ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை அரசுடமை ஆக்கியது செல்லாது!- ஐகோர்ட் அதிரடி!

ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை அரசுடமை ஆக்கியது செல்லாது!- ஐகோர்ட் அதிரடி!

சென்னை போயஸ் தோட்டம் பகுதியில் உள்ள வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபக், தீபாவிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக-வைக் கட்டிக் காத்த ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த வேதா நிலையம் ஒரு குட்டி அரண்மனை போன்றது. மொத்தம் இரண்டு கட்டடங்களுடன் கூடிய வீடுதான் வேதா நிலையம். முன்புறம் உள்ள கட்டடம்தான் முதலில் கட்டப்பட்ட வீடு. அதில் 2 தளங்கள் உள்ளன. முதல் தளத்தில் நான்கு படுக்கை அறைகள் உள்ளன. ஒரு டைனிங் ஹால், விருந்தினர் அறை, 2 ஆபீஸ் ரூம், 2 ஸ்டோர் ரூம் மற்றும் சமையலறை ஆகியவை உள்ளன.முதல் தளத்தில் 2 அறைகள் மட்டும் உள்ளன. அதில் ஒரு அறை ஜெயலலிதாவின் படுக்கை அறையாக இருந்தது. இன்னொரு அறை உடற்பயிற்சி செய்வதற்கான ஜிம் ஆக பயன்படுத்தப்பட்டது. 1991ம் ஆண்டு முதல் முறையாக முதல்வர் பதவிக்கு வந்ததும் தனது வீட்டை புதுப்பித்து பின்னால் ஒரு போர்ஷனைக் கட்டினார் ஜெயலலிதா. இரண்டு பகுதிகளையும் இணைக்க தனிப் பாதையும் போடப்பட்டது. புதிதாக கட்டிய கட்டடத்தில்தான் ஜெயலலிதாவும், சசிகலாவும் வசித்து வந்தனர். அந்த புதிய கட்டடத்தில் மொத்தம் 5 தளங்கள் உள்ளன. அப்பேர்பட்ட வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சட்டமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றயது.

இந்நிலையில், வேதா நிலையத்தை அரசுடைமையாக்கிப் பிறப்பித்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், இழப்பீடு நிர்ணயம் செய்ததை எதிர்த்து ஜெ. தீபா இருவரும் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை ஒன்றாக விசாரித்துவந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, இன்று (24/11/2021) தீர்ப்பு வழங்கப்படும் என்று ஐகோர்ட் அறிவித்திருந்தது.

https://twitter.com/aanthaireporter/status/1463488607428042752

அந்த வகையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை இன்று (24/11/2021) மதியம் சென்னை ஐகோர்ட் நீதிபதி என். சேஷசாயி வழங்கினார். தீர்ப்பில், “வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது. நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் செல்லாது. வேதா நிலையத்தை தீபா, தீபக்கிடம் மூன்று வாரங்களில் ஒப்படைக்க சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்படுகிறது. கீழமை நீதிமன்றத்தில் உள்ள தொகையில் வருமான வரி நிலுவை போக, மீதியை தீபா, தீபக்கிடம் கொடுக்கலாம். வரிப் பாக்கியை வசூலிப்பதற்கான நடவடிக்கையை வருமான வரித்துறை மேற்கொள்ளலாம். நீதிமன்றத்தில் செலுத்திய ரூபாய் 67.95 கோடி இழப்பீட்டை அரசுத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பின்போது, வேதா நிலையம் மற்றும் மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என இரண்டு நினைவிடங்கள் எதற்கு? என்று நீதிபதி கேள்வி எழுப்பினாராக்கும்

Related Posts

error: Content is protected !!