32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 19 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 19)
டிசம்பர் 14 முதல் எம்.எக்ஸ்.பிளேயரில் குயின் (ஜெ.வாழ்க்கைத்) தொடர்! Running News2

டிசம்பர் 14 முதல் எம்.எக்ஸ்.பிளேயரில் குயின் (ஜெ.வாழ்க்கைத்) தொடர்!

ஓடிடி தளமான எம்.எக்ஸ். பிளேயர் ஆச்சரியப்படத்தக்க வகையிலான பிரமாண்டங்களை தரத் தயாராகி வருகிறது. இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும், ‘கிராடரி படத்தை இயக்கிய பிரசாத் முருகேசனும் ஒன்றிணைந்து ‘குயின்’ என்று பெயரிடப்பட்ட இணையதளத் தொடர் ஒன்றை வழங்க விருக்கின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை விவரிக்கும் இந்த இணையத் தொடர் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பும், முதல் எபிசோட் திரையிடலும் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், “உண்மையில் […]

December 11, 2019 admin
என் சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா -பட ஆடியோ விழா ஹைலைட்ஸ்! Running News2

என் சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா -பட ஆடியோ விழா ஹைலைட்ஸ்!

எஸ்.எச்.மீடியா ட்ரீம்ஸ் நிறுவனம் சார்பில் சாகுல் அமீது தயாரித்திருக்கும் படம் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன்  எவன்டா’. நவீன் மணிகண்டன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தில்  விகாஷ் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக மதுமிதா நடித்திருக்கிறார். இவர்களுடன் டெல்லி கணேஷ், சித்ரா, ராகுல்  தாத்தா, விஜய் டிவி ராமர், நாஞ்சில் விஜயன், அம்பானி சங்கர், நெல்லை சிவா, வெங்கடேஷ், பிரவீன் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க பொழுதுபோக்குப் படமாக […]

December 11, 2019 admin
புலியை கண்டு மிரண்ட ’ட்ரிப்’ டீம் ஷூட் ஓவர்! Running News2

புலியை கண்டு மிரண்ட ’ட்ரிப்’ டீம் ஷூட் ஓவர்!

பிரவீண், சுனைனா, யோகிபாபு மற்றும் கருணாகரன் ஆகியோருடன் ஏராளமான புதுமுகங்கள் நடித்த சாகசம் மிக்க திரில்லர் ஃபேன்டசி வகைப்படமான ‘ட்ரிப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. சாய் பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டெனிஸ் இயக்கியிருக்கும் இப்படத்தின் படப் பிடிப்பு நிறைவடைந்தது குறித்து படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது. காரணம் அடர்ந்த வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட இந்த சாகசப் படத்தின் படப்பிடிப்பே சவால்களும் சாகசங்களும் நிரம்பியதாக இருந்ததுதான். இது குறித்து விவரித்த இயக்குநர் டெனிஸ்… “ஒரு வழியாகப் படப்பிடிப்பை […]

December 11, 2019 admin
நான் அவளைச் சந்தித்த போது படத்தை உடனே பார்க்க ஆர்வமா இருக்கு.. ஏன் தெரியுமா? – பாக்யராஜ்! Running News2

நான் அவளைச் சந்தித்த போது படத்தை உடனே பார்க்க ஆர்வமா இருக்கு.. ஏன் தெரியுமா? – பாக்யராஜ்!

சினிமா ப்ளாட்பார்ம் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் V.T ரித்திஷ்குமார் தயாரித்துள்ள படம் நான் அவளைச் சந்தித்த போது. இப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் எல்.ஜி ரவிசந்தர். நேற்று இப் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு V.T ரித்திஷ்குமார் பேசியதாவது… “வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இன்று என் வாழ்வில் முக்கியமான நாள். சினிமாவிற்காக நல்லகதை தேடிக் கொண்டு இருந்தேன். எல்.ஜி.ரவிச்சந்தர் இக்கதையைச் […]

December 10, 2019 admin
பரத் நடிப்பில் தயாராகி 13ம் தேதி ரிலீஸாகப் போகும் ’காளிதாஸ்’ படத்தில் என்ன ஸ்பெஷல்? Running News2

பரத் நடிப்பில் தயாராகி 13ம் தேதி ரிலீஸாகப் போகும் ’காளிதாஸ்’ படத்தில் என்ன ஸ்பெஷல்?

தற்போது பரத் நடித்து வெளிவரவிருக்கும் புதிய திரைப்படம் ‘காளிதாஸ்’. லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்துள்ள இந்த ‘காளிதாஸ்’ படத்தில் பரத், அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். புவன் சீனிவாசன் படத் தொகுப்பை கவனிக்கிறார். திரைக் கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில். இவர் நாளைய இயக்குநர் சீசன் […]

December 10, 2019 admin
எனக்கு நேர்ந்த அவமானம் : ‘தர்பார்’ விழாவில் ரஜினி பேச்சு முழு விபரம்! Running News2

எனக்கு நேர்ந்த அவமானம் : ‘தர்பார்’ விழாவில் ரஜினி பேச்சு முழு விபரம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 167- வது படமாக உருவாகியுள்ளது ‘தர்பார்’. அவருக்கு ஜோடியாக நயன்தாரா, இவர்களுடன் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியாகும் இந்தப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், விவேக், யோகி பாபு, இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சங்கர், இசையமைப்பாளர் அனிருத், லைகா நிறுவனத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இயக்குநர் முருகதாஸ் பேசிய […]

December 8, 2019 admin
அக்னிசிறகுகள் படத்தில் அக்‌ஷரா ஹாசனுக்கு என்ன ரோல்? – இயக்குநர் நவீன் Running News2

அக்னிசிறகுகள் படத்தில் அக்‌ஷரா ஹாசனுக்கு என்ன ரோல்? – இயக்குநர் நவீன்

நடிகர் அருண் விஜய் என்றுமே தன் ரசிகர்களையும், வலைப்பூ வாசிகளையும், ட்விட்டரில் தீவிர மாக இயங்குபவர்களையும் வசீகரிக்கத் தவறுவதேயில்லை. இதோ இன்னும் ஒரு திகைப்பூட்டும் தோற்றத்தில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் அருண் விஜய். ஆம்… ‘அக்னி சிறகுகள்’ படத்தில் அவர் ஏற்றிருக்கும் ரஞ்சித் என்ற வேடத்தின் தோற்றம்தான் இப்போது அனைவரின் பேசு பொருளாகவும் ஆகியிருக்கிறது. இது குறித்து ‘அக்னி சிறகுகள்’ படத்தின் இயக்குநர் நவீன் கூறியதாவது… அருண் விஜய் எப்போதுமே உணர்ச்சிகள் பக்கம் சாய்ந்திராத, பேய் மனப்பான்மை […]

December 7, 2019 admin
தேசிய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசாமியின் ‘பாரம்’ திரைப்படம் வெளியாகத் தயார்! Running News2

தேசிய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசாமியின் ‘பாரம்’ திரைப்படம் வெளியாகத் தயார்!

‘ஆடுகளம்’, ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘வடசென்னை’ என்று தொடர் வெற்றிகளைக் கொடுத் ததுடன், தற்போது தனுஷ் நடிப்பில் வெளிவந்து அசுர வெற்றியுடன் ஓடிக்கொண்டிருக்கும் ‘அசுரன்’ படத்தைக் கொடுத்த இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி, இந்த ஆண்டுக்கான தேசிய விருதை வென்ற ஒரே தமிழ்ப் படம் என்ற பெருமையைப் பெற்ற பிரியா கிருஷ்ணசாமியின் ‘பாரம்’ படத்தை வெளியிடுகிறது. இரண்டு முறை தேசிய விருதை வென்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இது குறித்து கூறியதாவது…. கிராமப்புறங்களில் […]

December 7, 2019 admin
தனுசு ராசி நேயர்களே – விமர்சனம் ! Running News2

தனுசு ராசி நேயர்களே – விமர்சனம் !

நம்ம ரவிநாக் ஆந்தை ரிப்போர்ட்டரில் ஒரு முறை விரிவாக எழுதிய காதல் என்றால் என்ன? என்ற தத்து பித்துவில் ’பார்த்ததும் காதல், பழகிய பின் காதல், நட்பின் அடிப்படையில் காதல், திருமணத்திற்கு முன் காதல், திருமணத்திற்கு பின் காதல், கள்ளக்காதல், ஒரு தலைக் காதல் என பல வகை காதல் உண்டு என்று சொல்லி அனைத்தையும்  வெவரமா விளக்கி இருப்பார். அந்த விவரமான வரிசையில் இடம் பெறாத ஜோசியம் பார்த்து காதல், காதலுக்கு அப்பாலும் காதல் என்ற […]

December 6, 2019 admin
உடனடி செய்திகள்