32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 104 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 104)
தமிழ்நாட்டில் ஊரடங்கு டிச. 15-ம் தேதி வரை நீட்டிப்பு! – முதல்வர் அறிவிப்பு! Exclusive

தமிழ்நாட்டில் ஊரடங்கு டிச. 15-ம் தேதி வரை நீட்டிப்பு! – முதல்வர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் 15.12.2021 வரை நீட்டிப்பு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கொரோனா நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பில் தெரிவித்துள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம் வருமாறு: […]

November 30, 2021 admin
கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்! Exclusive

கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்!

கனடா நாட்டில் 2001 முதல் இயங்கிவரும் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளையாகும். அரிய தமிழ் நூல்களைப் பதிப்பிப்பது, தமிழ் ஆங்கில நூல்களை மொழிபெயர்ப்பு செய்வதை ஊக்கப்படுத்துவது, மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்குவது ,கனடிய நூலகங்களுக்கு இலவசமாகத் தமிழ்நூல்கள் அளிப்பது போன்ற இதன் சேவைகள் பலவகைப்பட்டதாகும்.அதுமட்டுமல்ல வாழ்நாள் சாதனை செய்த தமிழ் ஆளுமைகளுக்கும் தமிழுக்குப் பல துறைகளில் சேவை புரிந்தவர்களுக்கும் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவித்தும் வருகிறது. ஆளுமைகளின் […]

November 28, 2021 admin
பாஸ்போர்ட் பெற வரும் நேர்காணலுக்கு அசல் சான்றிதழ்களை கொண்டு வர தேவையில்லை! Exclusive

பாஸ்போர்ட் பெற வரும் நேர்காணலுக்கு அசல் சான்றிதழ்களை கொண்டு வர தேவையில்லை!

பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்கள் நேர்காணலின்போது, ‘டிஜிலாக்கர்’ செயலி மூலம் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் வசதியை பாஸ்போர்ட் அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், ஆவணங்களை பத்திரமாக கையாள முடிவதோடு, நேரமும் மிச்சமாகும் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் தெரிவித்தார். வேலைவாய்ப்பு, வியாபாரம், சுற்றுலா, கல்வி, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மக்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் எடுப்பது கட்டாயம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பாஸ்போர்ட் எடுப்பது மிகவும் கடினமான காரியமாக […]

November 26, 2021 admin
ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை அரசுடமை ஆக்கியது செல்லாது!- ஐகோர்ட் அதிரடி! Exclusive

ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை அரசுடமை ஆக்கியது செல்லாது!- ஐகோர்ட் அதிரடி!

சென்னை போயஸ் தோட்டம் பகுதியில் உள்ள வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபக், தீபாவிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதிமுக-வைக் கட்டிக் காத்த ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த வேதா நிலையம் ஒரு குட்டி அரண்மனை போன்றது. மொத்தம் இரண்டு கட்டடங்களுடன் கூடிய வீடுதான் வேதா நிலையம். முன்புறம் உள்ள கட்டடம்தான் முதலில் கட்டப்பட்ட வீடு. அதில் 2 தளங்கள் உள்ளன. முதல் தளத்தில் நான்கு படுக்கை அறைகள் உள்ளன. ஒரு டைனிங் ஹால், விருந்தினர் […]

November 24, 2021 admin
தேவையா இது மாதிரியான ஆணையம் – சுப்ரீம் கோர்ட் கேள்வி! Exclusive

தேவையா இது மாதிரியான ஆணையம் – சுப்ரீம் கோர்ட் கேள்வி!

“ஆறுமுகசாமி ஆணையம் என்ன மாதிரியான விசாரணை முறைகளை கடைபிடிக்கிறது என்பது தொடர்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கு விசாரணைய நாளைக்கு ஒத்தி வைத்தது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடைகோரி சுப்ரீம் கோர்ட்டில் அப்போலோ மருத்துவமனை சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில், ஆறுமுகசாமி ஆணையம் […]

November 23, 2021 admin
சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.என். பண்டாரி பதவியேற்றார்! Exclusive

சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.என். பண்டாரி பதவியேற்றார்!

சென்னை ஐகோர்ட்டுக்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட முனீஸ்வரர் நாத் பண்டாரி (எம்.என். பண்டாரி) இன்று (22-11-2021) கவர்னர் மாளிகையில் பதவி ஏற்றுகொண்டார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றப் பட்டார். இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் 2-வது மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி எம். துரைசாமி, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மேலும் அலகாபாத் ஐகோர்ட்டின் நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி, சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதியாகவும், […]

November 22, 2021 admin
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா! Exclusive

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக மகா தீப கொப்பரை மலை உச்சிக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது. நாளை மலை ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிவலப்பாதையில் மட்டும் 20 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு […]

November 18, 2021 admin
ஆதிக்கக் கலாச்சாரம் – தலைமை நீதிபதி சஞ்ஜிப் பான்ர்ஜி சோகம்! Exclusive

ஆதிக்கக் கலாச்சாரம் – தலைமை நீதிபதி சஞ்ஜிப் பான்ர்ஜி சோகம்!

மெட்ராஸ் ஐகோர்ட் சீஃப் ஜட்ஜாக நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த முடிவை பரிசீலனை செய்யும்படி பார் கவுன்சிலின் மூத்த வழக்கறிஞர்கள் கொலிஜியத்திடம் வற்புறுத்தியிருந்தனர். எனினும், பணிமாற்றத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில், தனக்கு நடைபெறுவதாக இருந்த பிரிவு உபசார விழாவை தவிர்த்த சஞ்ஜிப் பானர்ஜி சாலை பார்க்கமாக கொல்கத்தா புறப்பட்டு சென்றார். புறப்படுவதற்கு முன்பு கடிதம் ஒன்றையும் அவர் எழுதி தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு அனுப்பி இருக்கிறார் […]

November 17, 2021 admin
ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு -முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! Exclusive

ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு -முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார். மழை, வெள்ள காலத்தில் டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் 30.11.2021 வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம் இதோ: தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்று […]

November 14, 2021 admin
மழைக்காலமாச்சே : இதோ பொது சுகாதாரா ஆலோசனைகள்! Exclusive

மழைக்காலமாச்சே : இதோ பொது சுகாதாரா ஆலோசனைகள்!

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் குறிப்பிட்டு தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்டங்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி, மழை வெள்ளத்தின் போதும், வெள்ள பாதிப்புக்கு பின்பும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடைப்பிடிக்க வேண்டிய பொது சுகாதார ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் குறிப்பிட்டுள்ளதாவது, 1. மருத்துவ சிகிச்சை மற்றும் சுகாதார ஆலோசனைகள் • அனைத்து அரசு மருத்துவ மனைகளும் தேவையான வசதிகள் மற்றும் மருந்துகளுடன் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. பொது […]

November 12, 2021 admin
உடனடி செய்திகள்