடிநீரில் கழிவு நீர்: கேன் வாட்டர் மாப்பியாக்கள் உத்தியா? Exclusive

குடிநீரில் கழிவு நீர்: கேன் வாட்டர் மாப்பியாக்கள் உத்தியா?

சென்னையில் தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் 45 இடங்களில் கடந்த ஆண்டே நடத்தப்பட்ட சோதனையில், 25 இடங்களில் நிலத்தடி நீரில் குரோமியம், காட்மியம், லெட், நிக்கல் போன்ற உடலுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய கன உலோக கனிமங்கள் அளவுக்கு அதிகமாகக் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. அதிர்ச்சியான செய்தி என்னவென்றால், “மக்கள் பலர் அந்தத் தண்ணீரைத்தான் குடிக்கிறார்கள். இப்படித் தொடர்ந்து குடித்தால், எலும்புச் சிதைவு, சிறுநீரகக் கற்கள், நரம்பு மண்டல பாதிப்பு, புற்றுநோய், அலர்ஜி, தலைவலி, ஜீரணக் கோளாறு போன்ற நோய்கள் […]

January 5, 2025 admin
கனிமொழி கருணாநிதிக்கு ஹேப்பி பர்த் டே💐 Exclusive

கனிமொழி கருணாநிதிக்கு ஹேப்பி பர்த் டே💐

🦉திமுக துணைப் பொதுச் செயலாளரும், நம் ஆந்தை குழு நண்பரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான மக்கள் தலைவி கனிமொழி கருணாநிதிக்கு ஹேப்பி பர்த் டே💐 திராவிடப் புதல்வி என அழைக்கப்படும் கனிமொழி கருணாநிதி .திராவிட இயக்கத்தின் பின்புலத்தில் இருந்து வந்த கனிமொழி தன் தந்தை கருணாநிதியைப் போல, எழுதுவதிலும் வாசிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.இலக்கியம் மற்றும் பத்திரிகை துறையிலும் ஆர்வம் கொண்டு பிறகு தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பாக இந்தியாவில் ‘தி இந்து’ஆங்கில பத்திரிக்கையிலும் , சிங்கப்பூரில் […]

January 5, 2025 admin
மெட்ராஸ் போட் கிளப் நடத்தும் சவாலான படகுப் போட்டி! Exclusive

மெட்ராஸ் போட் கிளப் நடத்தும் சவாலான படகுப் போட்டி!

சென்னையில் இம்மாதம் 7ந் தேதி முதல் 11ந் தேதி வரை ஆசிய நாடுகளுக்கிடையேயான படகுப் போட்டிகள் நடைபெறுகிறது. முதல் நாள் 6ந் தேதி காலை 4.30 மணிக்கு விழா துவங்குகிறது. இந்தியாவின் 2வது பழமையான ரோயிங் கிளப்பான (மெட்ராஸ் போட் கிளப்பின்) 81 வது பதிப்பு இது.பல பிரிவுகளில் நடத்தப்படும் இந்தப்படகு போட்டிகள் மிக சவாலானவை. பங்கேற்கும் குழுவினர், 2-3 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும் இந்தப் போட்டிகளுக்கு மிக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். பல விதமான […]

January 4, 2025 admin
உடனடி செய்திகள்