32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 21 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 21)
நாகை டூ இலங்கை கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்! Exclusive

நாகை டூ இலங்கை கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்!

தமிழ்நாட்டிலுள்ள நாகை – இலங்கையின் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து, நாளை (பிப்.12) மீண்டும் தொடங்குகிறது. தமிழகத்தின் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகம் வரை 2023, அக்.14-ம் தேதி ‘செரியாபாணி’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழைப் பொழிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்த சேவை அதே மாதம் 23-ம் தேதி நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, சுபம் என்ற கப்பல் நிறுவனம், ‘சிவகங்கை’ என்ற பெயரில் கடந்தாண்டு ஆக.16-ம் […]

February 11, 2025 admin
தமிழகத்தில் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைனில் விளையாடத் தடை! Exclusive

தமிழகத்தில் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைனில் விளையாடத் தடை!

தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் பலர் பணத்தை இழக்கும் நிகழ்வுகள் தொடர் கதையாகி வருகின்றன. மேலும் அதிகப்படியான பணத்தை இழப்பதன் மூலம் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். இதுதொடர்பாக சட்டங்கள் படிப்படியாக கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக ஆன்லைன் கேமிங் (விளையாட்டு) ஆணையம் முக்கிய நடவடிக்கை ஒன்றை தற்போது எடுத்துள்ளது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீன் தலைமையிலான ஆன்லைன் கேமிங் ஆணையம் […]

February 9, 2025 admin
புத்தம் புது மாதிரி அங்கன்வாடி மையம் நிறுவப் போகிறோம் – அப்போலோ உபாசனா அறிவிப்பு!. Exclusive

புத்தம் புது மாதிரி அங்கன்வாடி மையம் நிறுவப் போகிறோம் – அப்போலோ உபாசனா அறிவிப்பு!.

முன்னொரு சமயம் நடந்த கிரீம்ஸ் ரோட்டில் மண் மேடாக கிடந்த இடத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பு. பெரிய ஆஸ்பத்திரி கட்ட போவதாக அவர் சொன்னார். “வெளிநாட்டில் இருந்து விலை உயர்ந்த கருவிகள் வரவழைப்போம். வெளிநாட்டு டாக்டர்களைக்கூட வந்து போக ஏற்பாடு செய்வோம்” என்றார். ‘அப்ப பணக்காரங்களுக்கு மட்டுந்தான் உங்க ஆஸ்பிடல் பயன்படும், இல்லையா?’ என்றார் ஒரு நிருபர். பேட்டி கொடுத்த ஓனர் முகத்தில் புன்னகை மங்கவில்லை. “ஆமாங்க. அரசாங்க ஆஸ்பத்திரி வேண்டாம்; என்ன செலவானாலும் சரி, பெஸ்ட் […]

February 6, 2025 admin
தமிழ்நாட்டின் எல்லா பள்ளிகளிலும் ‘சூழல் மன்றங்கள்’ – முதல்வர் அறிவிப்பு! Exclusive

தமிழ்நாட்டின் எல்லா பள்ளிகளிலும் ‘சூழல் மன்றங்கள்’ – முதல்வர் அறிவிப்பு!

அதிகரித்து வரும் காலநிலை மாற்றதின் விளைவாக அதி தீவிர காலநிலை நிகழ்வுகளின் எண்ணிக்கையும் தீவிரத்தன்மையும் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. வரலாறு காணாத வறட்சி, கடுமையான வெப்பம் மற்றும் பெரும் வெள்ளம் போன்ற காலநிலை நிகழ்வுகள் ஏற்கெனவே கோடி கணக்கான மக்களின் உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை அச்சுறுத்திவருகிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் மட்டும், காலநிலை மாற்றத்தால் சுமார் 13.2 கோடி மக்கள் தீவிர வறுமையினால் பாதிக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.இந்த அவசர நிலையை உணர்ந்து சர்வதேச அளவிலும் […]

February 4, 2025 admin
தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்து அரசுடைமையான வரலாறு தெரியுமா?! Exclusive

தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்து அரசுடைமையான வரலாறு தெரியுமா?!

பேருந்துப் போக்குவரத்தைத் தனியாரிடமிருந்து தமிழ்நாடு அரசின் ஆளுகைக்குள் கொண்டுவந்த முற்போக்கு நடவடிக்கையை அரை நூற்றாண்டுக்கு முன்பே எடுத்த திமுக அரசு, தற்போது மீண்டும் தனியாரை நுழைத்து விட்டது.இந்த நிலையில் தமிழ்நாட்டில் பேருந்துப் போக்குவரத்து அரசுடைமையாக்கப்பட்ட வரலாற்றை நினைவூட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம். சுதந்திரத்துக்குப் பிறகு சில மாநிலங்கள் மட்டுமே பேருந்துப் போக்குவரத்தை அரசுடைமையாக்கும் நடவடிக்கையில் இறங்கின; அதற்கு முன்னோடி தமிழ்நாடுதான். பேருந்துப் போக்குவரத்தின் முக்கியத்துவம் கருதி 1956இல்தான் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை உருவாக்கப்பட்டது. மூன்றாண்டுகள் கழித்து 192 […]

February 2, 2025 admin
உத்தமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்! Exclusive

உத்தமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்!

ஓமந்தூராரை, ‘புனிதமான ஆத்மா’ என்றார் ராஜாஜி. ‘பட்டை தீட்டப்படாத வைரக்கல்’ என்று பாராட்டினார் நேரு. ‘அவர் ஓமந்தூர் ராமசாமி அல்ல. காந்தி ராமசாமி’ என்றார் அண்ணா. சுதந்திர இந்தியாவில், தமிழகத்தின் முதல் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ‘எல்லாவற்றுக்கும் முதல்வர்’ என்று உதாரணம் காட்டத்தக்க மனிதராக இருந்தார். ஆம்.. ஒரு முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். ‘சத்தியமேவ ஜெயதே’ என்ற இந்திய அரசின் இலச்சினையில் இருந்த சொற்களை […]

February 1, 2025 admin
யூஜிசி-யின் புதிய விதிகளை திரும்பப் பெறும் வரை ஓய மாட்டோம்- கோவி.செழியன்! Exclusive

யூஜிசி-யின் புதிய விதிகளை திரும்பப் பெறும் வரை ஓய மாட்டோம்- கோவி.செழியன்!

பல்கலைக்கழக மானியக் குழு ஆகிய யூ ஜி சி-யின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெறும் வரை ஓய மாட்டோம் என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்து உள்ளார். மேலும் இது, முழுவதுமாக அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாகவும், பல்கலைக்கழகங்களை உருவாக்கி நிர்ணயிக்கும் மாநில அரசின் உரிமைகளை பறிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், துணைவேந்தர் தேடுதல் குழுவை […]

January 29, 2025 admin
பட்டாவுடன், வரைபடத்தையும் ஒரு சேர பெறலாம்! Exclusive

பட்டாவுடன், வரைபடத்தையும் ஒரு சேர பெறலாம்!

முன்னதாக சொத்து வாங்குபவர்கள் அந்த சொத்தை தன் பெயருக்கு பத்திரப் பதிவு செய்த உடன், பட்டாவை மாற்றம் செய்ய வாங்கப்பட்டு அந்த பகுதி வி.ஏ.ஓ. அல்லது தாலுகா அலுவலகம் செல்லவேண்டும். அங்குதான் ஆவணங்களை சமர்ப்பிக்கும் நடைமுறை இருந்தது. இதனால் பணம் மற்றும் நேரம் வீணானது.பொதுமக்களின் இந்த சிரமத்தை தவிர்க்க, சில ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல் மேற்கொள்ளும் வசதியை அரசு கொண்டு வந்தது. எனினும் ஆவணங்களை தாலுகா அலுவலங்களுக்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டிய […]

January 28, 2025 admin
கோவை டீச்சிங் நிறுவன மூடலும்,மாற்று பாதையும்! Exclusive

கோவை டீச்சிங் நிறுவன மூடலும்,மாற்று பாதையும்!

கோவை கணபதியில் சடுதியில் மூடப்பட்ட ஃபோகஸ் எஜுமேடிக்ஸ் என்ற ஆன்லைன் டீச்சிங் நிறுவனத்தை , ஊடகங்கள் பெயர் குறிப்பிடாமல் ஐடி நிறுவனம் என்று குறிப்பிடுகின்றனர்,நாக்கை பிடுங்குவது போல கேள்வி கேட்க வேண்டிய ஊடகங்கள் இப்படி பம்முவது எதற்கு?உண்மை பேசுபவனுக்கு பயம் எதற்கு ?இந்த ஃபோகஸ் எஜுமேடிக்ஸ் நிறுவனம் கோவையில் மட்டும் சுமார் 500 ஊழியர்களுக்கு மேலாக வேலையை விட்டு நீக்கி உள்ளனர்,சென்னை தரமணியிலும் இந்த நிறுவனத்துக்கு கிளை உண்டு, சென்னையில் இந்த நிறுவனம் எத்தனை பேரை வேலையை […]

January 28, 2025 admin
Zoho :- சி.இ.ஓ பதவியில் இருந்து விலகினார் ஸ்ரீதர் வேம்பு! Exclusive

Zoho :- சி.இ.ஓ பதவியில் இருந்து விலகினார் ஸ்ரீதர் வேம்பு!

இந்தியாவின் பெருமையாக இயங்கி வரும் Zoho Corp நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்தார். முழு நேர ஆய்வு மற்றும் மேம்பாட்டு செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் தலைமை விஞ்ஞானி பொறுப்பை ஏற்கவுள்ளதால், தற்போதைய பணியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.இதனையடுத்து புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சைலேஷ் குமார் தவே நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஸ்ரீதர் வேம்பு, “நிறுவனத்தின் ‘தலைமை விஞ்ஞானி’ என்ற முறையில் தான் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் […]

January 27, 2025 admin
உடனடி செய்திகள்