32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11700 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1164 / 1170
செய்திகள் வரிசை (பக்கம் 1164)
ரசாயன ஆயுதங்களை தடை செய்யும் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு Running News

ரசாயன ஆயுதங்களை தடை செய்யும் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு

2013ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு O.P.C.W அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. நார்வே தலைமையகம் ஓஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசை பெற O.P.C.W அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்தது. O.P.C.W அமைப்பு என்பது ரசாயன ஆயுதங்களை தடை செய்யும் அமைப்பு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசானது பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.7.70 கோடி ரொக்கப் பரிசு ஆகியவற்றைக் கொண்டதாகும். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் […]

October 11, 2013 admin
டென்ஷனை குறைக்க உதவும் டான்ஸ்! Running News

டென்ஷனை குறைக்க உதவும் டான்ஸ்!

அமெரிக்காவில் அறிமுகமான ஸும்பா (ZUMBA) நடனம், இன்று உலகம் முழுக்க பிரபலம். ஒரு கோடியே 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த நடனத்தை கற்று உடலை ஃபிட்டாகவும், நளினமாக வைத்திருக்கின்றனர் என்ற தகவல் வியக்க வைக்கிறது! உடலையும், மனதையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் புதுமையான இந்தப் புத்துணர்ச்சி நடனம், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எம்.எஸ்.எம். டான்ஸ் ஸ்கூலில் கற்றுத்தருவதாக வந்த தகவல் நம் காதுக்குள் பாய, உடனே நாம் அங்கு ஆஜர்! ஆட வைக்கும் அதிரடி இசையும், சோம்பிக் […]

October 11, 2013 admin
ஒரு வேளை சாப்பாடு ஜஸ்ட் ஒரு ரூபாய்! Running News

ஒரு வேளை சாப்பாடு ஜஸ்ட் ஒரு ரூபாய்!

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி வெறி கொண்டு முழங்கிய தமிழ் இனத்தில்தான், சொட்டுப்பாலுக்கு வக்கில்லாமல், சாலையோர அழுக்கு மூட்டைகளோடு மூட்டைகளாகக் கிடக்கும் குழந்தைகளும், சினிமா நடிகனின் கட்-அவுட்டுக்கு பால் வார்க்கும் புண்ணியவான்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு நண்பர் ஆரூரன் மூலமாக எனக்கு அந்த மெஸ் அறிமுகமானது. அது ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடில் நல்லசாமி மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் A.M.V மெஸ். சுவையான உணவுப் பதார்த்தங்களை அநேகமாக […]

October 11, 2013 admin
“ச்சீ..ச்சீ..கெளதம் மேனன் படம் புளிக்கும்!” – சூர்யா ஸ்டேட் மென்ட் Running News

“ச்சீ..ச்சீ..கெளதம் மேனன் படம் புளிக்கும்!” – சூர்யா ஸ்டேட் மென்ட்

சூர்யா – கெளதம் மேனன் இருவரும் இணைந்து ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ ஆகிய படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள். இந்நிலையில் மீண்டும் ’துருவ நட்சத்திரம்’ என்னும் படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாக அறிவித்தார்கள். சூர்யா, பார்த்திபன், சிம்ரன் மற்றும் பலர் நடிக்க கெளதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்று படப்பூஜை போடப்பட்டு, படத்தின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.அதற்குப் பிறகு எப்போது படப்பிடிப்பு, யாரெல்லாம் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள் என்று எதுவுமே தெரியாமலிருந்த. நிலையில் தற்போது சூர்யா, தான் கெளதம் […]

October 11, 2013 admin
மலடாக மாற்றப்படும் விவசாய பூமிகள்! Running News

மலடாக மாற்றப்படும் விவசாய பூமிகள்!

தமிழ்நாட்டில் எந்த ஒரு ஊரிலும் இன்று விவசாயம் செழிப்பாக நடைபெறவில்லை. மாறாக ரியல் எஸ்டேட் தொழில்தான் நன்றாக செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது.நேற்றுவரை பயிர் செழித்து வளர்ந்து உணவு தந்த பூமி, இன்று மலடாக மாற்றப்பட்டு விட்டது. நகர்ப்புற விரிவாக்கமும், ரியல் எஸ்டேட் பெருக்கமும் ஊரில் இருந்த குளங்களையும், ஏரிகளையும், வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்சும் சிறு சிறு கால்வாய்களையும் தூர்ந்து போகச் செய்துவிட்டன. நகர்ப்புறங்களை விரிவாக்குவதால் நாடு விரிவடைவதாக நவீனப் பொருளாதார மேதைகள் சொல்கின்றனர்.உணவு தரும் நிலங்களை அழித்தோமானால் […]

October 11, 2013 admin
சர்வதேச எல்லையை கடக்கும் தமிழக மீனவர்களுக்கு ஸ்பெஷல் செல்போன்! Running News

சர்வதேச எல்லையை கடக்கும் தமிழக மீனவர்களுக்கு ஸ்பெஷல் செல்போன்!

“வெகு காலமாக சர்வ தேச கடல் எல்லையை தமிழ்க் மீனவர்கள் தெரிந்தே கடந்து செல்கின்றனர் என்று ஒரு சாரார் கூறுவதுண்டு. ஆனால் அப்படி யாராவது போவதாக இருந்தாலும், நாங்கள் கண்டுபிடித்துள்ள கருவிகள் செல்போனில் எழுப்பும் அபாய ஒலி மூலம், அவர்களின் மன எண்ண ஓட்டங்களில், ஒரு கட்டத்தில் மாற்றங்கள் வரக்கூடும்.”என்று நம்பிக்கை தெரிவிக்கின்ற்னர் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் விஞ்ஞானிகள். இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே சர்வதேச கடல் எல்லையில் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. கடல் எல்லையைக் […]

October 11, 2013 admin
சர்வதேச பெண் குழந்தைகள் தினம – அக்டோபர் 11 Running News

சர்வதேச பெண் குழந்தைகள் தினம – அக்டோபர் 11

இப்போதைய நவீன உலகிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படும அநீதியைக் கண்டித்தும். பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும் அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும் 2011 டிச., 19ம் தேதி ஐ.நா, சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி அக்., 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. “பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்” என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து. தற்போது பிறந்த பெண் குழந்தைகள் தொடங்கி 80 வயது வரை உள்ள பெண்களுக்கு […]

October 11, 2013 admin
இன்னொருவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தணுமா? அப்ப இதைப் படிங்க! Running News

இன்னொருவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தணுமா? அப்ப இதைப் படிங்க!

வங்கிகள்  தங்கள் வாடிக்கையாளர் குறித்த உண்மை விவரங்களை வைத்திருப்பதுடன்  முறைகேடான பண பரிமாற்றத்தை தடுக்க கவனமாக செயல்பட வேண்டும்’ என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதை பின்பற்றி பல வங்கிகள் புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்த துவங்கியுள்ளன இப்போதெல்லாம் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் லஞ்ச பணத்தை தருவோரிடம் தங்கள் உறவினர் பெயரில் டிபாசிட் செய்ய சொல்கின்றனர். பின்னர் சி.பி.ஐ.,அல்லது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையின் போது பணம் செலுத்திய நபரின் விவரங்களை வங்கிகளிடம் கேட்கின்றனர். எனவே தான் வங்கி […]

October 11, 2013 admin
கூகுளில் இனி குற்றவாளிகளின் புகைப்படம் இருக்காது! Running News

கூகுளில் இனி குற்றவாளிகளின் புகைப்படம் இருக்காது!

இதுவரை கூகுள் தேடுதலில் கிடைக்காத படங்களே இல்லை என்ற நிலையில் தற்போது குற்றவாளிகளின் புகைப்படங்களை தனது தேடுதளத்தில் இருந்து நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. பொதுவாக் குற்றவாளிகள் தங்களது கைகளில் தன்னை பற்றிய குறிப்புகள் அடங்கிய பலகையுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் மக் ஷாட் எனப்படுகின்றன. இவற்றை தனது தேடுதளத்தில் இருந்து நீக்குவதால் குற்றவாளிகள் தங்களது குற்ற நினைவுகளில் இருந்து விடுபட்டு இயல்பாக இருக்க முடியும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் “சட்ட அமலாக்க கழகங்களின் உதவியுடன் […]

October 10, 2013 admin
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு:சச்சின் அறிவிப்பு Running News

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு:சச்சின் அறிவிப்பு

200வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக இந்திய நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பிசிசிஐ-க்கு எழுதிய கடிதத்தில் அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான 2வது போட்டி சச்சினுக்கு 200வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகும். சமீபத்தில் ஒரு நாள் போட்டியிலிருந்து சச்சின் ஓய்வு பெற்றுள்ள நிலையில், தற்போது டெஸ்ட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதன் மூலம், கிரிக்கெட் விளையாட்டுக்கு சச்சின் முற்றிலும் விடை கொடுத்துள்ளார். […]

October 10, 2013 admin
உடனடி செய்திகள்