32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 112 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 112)
அன்பைப் பரப்பி வந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவு! Exclusive

அன்பைப் பரப்பி வந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவு!

தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று – மதுரை ஆதீன மடம் . சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. இதில் 292 ஆவது பீடாதிபதியாக 1980 ஆம் ஆண்டு குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (அருணகிரி) ஆதீனமாக பொறுப்பேற்றார்.தற்போது 77 வயதான இவர் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மதுரை ஆதீன மடத்தின் பீடாதிபதியாக இருந்து வந்த .உடல் […]

August 14, 2021 admin
திமுக அரசின் முதல் பட்ஜெட் : முழு விபரம்! Exclusive

திமுக அரசின் முதல் பட்ஜெட் : முழு விபரம்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், தாக்கல் செய்யப்படும் முதல் நிதி நிலை அறிக்கை இதுவாகும். இதன் காரணமாக இந்த நிதிநிலை அறிக்கை குறித்து மக்களுக்கும், தொழில் துறையினருக்கும் எதிர்பார்ப்புகள் இருந்தன. இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் பல்வேறு முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. […]

August 13, 2021 admin
ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதல்வர் அறிவிப்பு! Exclusive

ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதல்வர் அறிவிப்பு!

சிறந்த நிர்வாகம், திட்டமிடல், ஆட்சித்திறன் ஆகியவற்றின் மூலம் பொற்கால ஆட்சி வழங்கிய ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் ‘ஆடிமாத திருவாதிரை’ நட்சத்திரத்தன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரும்பாலான எளிய மக்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் :மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ராஜேந்திர சோழன். அரசனாக கோலோச்சிய 30 ஆண்டுகளில் முதல் 10 ஆண்டுகள் கடும் போரில் கழித்தாலும் இறுதி 15 ஆண்டுகள் அவன் […]

August 11, 2021 admin
தமிழக அரசின் நிதி நிலை வெள்ளை அறிக்கை – முழு விபரம்!. Exclusive

தமிழக அரசின் நிதி நிலை வெள்ளை அறிக்கை – முழு விபரம்!.

தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கையை இன்று வெளியிட்டார். அப்போது ”தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,63,976 பொதுக்கடன் உள்ளது; கடந்த ஆட்சியில் அதிகளவு கடனை சார்ந்து இருந்ததாலேயே தற்போது இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் சுமை ரூபாய் 5.75 லட்சம் கோடி ஆக உள்ளது . தமிழ்நாடு அரசு வாங்கிய கடன்களுக்காக ஒரு நாளைக்கு ரூ.87.31 கோடி […]

August 9, 2021 admin
கொரோனா பரவல் :கோவில்களில் ஆடி அமாவாசை, ஆடிப்பூர நாட்களில் பக்தர்கள் வழிபட தடை Exclusive

கொரோனா பரவல் :கோவில்களில் ஆடி அமாவாசை, ஆடிப்பூர நாட்களில் பக்தர்கள் வழிபட தடை

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.தற்போது கொரோனா 2-வது அலை குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் 23ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆலயங்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று காலையில் அமலுக்கு வந்தது. நிறைய பக்தர்கள் ஆலயத்துக்குள் செல்ல முடியாததால் வெளியில் வாசலில் நின்று வழிபட்டு சென்றனர். இந்த நிலையில் நாளை […]

August 7, 2021 admin
தமிழ்நாட்டில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு: முதல்வர் அறிவிப்பு -முழுத் தகவல் Exclusive

தமிழ்நாட்டில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு: முதல்வர் அறிவிப்பு -முழுத் தகவல்

தமிழகத்தில் தற்போது உள்ள கட்டுப்பாடுகளுடன் கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு (ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை )நீட்டிக்கப்படுகிறது. அதேசமயம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட்டால், அவைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (6-8-2021) அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட […]

August 6, 2021 admin
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் – வீடியோ! Exclusive

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் – வீடியோ!

“மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்” மற்றும் “1 இலட்சம் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம்” ஆகிய திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் இன்று (5-8-2021) தொடங்கி வைத்தார். முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் இன்று (5.8.2021) கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமனப்பள்ளி கிராமத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பொதுமக்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை, இயலா […]

August 5, 2021 admin
தமிழக பட்ஜெட் & வெள்ளை அறிக்கை தாக்கலாகும் நாள் குறிச்சாச்சு! Exclusive

தமிழக பட்ஜெட் & வெள்ளை அறிக்கை தாக்கலாகும் நாள் குறிச்சாச்சு!

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஆண்டு, பரிட்சார்த்த முயற்சியா காகிதமில்லா இ-பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ள நிலையில் அந்த  நிதிநிலை அறிக்கை வரும் 13-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக 9-ம் தேதி, 120 பக்கங்கள் கொண்ட நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் எனவும், அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. . இதுதவிர, இந்த ஆண்டு தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை […]

August 4, 2021 admin
கலைஞர் கருணாநிதி படத்திறப்பு ; ஜனாதிபதி & முதல்வர் பேச்சு முழு விபரம் + வீடியோ Exclusive

கலைஞர் கருணாநிதி படத்திறப்பு ; ஜனாதிபதி & முதல்வர் பேச்சு முழு விபரம் + வீடியோ

சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ‘தமிழ்நாட்டு மக்களுக்கு தனது வாழ் நாளை முழுமையாக அர்ப்பணித்தவர் கருணாநிதி’ என்றும்  ‘தேவதாசி முறை ஒழிப்பு , சத்துணவு திட்டம் போன்ற முக்கிய மக்கள் நல திட்டங்களை நாட்டுக்கு தந்தவர் கருணாநிதி என்றும் புகழாரம் சூட்டினார். தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் சட்டமன்ற அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. விழாவில் பங்கேற்க வந்த குடியரசுத் […]

August 2, 2021 admin
13 நிமிடத்திற்குள்ளாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு முடிவு!  மா.சு. தகவல்! Exclusive

13 நிமிடத்திற்குள்ளாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு முடிவு! மா.சு. தகவல்!

தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில், தெர்மல் ஸ்கீரினிங் மற்றும் ஆர்டிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 13 நிமிடத்திற்குள்ளாக பரிசோதனை […]

August 1, 2021 admin
உடனடி செய்திகள்