16–வது பாராளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் + படிக்காதோர் + வயதானோர் அதிகம்!

16–வது பாராளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் + படிக்காதோர் + வயதானோர் அதிகம்!

பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு கோரி பெண்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தாலும் 543 உறுப்பினர்களை கொண்ட இந்திய பாராளுமன்றத்துக்கு இதுவரை நடைபெற்றுள்ள 15 தேர்தல்களிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே பெண்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். சுதந்திரத்துக்குப்பின் நடைபெற்ற முதல் தேர்தலில் (1952–ம் ஆண்டு) 5 சதவீத பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு முன் நடந்த 15 தேர்தல்களில் மிக குறைந்த அளவாக 1977–ம் ஆண்டைய தேர்தலில், வெறும் 4 சதவீத பெண்களும், அதிகபட்சமாக கடந்த 2009–ம் ஆண்டு நடந்த தேர்தலில் 10.7 சதவீத பெண்களும் (58 பேர்) எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது நடைபெற்று முடிந்த 16–வது பாராளுமன்ற தேர்தலில், சோனியா காந்தி, சுஷ்மா சுவராஜ், ஹேமமாலினி உள்ளிட்ட 61 பெண்கள் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுவரை நடந்த தேர்தல்களில் இதுவே அதிகபட்சமாக (11.3 சதவீதம்) தேர்வு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்கள் ஆவர்.
Women's-in parli 33
மேலும் அமைய உள்ள 16–வது பாராளுமன்றத்தில், 253 எம்.பி.க்கள், அதாவது 47 சதவீதம் பேர், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். எனவே, இந்த பாராளுமன்றம்தான், வயதானவர்களை அதிகம் கொண்டதாக உள்ளது. 86 வயதான பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானிதான், மிக அதிக வயதானவர் ஆவார். 13 சதவீதம்பேர் (71 எம்.பி.க்கள்) 40 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். தென்சென்னை எம்.பி. ஜெயவர்த்தன் உள்பட 5 பேருக்கு 26 வயதுதான் ஆகிறது.

அதே சமயத்தில், இந்த பாராளுமன்றத்தில் படித்தவர்கள் குறைவாக உள்ளனர். 75 சதவீதம்பேர் தான் பட்டதாரிகள். 6 சதவீதம்பேர் டாக்டர் 13 சதவீதம்பேர், உயர்நிலைப்பள்ளி தேர்வைக்கூட முடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts