தமிழகத்தில் “நோட்டா” -வுக்கு எதிர்கட்சி அந்தஸ்து!

தமிழகத்தில் “நோட்டா” -வுக்கு எதிர்கட்சி அந்தஸ்து!

இந்தியாவில் முதன்முறையாக ‘நோட்டா’ பொத்தான், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் அறிமுகமானது. ஆனால் தேர்தல் ஆணையம் எதிர்பார்த்ததை விட அதிமான எண்ணிக்கையில் இந்திய மக்கள் நோட்டாவுக்கு தங்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரத்தின் கடைசி பட்டனாக, ’மேலே உள்ள யாரும் இல்லை’ (None Of The Above) என்பதே நோட்டா வாகும்.அதிலும் தமிழகத்தில் போட்டியிட்ட உதிரி கட்சிகளை விட எக்கச்சக்கமான வாக்குகளை பெற்று, நோட்டா கிட்டத்தட்ட எதிர்கட்சி அந்தஸ்தை பெற்று சகலரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது
NOTA Right to Reject
கடந்த தேர்தல்களில் பல்வேறு வாக்காளர்கள், குறிப்பாக இளைய தலைமுறை, பல்வேறு கட்சிகள் மீது பெரிய அளவில் அதிருப்தி கொண்டிருப்பவர்கள் ஆகியோர் வாக்களிக்காமல் இருப்பதை உணர்ந்த தேர்தல் ஆணையம் மக்களின் சில பகுதியினராவது வோட்டு போட வந்து இந்த நோட்டாவை அமுக்குவார்கள் என்ற நோக்கத்தில்தான் இதனை அறிமுகம் செய்தது. ஆனால், தேர்தல் ஆணையம் மட்டுமல்ல, அனைத்து தரப்பினரையும் ஆச்சர்யம் அடையச் செய்யும் அளவுக்கு நாடெங்கிலும் நோட்டா பதிவாகியுள்ளது. நாட்டில் ஏற்கனவே கட்சிகள் எண்ண முடியாத அளவில் இருக்கும்போது, இந்த பொத்தானுக்கு வேலை இல்லை என்று நினைத்தவர்கள புதிய வாக்காளர்கள், இளைய தலைமுறை, கட்சிகள் மீது பெரிய அளவில் அதிருப்தி கொண்டிருப்பவர்கள் ஆகியோர் வாக்களிக்காமல் இருப்பதை உணர்ந்த தேர்தல் ஆணையம், இந்த பட்டியலில் வரும் மக்களின் சில பகுதியினராவது நோட்டாவை பயன்படுத்துவார்கள் என்ற நோக்கத்தில் இதனை அறிமுகம் செய்தது. ஆனால், தேர்தல் ஆணையம் மட்டுமல்ல, அனைத்து தரப்பினரையும் அப்செட் அடையச் செய்யும் அளவுக்கு நாடெங்கிலும் நோட்டா பதிவாகியுள்ளது. குறிப்பாக் நாட்டில் ஏற்கனவே கட்சிகள் எண்ண முடியாத அளவில் இருக்கும்போது, இந்த பொத்தானுக்கு வேலை இல்லை என்று நினைத்தவர்கள அத்தனை பேரும் வாயடைத்து போயுள்ளனர்.

தற்போது நாட்டிலேயே அதிகபட்சமாக நோட்டா பொத்தானை அழுத்தியவர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி பீஹார், தமிழகம், மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களில்தான் நோட்டா பதிவு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. மொத்தத்தில் நாடு முழுவதும் 59,78,208 பேர் இவ்வாறு வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதைக் குறிப்பிடும் விதத்தில் நோட்டாவில் வாக்கினைப் பதிவு செய்துள்ளதாகவும் இது மொத்த வாக்காளர்களில் 1.1 சதவீதம் பேர் என்றும் தேர்தல் ஆணையத்தின் தகவல் தெரிவிக்கிறது.

அதிலும் மாநில அளவில் தமிழகத்தின் மொத்த 39 தொகுதிகளில் 31 தொகுதிகளின் மக்கள் இந்த புது வேட்பாளரான நோட்டாவை பயன்படுத்தி உள்ளனர். 26 தொகுதிகள் கொண்ட குஜராத்தில், 23 தொகுதிகளில் நோட்டா பதிவாகி உள்ளது. 42 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் 32 தொகுதிகளின் நோட்டா பதிவானது. இந்த சாதனையில் தமிழகம் தான் முதலிடம் பெற்றுள்ளது. முக்கியமாக நீலகிரி தொகுதியில், வாக்காளர்கள் களத்தில் போட்டியிட்ட கட்சிகளையெல்லாம் ஒதுக்கி விட்டு நோட்டாவுக்கு வாக்குகளை மிகப் பெரிய அளவில் பதிவு செய்துள்ளனர். இந்த தொகுதியில் 46,559 பேர் நோட்டாவில் வாக்களித்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுகவுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தை நோட்டா பெற்று எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.இதற்கு அடுத்த இடத்தை தான் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts