ஆதிக்கக் கலாச்சாரம் – தலைமை நீதிபதி சஞ்ஜிப் பான்ர்ஜி சோகம்!

ஆதிக்கக் கலாச்சாரம் – தலைமை நீதிபதி சஞ்ஜிப் பான்ர்ஜி சோகம்!

மெட்ராஸ் ஐகோர்ட் சீஃப் ஜட்ஜாக நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த முடிவை பரிசீலனை செய்யும்படி பார் கவுன்சிலின் மூத்த வழக்கறிஞர்கள் கொலிஜியத்திடம் வற்புறுத்தியிருந்தனர். எனினும், பணிமாற்றத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில், தனக்கு நடைபெறுவதாக இருந்த பிரிவு உபசார விழாவை தவிர்த்த சஞ்ஜிப் பானர்ஜி சாலை பார்க்கமாக கொல்கத்தா புறப்பட்டு சென்றார். புறப்படுவதற்கு முன்பு கடிதம் ஒன்றையும் அவர் எழுதி தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு அனுப்பி இருக்கிறார் அதில், தனிப்பட்ட முறையில் உங்களிடம் விடைபெறாமல் செல்வதற்காக மன்னியுங்கள். என்னுடைய நடவடிக்கைகள் புண்படுத்தி இருந்தால் அது தனிப்பட்ட முறையிலானது இல்லை. அது உயர் நீதிமன்ற நலனுக்கானது மட்டுமே . உங்களின் அளவு கடந்த அன்பினால் நானும் என் மனைவியும் உள்ளம் மகிழ்ந்தோம் என்று சக நீதிகளுக்கு தெரிவித்துள்ளார். அத்துடன் தன்னுடைய நடவடிக்கைகள் யாரையும் புண்படுத்தி இருந்தால், அது தனிப்பட்ட முறையிலானது இல்லை என்றும், அது உயர் நீதிமன்ற நலனுக்கானதாகவே இருந்திருக்கும் என விளக்கம் அளித்துள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தின் தகவல் இதோ:

அழகான மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் கடன்பட்டுள்ளேன். எனது சொந்த மாநிலம் என 11 மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். தனிப்பட்ட முறையில் உங்களிடம் விடைபெறாமல் செல்வதற்காக மன்னியுங்கள். என் மீதான உங்களின் அளவுகடந்த அன்பினால் பூரித்து போயிருக்கிறேன். என் முடிவுகள் அனைத்து நீதிமன்றம் நலனுக்கானதே தவிர, தனிப்பட்ட காரணமல்ல.

இறுதி நிமிடம் வரை உங்களுடன் இல்லாத சூழலுக்கும், உங்கள் ஒவ்வொருவரையும் தனியாக சந்தித்து சொல்லாமல் விடைபெற்றதற்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். பணியின் போது சிலரை புண்படும் நோக்கில் நடந்திருந்தாலும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எனது செயல்பாடுகள் தனிப்பட்ட முறையில் இல்லாமல் நிர்வாகத்துக்குத் தேவையான நடவடிக்கையாக அது அமைந்தது இதனிடையே ஆதிக்க கலாசாரத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். முழுமையாக தகர்த்தெறிய என்னால் இயலவில்லை. என் மீதான உங்களின் அளவு கடந்த அன்பினால் பூரித்துப் போயிருக்கிறேன். திறமையான நிர்வாகத்தை மேற்கொள்ள உதவியாக இருந்த பதிவு துறைக்கும் நன்றி என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அழகான, மதிப்புமிக்க மாநில மக்களுக்கு நானும், ரானேவும் என்றுமே நன்றி உரைத்தவர்களாக இருப்போம். நீங்கள் எங்களுக்கு அளித்த அன்பு மற்றும் விருந்தோம்பலை மறக்க முடியாது. கடந்த 11 மாதங்களாக இதை எங்கள் மாநிலம் என்று சொல்லும் பெருமையைப் பெற்றிருக்கிறோம்”

error: Content is protected !!