சாமிக்கு அர்ச்சனையை வீட்டில் அமர்ந்தபடியே பண்ணலாம்!
இப்போதெல்லாம் டிவிக்களில் நேரடி ஒளிபரப்புக்கு பஞ்சமே இல்லை. கிரிக்கெட் தொடங்கி ஆண்மைக் குறைவு வரை விளக்கம் சொல்லி அதையும் நேயர்களிடம் போனில் பேசி அப்டேட் மேட்டராக டெலிகாஸ்டாவது சாதாரணமாகி விட்டது.அந்த ‘லைவ் கான்செப்ட்’ ஆன்மிகத்தையும் விட்டு வைக்கவில்லை. இன்ராக்டிவ் டி.வி முதன் முறையாக புதுமையான ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது. அந்த நிகழ்ச்சிக்கு பெயர் ஐ பிரார்த்தனை. தினமும் காலை 7 மணிக்கு இது ஒளிபரப்பாகிறது.

இந்நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு புகழ்பெற்ற கோயிலை காட்டி அதன் அருமை பெருமைகளை சொல்லிக்கொண்டிருப்பார்கள். அதன் தல வரலாறு பற்றி சொல்வார்கள். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் நேயர்கள். அந்த கோவிலில் உள்ள சாமிக்கு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று நினைத்தால் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது அதன் அடியில் ஒரு தொலைபேசி எண் இருக்கும். அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசி தங்கள் பெயர், ராசி, நட்சத்திரத்தை சொன்னால். ஒரு அர்ச்சகர் தோன்றி உங்கள், பெயர், ராசி, நட்சதிரத்தை சொல்லி அர்ச்சனை செய்வார். அது அப்படியே நேரடியாக ஒளிபரப்பாகும். நீங்கள் உங்கள் பெயரில் அர்ச்சனை நடப்பதை வீட்டில் இருந்தபடியே டி.வி.திரையில் பார்த்து சாமியை கும்பிட்டுக் கொள்ளலாம்.
இதுப் பற்றி “அர்ச்சனைக்கு தினமும் ஒரு கோயில் விசேஷமானது இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் தினமும் ஒரு கோயிலுக்கு போவது இயலாத காரியம். இந்த நிகழ்ச்சி மூலம் கோயிலுக்கு போக முடியாத ர்கள் தங்கள் இஷ்டதெய்வத்துக்கு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ளலாம்” என்கிறார்கள் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். நிகழ்ச்சி புதுமையாக இருக்கிறது. ஹும்/ இது கொஞ்சம் பாப்புலராகி விட்டால் அப்படியே காப்பி அடித்து இங்குள்ள சகல சேனல்காரர்களும் அர்ச்சனையை தொடங்கி விடுவார்களே!.


