காதலர்களின் சங்கேத வார்த்தையாக கருதப்பட்ட ‘143’ – நவம்பர் 10ல் ரிலீஸ்!

காதலர்களின் சங்கேத வார்த்தையாக கருதப்பட்ட ‘143’ – நவம்பர் 10ல் ரிலீஸ்!

Eye Talkies பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் சதீஷ் சந்திரா பாலேட் தயாரித்துள்ள திரைப்படம் ‘143.’ இந்தப் படத்தில் இயக்குநர் ரிஷி கதாநாயகனாக நடித்து, எழுதி இயக்கியிருக்கிறார். நாயகிகளாக பிரியங்கா ஷர்மா, நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள். அனுபவ நடிகர்களான விஜயகுமார், கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மற்றும் சுதா, ராஜசிம்மன் பிதாமகன் மகாதேவன் , நெல்லை சிவா, சோனா ‘முண்டாசுப்பட்டி’ பசுபதி இவர்களுடன் தயாரிப்பாளர் சதீஷ் சந்திரா பாலேட்டும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

 

Priyanka Sharma, Rishi in 143 Tamil Movie Stills

காதலர்களின் சங்கேத வார்த்தையாக கருதப்பட்ட ‘143’ அதாவது ‘I LOVE YOU’ என்கிற வார்த்தைகளின் சுருக்கமே ‘143’ என்கிற இந்தப் படத்தின் தலைப்பாகும். இந்தத் தலைப்பினை இதுவரை இன்றைய தலைமுறை இயக்குநர்கள்கூட கண்டு கொள்ளாமல் இருந்தது ஆச்சர்யம்தான். இதைக் கச்சிதமாகப் பிடித்துக் கொண்ட இயக்குநர் ரிஷி இதற்கேற்ற காதல் கதையில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் ரிஷி பேசும்போது, “அமாவாசை அன்று பிறந்த நாயகன் கார்த்திக்(ரிஷி). பெளர்னமி அன்று பிறந்த நாயகி மது.(பிரியங்கா ஷர்மா)இவர்கள் காதலுக்கு வில்லனாக சூரியன்(ராஜசிம்மன்). இப்படி மூன்று கதாபாத்திரங்களின் ஓட்டமே இந்தப் படத்தின் திரைக்கதையாக்கம். படம் ஒரு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது…” என்றார்.

RPM Cinemas சார்பில் விநியோகஸ்தர் ராகுல், இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் வரும் நவம்பர் 10-ம் தேதியன்று வெளியிடுகிறார். ஒளிப்பதிவு – ராஜேஷ் ஜே.கே., இசை – விஜய் பாஸ்கர், பாடல்கள் – கபிலன் வைரமுத்து, அறிவுமதி, சினேகன், கபிலன், கலை – மணிமொழியன், சண்டை பயிற்சி – தீப்பொறி நித்யா, படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், தயாரிப்பு மேற்பார்வை – பிரபாகரன், தயாரிப்பு – சதீஷ் சந்திரா பாலேட், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரிஷி.

Related Posts

error: Content is protected !!