32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 111 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 111)
பொன்விழா நாயகன் துரைமுருகன் -முதல்வர் ஸ்டாலின் புகழாரம்! Exclusive

பொன்விழா நாயகன் துரைமுருகன் -முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

அமைச்சர் துரைமுருகனை பாராட்டி இன்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), நயினார் நாகேந்திரன் (பா.ஜ.க.), சிந்தனை செல்வன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), டி.ராமச்சந்திரன் (கம்யூனிஸ்ட்), சதர்ன் திருமலை குமார் (ம.தி.மு.க.), ஜவாஹிருல்லா ஈஸ்வரன் (கொங்கு நாடு மக்கள் கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), பூவை ஜெகன் (புரட்சி பாரதம்) ஆகியோர் வாழ்த்தியும் பாராட்டியும் பேசினார்கள். இறுதியாக […]

August 23, 2021 admin
மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் நியமனம்! Exclusive

மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் நியமனம்!

மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் இன்று குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இல. கணேசன் ஆர்எஸ்எஸ் பின்னணியைச் சேர்ந்தவர். நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். பாஜக தேசியக் குழு உறுப்பினராக இருக்கிறார். தமிழ்நாடு பாரதீய ஜனதா தலைவராகவும் பதவி வகித்து உள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு பாரதீய ஜனதாவின் முன்னாள் தலைவரான இல. கணேசனுக்கு, மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நியமன உத்தரவை குடியரசுத் தலைவர் […]

August 22, 2021 admin
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு – மேலும் தளர்வுகள் = முழு விபரம்! Exclusive

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு – மேலும் தளர்வுகள் = முழு விபரம்!

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 23ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தையடுத்து, தமிழகத்தில் பல முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதுடன், ஊரடங்கு மேலும் 2 வாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோவிட்-19 நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 23.08.2021 அன்று […]

August 21, 2021 admin
382வது மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு போட்டிகள்!- சென்னை மாநகராட்சி அறிவிப்பு! Exclusive

382வது மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு போட்டிகள்!- சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

இந்தியாவின் 4வது பெரிய நகரம் சென்னை. தமிழக மக்களுக்கு இது வந்தாரை வாழவைக்கும் சென்னை. இந்த சென்னை என்பது பிரிட்டிஷார் இங்கு வருவதற்கு முன்பே சிறந்து விளங்கிய நெய்தல் நிலம். மீனவர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களுக்கு வாழ்வுரிமை அளித்த மண். இத்தகைய பெருமை மிகுந்த சென்னையை தலைநகராக்கினார்கள் ஆங்கிலேயர்கள். அதை எல்லாம் நினைவூட்டும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22ம் தேதி மெட்ராஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டும் இந்தச் சிறப்பு மிக்க மெட்ராஸ் தினத்தினை கொண்டாடும் […]

August 19, 2021 admin
கோடநாடு விவகாரம் : இதுக்கே பயந்தா எப்படி? இன்னும் நிறைய இருக்கு!- முதல்வர் பேச்சு! Exclusive

கோடநாடு விவகாரம் : இதுக்கே பயந்தா எப்படி? இன்னும் நிறைய இருக்கு!- முதல்வர் பேச்சு!

கோடநாடு வழக்கில், பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை எனவும், அரசியல் தலையீடு, உள்நோக்கம் இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த, 2017 ஏப்., 24ம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி, கிருஷ்ணதாபா காயமடைந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயானிடம் நேற்று போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.இது […]

August 18, 2021 admin
சாலைகளில் 30 நிமிடங்களுக்கு இலவச ‘வைபை’ வசதி – சென்னை மாநகராட்சி அறிவிப்பு! Exclusive

சாலைகளில் 30 நிமிடங்களுக்கு இலவச ‘வைபை’ வசதி – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

சென்னை மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் 49 ஸ்மார்ட் கம்பங்களில் இருந்து பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு இலவச ‘வைபை’(wi-fi) வசதி பெறலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பொதுமக்கள் இலவச வைபை வசதி பெறுவதற்கு தங்களது கைபேசி எண்ணை பதிவு செய்து ஓ.டி.பி. மூலம் இந்த சேவையை பெற்றுக் கொள்ளலாம். சென்னை மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தில் மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் […]

August 17, 2021 admin
அதிமுக ஆட்சியில் நிறைவேற்றாத வாக்குறுதிகள் பட்டியல் இதோ- ஸ்டாலின் பதிலடி! Exclusive

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றாத வாக்குறுதிகள் பட்டியல் இதோ- ஸ்டாலின் பதிலடி!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2021 – 2022ம் ஆண்டுக்கான பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று (16-8-2021) தொடங்கியது. விவசாயக் கடன் மற்றும் நகைக் கடன்கள் குறித்த விவாதத்தின்போது, நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நீங்கள் தந்த வாக்குறுதிகளை, உறுதிமொழிகளை நாங்களும் மறக்கவில்லை – நாட்டு மக்களும் மறக்கவில்லை.  ஆனால் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளிலிருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்தார். விவசாயக் கடன் மற்றும் நகைக் கடன்கள் குறித்த […]

August 16, 2021 admin
தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார் சுஹாஞ்சனா!- வைரலாகும் வீடியோ! Exclusive

தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார் சுஹாஞ்சனா!- வைரலாகும் வீடியோ!

தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவாராக சென்னையைச் சேர்ந்த சுஹாஞ்சனா நியமிக்கப்பட்டுள்ளார். சுஹாஞ்சனா தேனுபுரீஸ்வர் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்து தனது பணியைத் தொடங்கினார். இவர் தமிழில் ‘சைவ திருமுறைகள்’ பாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து பாராட்டி வருகிறார்கள். தமிழ்நாட்டில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தைக் கடந்த 1970ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். எனினும் பல்வேறு சட்டச் சிக்கல்கள் காரணமாக இந்த […]

August 15, 2021 admin
கோட்டையில் கொடியேற்றும் வாய்ப்பு – முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி! Exclusive

கோட்டையில் கொடியேற்றும் வாய்ப்பு – முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

“கோட்டையில் கொடியேற்றும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின நாளில் கொடியேற்றும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்கிறேன். சுதந்திர தின நாளில் முதல்வர்கள்தான் கொடியேற்ற வேண்டும் என்ற சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. எத்தனையோ முதலமைச்சர்கள் வந்தாலும் கொடியேற்றும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவர் கலைஞர்: என்று பெருமையுடன் குறிப்பிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 75-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி […]

August 15, 2021 admin
வேளாண்துறை நிதிநிலை அறிக்கை : முக்கிய அம்சங்கள்! Exclusive

வேளாண்துறை நிதிநிலை அறிக்கை : முக்கிய அம்சங்கள்!

தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக, 2021-22 ஆம் ஆண்டில் வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை 14.08.2021 அன்று சட்டமன்றப் பேரவையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் இடம்பெற்ற முக்கிய திட்டங்கள் மற்றும் முக்கிய கொள்கை முடிவுகள் இதோ. 1. 2021-22 ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் சார்புத்துறைகளுக்கு என்று ரூ.34,220.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், சர்க்கரைத்துறை, விதைச்சான்று […]

August 14, 2021 admin
உடனடி செய்திகள்