Running News2
Running News2
Running News2
மாஸ் ஹீரோவின் படத்துக்கு இணையான விளம்பர யுக்தியுடன் ரிலீஸாகும் ’அறம்’
பெண் சமத்துவம் என்பதை வெறும் பேச்சில் மட்டுமே கொண்டுள்ள பல துறைகள் இருக்கும் இக்காலத்தில், அதனை நடைமுறையிலும் செயலாக்கிக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா துறை. மிக வலுவான முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘அறம்’ படத்தை கோபி நைனார் இயக்கியுள்ளார். இது ஒரு சமுதாய பிரச்சனைகளை பற்றி பேசும் படமாகும். இப்படத்தை தயாரித்துள்ள KJR ஸ்டுடியோஸ், பிரம்மாண்ட விளம்பர யுக்திகளை கையாளவுள்ளனர். ஒரு பெரிய மாஸ் ஹீரோவின் பட ரிலீசுக்கு இணையாக இப்படத்திற்கு […]
காதலர்களின் சங்கேத வார்த்தையாக கருதப்பட்ட ‘143’ – நவம்பர் 10ல் ரிலீஸ்!
Eye Talkies பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் சதீஷ் சந்திரா பாலேட் தயாரித்துள்ள திரைப்படம் ‘143.’ இந்தப் படத்தில் இயக்குநர் ரிஷி கதாநாயகனாக நடித்து, எழுதி இயக்கியிருக்கிறார். நாயகிகளாக பிரியங்கா ஷர்மா, நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள். அனுபவ நடிகர்களான விஜயகுமார், கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மற்றும் சுதா, ராஜசிம்மன் பிதாமகன் மகாதேவன் , நெல்லை சிவா, சோனா ‘முண்டாசுப்பட்டி’ பசுபதி இவர்களுடன் தயாரிப்பாளர் சதீஷ் சந்திரா பாலேட்டும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். […]
நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் ஹைலைட்டான விஷயம் என்ன தெரியுமா? – சுசீந்திரன் ஸ்பெஷல் பேட்டி!
அன்னை பிலிம் பேக்டரி சார்பில் ஆண்டனி தயாரிக்க, சந்தீப் கிஷன் , விக்ராந்த், மேஹ்ரின், துளசி நடிப்பில் சுசீந்திரன் டைரக்ஷனில் உருவாகியுள்ள புதிய படம், ‘நெஞ்சில் துணிவிருந்தால்.’ இந்த படத்தின் ‘டிரைலர்’ வெளியீட்டு விழாவில், டைரக்டர் சுசீந்திரன் கலந்து கொண்டு பேசிய போது, “நான் மகான் அல்ல படம் எப்படி வெற்றி படமாக அமைந்ததோ அதைப்போலவே இந்த படத்திலும் அனைத்து பாடல்களும் ‘ஹிட்’ ஆகியுள்ளன. இமானுடன் நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். சந்தீப் சிறப்பாக நடித்து இருக்கிறார். […]
ஹெச். ராஜா கொடுத்த விளம்பரம் மூலம் ஹாட் டாபிக்கான ’இப்படை வெல்லும்’!
நவம்பர் 9-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘இப்படை வெல்லும்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. கவுரவ் இயக்கியுள்ள இப்படத்தில் மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே.சுரேஷ், ராதிகா உள்ளிட்ட பலரும் உதயநிதியுடன் நடித்திருக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரித்தி ருக்கிறது. முன்னதாக ‘இப்படை வெல்லும்’ படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியொன்றில் உதயநிதி ஸ்டாலின், “‘மெர்சல்’ படத்தின் முழு விளம்பரம் கொடுத்தது பாஜகதான். அதேபோல் என்னுடைய ‘இப்படை வெல்லும்’ படத்திற்கும் ஹெச்.ராஜா, தமிழிசையை பேச வைக்கலாம்னு நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.இச்செய்தி சமூகவலைத் […]
விழித்திரு – விமர்சனம் = பார்க்க தகுந்த படம்.
நாம் ஒருவருக்கு நன்மையோ தீமையோ செய்யாத வரை மட்டுமே அவர் நமக்கு அந்நியமானவர். இரண்டில் ஏதேனும் ஒன்றை செய்தாலும் அவர் நம் வாழ்வின் ஓர் அங்கமாகிவிடுகிறார் என்னும் கருத்தை ஆழமாக இரண்டு மணி நேரம் ஏழு நிமிடங்களில் சொல்ல முயன்றிருக்கிறார் மீரா கதிரவன். இப்போதெல்லாம் கதை என்ன என்றே தெரியாமலும் அல்லது ஒரு கதையை குழப்பம் கொஞ்சம் கூட சொல்வதற்கே நாக்கு தள்ளும் டைரக்டர்களை சீண்டி பார்க்கும் போக்கும் ஒரே இரவில் நான்கு கதைகள் சொல்ல மெனக்கெட்டிருக்கிறார். […]
திட்டி வாசல் – திரை விமர்சனம்
நம் நாட்டில் மனிதர்கள் தவறு செய்து விட்டு இயற்கை மீது பழி போடுவது அதிகரித்து கொண்டே போகிறது. அதாவது காடிலிருந்த யானை ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் என்றும் நகருக்குள் வெள்ளம் புகுந்தது என்றும் மக்கள் வாய் கூசாமல் பேசுவது சகஜமாகி விட்டது. உண்மையில் காட்டு பகுதிகளில் குடியேறி ஊர் ஒன்றை உருவாக்கியது நாம்தான் என்பதையும், தண்ணீர் ஓடும் பாதையில் நகரை நிர்மாணித்தது நாமேதான் என்பதையும் மறந்து விட்டு கூச்சலிடுவது பேஷனாகி விட்டது. இத்தனைக்கும் நம் இந்திய மக்கள் […]
காதல், பாசம், கர்வம், மனிதன் போன்றவற்றின் கலவைதான் – சீமத்துரை’
புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராகஅறிமுகமாகும் திரைப்படம், “சீமத்துரை”. கீதன், வர்ஷா பொல்லம்மா கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்க விஜி சந்திரசேகர், கயல்’ வின்செண்ட், மகேந்திரன், ‘சுந்தர பாண்டியன்’ காசி மற்றும் பலர் நடித்துள்ளனர். “ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஊரில் உள்ள சிறியவர்கள், பெரியவர்கள் என்று யாருக்கும் மரியாதை கொடுக்காமல்ரவுசு பண்ணுவது தான் சீமத்துரையின் அடையாளம் .அப்படி ஒரு அசால்ட் அடையாளத்துடன் யார் பேச்சையும் கேட்காமல் ஊருக்குள் சுத்திக் கொண்டிருப்பவனுக்குள் காதல் வந்தால் என்னநடக்கும் என்பதே இந்த படத்தின் கதைக்கரு. வாழ்வியலின் அங்கமான காதலையும், அதன் மேல் கொண்ட பாசத்தையும், கர்வத்தால் அழிந்து போகும் மனிதத்தையும் நிறம் மாறாமல்சொல்லும் படம் தான் ‘சீமத்துரை'”, என்கிறார் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன். ஜோஸ் ஃப்ராங்க்ளின் இசையில் பாடல்களை அண்ணாமலை, வீணை மைந்தன், ஹரி கிருஷ்ணதேவன் ஆகியோர் எழுதியுள்ளனர். D திருஞானசம்பந்தம் ஒளிப்பதிவு செய்ய, ’மேயாதமான்’ படத்தின் ’தங்கச்சி’ பாடலுக்கு நடனம் அமைத்த சந்தோஷ் முருகன் நடன இயக்குநராக பணியாற்றியி ருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை, ’பிச்சைக்காரன்’ படத்தின் படத்தொகுப்பாள ரான T வீர செந்தில்ராஜூம், கலை இயக்கத்தை ’மரகத நாணயம்’ படத்தின் கலை இயக்குநர் N K ராகுலும் மேற்கொண்டுள்ளனர். இணை தயாரிப்பு : ஸ்ரீநந்த் பன்னீர்செல்வம், புவன் மீடியா வொர்க்ஸ்., E சுஜய் கிருஷ்ணா தயாரிக்கிறார். நடிகர்கள், நடிகையர் கதைநாயகன் : கீதன் கதைநாயகி : வர்ஷா பொல்லம்மா […]
தீரன் அதிகாரம் ஒன்று கமர்ஷியல் படம்.!
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் கார்த்தி , தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு , ரகுல் ப்ரீத் சிங் , இயக்குநர் H.வினோத் , ஜிப்ரான் , கலை இயக்குநர் கதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கார்த்தி பேசியது :- தீரன் அதிகாரம் ஒன்று வழக்கமான போலீஸ் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் புதுமையான படமாக இருக்கும். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்துக்கு பின் […]
இரும்புத்திரை படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு ஜரூர்!
விஷால் ஒரே நேரத்தில் துப்பறிவாளன் மற்றும் இரும்புத்திரை ஆகிய படங்களில் நடித்து வந்தார். துப்பறிவாளன் சென்ற வருடமும் , இரும்புதிரை இந்த வருட பொங்கலுக்கும் வெளியாகவேண்டிய திரைப்படங்கள். விஷால் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க வேலையில் பரபரப்பாக இருந்ததால் சரியான நேரத்தில் இரண்டு படங்களையும் வெளியிட முடியவில்லை. இதனால் விஷாலுக்கு நஷ்டம் தான். ஆனால் அதையெல்லாம் மறக்கடிக்கும் வகையில் இந்த வருடம் துப்பறிவாளன் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை […]