32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 999 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 999)
சாமிக்கு அர்ச்சனையை வீட்டில் அமர்ந்தபடியே பண்ணலாம்! Running News

சாமிக்கு அர்ச்சனையை வீட்டில் அமர்ந்தபடியே பண்ணலாம்!

இப்போதெல்லாம் டிவிக்களில் நேரடி ஒளிபரப்புக்கு பஞ்சமே இல்லை. கிரிக்கெட் தொடங்கி ஆண்மைக் குறைவு வரை விளக்கம் சொல்லி அதையும் நேயர்களிடம் போனில் பேசி அப்டேட் மேட்டராக டெலிகாஸ்டாவது சாதாரணமாகி விட்டது.அந்த ‘லைவ் கான்செப்ட்’ ஆன்மிகத்தையும் விட்டு வைக்கவில்லை. இன்ராக்டிவ் டி.வி முதன் முறையாக புதுமையான ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது. அந்த நிகழ்ச்சிக்கு பெயர் ஐ பிரார்த்தனை. தினமும் காலை 7 மணிக்கு இது ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு புகழ்பெற்ற கோயிலை காட்டி அதன் அருமை […]

May 19, 2014 admin
அத்வானி காலில் விழுந்து ஆசி வாங்கிய மோடி! Running News

அத்வானி காலில் விழுந்து ஆசி வாங்கிய மோடி!

கடந்த ஆண்டு, நரேந்திர மோடியை பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளராக பாஜக தலைமை தேர்வு செய்தபோது அந்த முடிவை ஒப்புக் கொள்ளாத அத்வானியை மேலிடத் தலைவர்கள் அடுத்தடுத்து பேசி அத்வானியை சமாதானப்படுத்தினர். இருந்தாலும் மோடி தலைமையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் தொடர்பான பிரசாரங்கள் மீது அத்வானி ஆர்வம் காட்டவில்லை. இந் நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜக அணி அமோக வெற்றி பெற்ற பிறகு அத்வானியும், நரேந்திர மோடியும் ஒரே மேடையில் தோன்றினர். அப்போது தனது காலில் விழுந்த […]

May 18, 2014 admin
மோதிர மவுஸ் வந்தாச்சு! Running News

மோதிர மவுஸ் வந்தாச்சு!

இன்றைய (டேபுள் கம்யூட்டர்கள்) கணிப்பொறிகள் இயங்குவதில் மவுஸ் முக்கிய பங்கு வகித்து வருகிறது. கனிப்பொறி திரையில் நமக்கு தேவையானவற்றை நேரடியாக தேர்வு செய்ய இந்த மவுஸ் பயன்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள மவுஸ்கள் மனிதனின் உள்ளங்கை அளவில் உள்ளது. வயர் இணைப்பு, புளூடூத் போன்ற இணைப்புகள் மூலமாக இந்த மவுஸ்கள் செயல்படுகின்றன. தனிநபர் கனிப்பொறி மற்றும் லேப்டாப்களில் கூட இந்த மவுஸ்களின் பயன்பாடு இருந்து வருகிறது. ஆனாலும் உள்ளங்கை அளவு இருந்த மவுசின் வடிவம் மட்டும் மாறாமல் இருந்தது. தற்போது […]

May 18, 2014 admin
ஸ்டாலின் ராஜினாமா + வாபஸ்! பக்கா டிராமாவென அழகிரி மகன் கமெண்ட்! Running News

ஸ்டாலின் ராஜினாமா + வாபஸ்! பக்கா டிராமாவென அழகிரி மகன் கமெண்ட்!

தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கருணாநிதியிடம் ஸ்டாலின் பொருளாளர் உள்ளிட்ட கட்சி பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்து கடிதம் அளித்திருந்ததாகவும் ஆனால் ஸ்டாலின் ராஜினாமா முடிவை ஏற்க திமுக தலைவர் கருணாநிதி மறுத்ததையடுத்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பதவி விலகும் முடிவை திரும்பப் பெற்றார். முன்னதாக இவ்விவகாரம் தொடர்பாக மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ தலைவர் கருணாநிதி மு.க.ஸ்டாலினின் ராஜினாமா கடிதத்தை ஏற்பது வரை இதை செய்தியாக்க வேண்டாம். அனைத்து திமுக மாவட்ட செயலர்களும் […]

May 18, 2014 admin
வங்கிப் பணம் பாட்டன் சொத்தா? By கதிர் Running News

வங்கிப் பணம் பாட்டன் சொத்தா? By கதிர்

இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை மீட்பது நடக்கிற காரியமாக தெரியவில்லை. ஸ்விட்சர்லாந்து அரசுக்கு இந்திய நிதியமைச்சர் மூன்று மாதத்தில் நான்கு கடிதம் எழுதிவிட்டார். சுப்ரீம் கோர்ட் இந்த விவகாரத்தில் அரசின் காதைப் பிடித்து திருகுவதை ஸ்விஸ் அரசும் அங்குள்ள வங்கிகளும் வேடிக்கை பார்க்கின்றன. சிதம்பரத்துக்கு பெப்பே காட்டுகின்றன. வரி ஏய்ப்பு செய்தவர்களை பற்றி தகவல் தருவதாக இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்திருந்தும் இந்த பரிதாபம்.’இந்த நபர்கள் அல்லது நிறுவனங்கள் வரிகளை செலுத்தாமல் ஏமாற்றியுள்ளனர்’ […]

May 18, 2014 admin
ஷங்கரின் உதவியாளர் இயக்கும் கப்பல் மினி ஆல்பம்! Running News

ஷங்கரின் உதவியாளர் இயக்கும் கப்பல் மினி ஆல்பம்!

இயக்குனர் ஷங்கரின் பட்டறையிலிருந்து வெளிவந்துள்ள உதவியாளர் இயக்குனராக அறிமுகமாகிறார். அவரின் பெயர் கார்த்திக் ஜி.கிரிஷ். ஷங்கரிடம் ‘சிவாஜி’, ‘எந்திரன்’ ஆகிய படங்களில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.இவர் இப்போது கப்பல் என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தின் தலைப்பான ‘கப்பல்’ கதையின் போக்கையும், கதையில் வரும் கதாபாத்திரங்களின் பயணத்தையும் எதிரொலிக்கும் என்றார்.

May 18, 2014 admin
பாராளு மன்ற உறுப்பினர்களின் புது டைமென்ஸன்.! Running News

பாராளு மன்ற உறுப்பினர்களின் புது டைமென்ஸன்.!

GREEN – பச்சை – 543 உறுப்பினர்களை கொண்ட லோக்சபா தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த உடன் பலருக்கு பெருமூச்சு – அப்பாடா நிலையான ஒரு அரசாங்கத்தை காண்போம் என்று. அது என்ன? மெஜாரிட்டிக்கு தேவையான 272 பிளஸ் பி ஜேபி தனியாகவே பெற்று விட்டதால் இந்த கூட்டணி தர்ம குன்டாந்தடி எம் பிகளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி. அடுத்து பிஜேபியுடன் ஒட்டி கொண்ட அலையன்ஸ் என்ற ஒரு கும்பலும் 272 பிளஸ்க்கு மேலே ஒட்டி கொண்டிருப்பதால் […]

May 18, 2014 admin
16–வது பாராளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் + படிக்காதோர் + வயதானோர் அதிகம்! Running News

16–வது பாராளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் + படிக்காதோர் + வயதானோர் அதிகம்!

பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு கோரி பெண்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தாலும் 543 உறுப்பினர்களை கொண்ட இந்திய பாராளுமன்றத்துக்கு இதுவரை நடைபெற்றுள்ள 15 தேர்தல்களிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே பெண்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். சுதந்திரத்துக்குப்பின் நடைபெற்ற முதல் தேர்தலில் (1952–ம் ஆண்டு) 5 சதவீத பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு முன் நடந்த 15 தேர்தல்களில் மிக குறைந்த அளவாக 1977–ம் ஆண்டைய தேர்தலில், வெறும் 4 சதவீத பெண்களும், அதிகபட்சமாக கடந்த […]

May 18, 2014 admin
தமிழகத்தில் “நோட்டா” -வுக்கு எதிர்கட்சி அந்தஸ்து! Running News

தமிழகத்தில் “நோட்டா” -வுக்கு எதிர்கட்சி அந்தஸ்து!

இந்தியாவில் முதன்முறையாக ‘நோட்டா’ பொத்தான், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் அறிமுகமானது. ஆனால் தேர்தல் ஆணையம் எதிர்பார்த்ததை விட அதிமான எண்ணிக்கையில் இந்திய மக்கள் நோட்டாவுக்கு தங்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரத்தின் கடைசி பட்டனாக, ’மேலே உள்ள யாரும் இல்லை’ (None Of The Above) என்பதே நோட்டா வாகும்.அதிலும் தமிழகத்தில் போட்டியிட்ட உதிரி கட்சிகளை விட எக்கச்சக்கமான வாக்குகளை பெற்று, நோட்டா கிட்டத்தட்ட எதிர்கட்சி அந்தஸ்தை பெற்று சகலரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது கடந்த […]

May 17, 2014 admin
மோடி வரும் 21-ம் தேதி பிரதமர் பொறுப்பேற்கிறார்! Running News

மோடி வரும் 21-ம் தேதி பிரதமர் பொறுப்பேற்கிறார்!

வருகிற 20 ஆம் தேதியன்று பா.ஜ.க. எம்.பி.க்களின் கூட்டத்தை கூட்டி நரேந்திர மோடியை பிரதமராக தேர்வு செய்வது என்று டெல்லியில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் மோடியை ஆட்சியமைக்க குடியரசு தலைவர் அழைப்பு விடுத்த பின்னர், மோடி தலைமையிலான அமைச்சரவை வருகிற 21 ஆம் தேதி பதவியேற்கும் எனத் தெரிகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று […]

May 17, 2014 admin
உடனடி செய்திகள்