32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11700 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1170 / 1170
செய்திகள் வரிசை (பக்கம் 1170)
திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு கடும் சிரமம் – பந்த் எதிரொலி! Running News

திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு கடும் சிரமம் – பந்த் எதிரொலி!

ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானாவைப் பிரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் ஆந்திராவின், 13 மாவட்டங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.அதனால் திருப்பதியில் 48 மணிநேரமும் சித்தூரில் 72 மணிநேரமும் முழு அடைப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது. மேலும் திருப்பதிக்கு வரும் அனைத்து முக்கிய சாலைகளிலும் ஆங்காங்கே மரங்கள் சாய்க்கப்பட்டும், கற்களையும் வைத்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனால் இரவு ரயில் மூலம் புறப்பட்ட பக்தர்கள் காலை திருப்பதி ரயில் […]

October 5, 2013 admin
ஹிமாச்சல பிரதேச சுற்றுலா சுற்றுலா கழகத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள் Running News

ஹிமாச்சல பிரதேச சுற்றுலா சுற்றுலா கழகத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள்

ஹிமாச்சல பிரதேச சுற்றுலா மேம்பாட்டு கழகத்தில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Manager (F & B) காலியிடங்கள்: 02 வயதுவரம்பு: 45-க்குள் இருத்தல் வேண்டும். சம்பளம்: ரூ.10,300 + கிரேடு சம்பளம் ரூ.4,200 கல்வித்தகுதி: ஹாஸ்பிட்டாலிட்டி & ஹோட்டல் நிர்வாகத்தில் பி.எஸ்சி படிப்புடன் பிரபலமான ஹோட்டல்களில் Food & Beverage துறைகளில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்பிஏ, சுற்றுலா நிர்வாகத்தில் முதுகலை படிப்புடன் […]

October 5, 2013 admin
பல் வழியே பார்வை – இங்கிலாந்து டாக்டரின் சாதனை Running News

பல் வழியே பார்வை – இங்கிலாந்து டாக்டரின் சாதனை

1998-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் இயன் டிபெட்ஸ் (43) என்ற தொழிலாளியின் வலது கண்ணில் இரும்பு துண்டு பாய்ந்தது. அடிப்பட்ட கண்ணில் அடிக்கடி வலியுடன் நீர் வடியும் நிலையில் அவர் மிகவும் அவதிப்பட்டு வந்தார்.நாளடைவில், அந்த கண்ணின் பார்வை சுத்தமாக பறிபோனது. இதனால் அவர் வேலையை விட்டு நிற்க வேண்டிய பரிதாப சூழ்நிலை ஏற்பட்டது. அவரது இடது கண்ணின் பார்வையும் ஓரிரு ஆண்டில் பறிபோனதால், உலகமே இருண்ட நிலையில் சூன்ய பிரதேசத்தில் […]

October 5, 2013 admin
மலாலாவுக்கு மேலும் ஒரு ரஷ்ய விருது! Running News

மலாலாவுக்கு மேலும் ஒரு ரஷ்ய விருது!

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகம், கடந்த 30-ம் தேதி பெண் கல்வி போராளி மலாலாவுக்கு மனிதநேய பணிகளுக்கான இந்த (2013) ஆண்டின் பீட்டர் ஜே கோம்ஸ் விருதை வழங்கி கவுரவித்தது.இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட ரஷ்ய புலனாய்வு பத்திரிகையாளர் அன்னா பொலிட்கோவ்ஸ்கியா பெயரில் வழங்கப்படும் விருது மலாலாவுக்கு அளிக்கப்பட உள்ளது.இது தவிர, ஐரோப்பிய பாராளுமன்றம் வழங்கும் சிறப்பு மிக்க ‘சகாரோவ் மனித உரிமை பரிசு’க்கு தேர்வு செய்யப்பட்ட இறுதிபட்டியலில் இவரது பெயரும் […]

October 5, 2013 admin
அரவாணி – ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான 24 மணி நேர ரேடியோ’-:பெங்களூரில் குரல் எழுப்பியது Running News

அரவாணி – ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான 24 மணி நேர ரேடியோ’-:பெங்களூரில் குரல் எழுப்பியது

இந்தியாவிலேயே முதல் முறையாக ஓரினச் சேர்க்கையாளர்கள், ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்கள் மற்றும் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்களுக்கு என பிரத்யேகமான 24 மனிநேர வானொலி சேவையை பெங்களூரை சேர்ந்த ‘கியூ ரேடியோ’ துவக்கியுள்ளது.மேற் கண்ட சமுதாயத்தினருக்கான சிறப்பு தகவல்கள், மருத்துவ குறிப்புகள், நேயர் விருப்ப பாடல்கள் ஆகியவை 24 மணி நேரமும் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. ரேடியோவாலா.இன் என்ற நிறுவனம் இந்த ஒலிபரப்பை ஏற்பாடு செய்துள்ளது. இவர்களுக்கு என தனியாக ரேடியோ சேவை தொடங்கும் எண்ணம் எப்படி […]

October 5, 2013 admin
5 மாநிலங்களுக்கான தேர்தல்  நவம்பர் 11 முதல் டிசம்பர் 4 வரை!! Running News

5 மாநிலங்களுக்கான தேர்தல் நவம்பர் 11 முதல் டிசம்பர் 4 வரை!!

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், டெல்லி, ராஜஸ்தான், மிசோரத் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஐந்து மாநில தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் டெல்லியில் இன்று அறிவித்துள்ளார்.மேலும் ஏற்காடு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 4 ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கும் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.இதையடுத்து ,மேற்கூறிய ஐந்து மாநில தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் […]

October 4, 2013 admin
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.!.-கோடங்கி விமர்சனம் Running News

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.!.-கோடங்கி விமர்சனம்

தமிழ் சினிமாவில் இது விஜயசேதுபதி நேரம் போல… சமீபத்திய அவர் படங்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் ரசிகர்களை பிடித்துக் கொள்கிறது. படத்தில் கதையிருக்கிறதா… லாஜிக் இருக்கிறதா… நடிப்பு இருக்கிறதா… அது இருக்கிறதா… இது இருக்கிறதா… என்றெல்லாம் கேட்காமல் காசு கொடுத்து பார்க்கிறவன் ரசித்து விட்டு போகிறானா… பணம் போட்டு படம் எடுத்தவன் வசூலை வாரிக் கொள்கிறானா என்று மட்டும் பார்த்தால் இப்போதைய தயாரிப்பாளர்களின் ஒட்டு மொத்த ஓட்டும் விஜயசேதுபதிக்குத்தான் விழும்போல… ‘இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா’ படத்தின் […]

October 4, 2013 admin
குறைந்த வட்டியில் நுகர்வோர் சாதனங்களுக்கு தாராளமாக கடன்!- நிதி அமைச்சகம் உத்தரவு!! Running News

குறைந்த வட்டியில் நுகர்வோர் சாதனங்களுக்கு தாராளமாக கடன்!- நிதி அமைச்சகம் உத்தரவு!!

‘டிவி, பிரிஜ்’ உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி சென்ற ஜூலையில் 9.3 சதவீதம் குறைந்துள்ளது. இந்த வளர்ச்சி சென்ற ஆண்டு இதே மாதத்தில் 0.8 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் இத்துறையின் உற்பத்தி 12 சதவீதம் குறைந்துள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலத்தில் 6.1 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது.இந்நிலையில் நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், உற்பத்தி பொருட்களின் தேக்கத்தை போக்கவும், ‘டிவி, பிரிஜ், ஏ.சி., டூவீலர்’ […]

October 4, 2013 admin
தினமும் நஞ்சால் நாசமாகி வரும் வாழ்க்கை – ஓர் எச்சரிக்கை! Running News

தினமும் நஞ்சால் நாசமாகி வரும் வாழ்க்கை – ஓர் எச்சரிக்கை!

காலையில் தினமும் கண்விழித்ததிலிருந்து இரவில் தூங்கி மறுபடி எழும் வரை நாம் இயற்கையை விரட்டியடித்து நஞ்சிலேயே நம் வாழ்க்கையை நாசமாக்கி வருகிறோம் வாழ்கிறோம்…என்று சொன்னால் நம்புவதற்கு கஷடமாகத்தானே இருக்கு…. சந்தேகமிருந்தால் நீங்களே வந்து சற்றே பாருங்களேன் காலை எழுந்தவுடன் செயற்கை நாரிழையை பயன்படுத்தி அதிகம் நிகோடின் கொண்ட பற்பசையை அதிக விலைக்கு வாங்கி பல்லை துலக்குகிறோம் இதில் இயற்கை என்ற பெயரில் கிராம்பு உப்பு எலுமிச்சை என ஆதிகாலம் முதல் நாம் பயன்படுத்தி வந்த இயற்கை பொருட்களை […]

October 3, 2013 admin
திரைப்படங்கள் காலத்தைத்தானே காட்டுகின்றன? Exclusive

திரைப்படங்கள் காலத்தைத்தானே காட்டுகின்றன?

கதைகள், கவிதைகள், ஓவியங்கள், சிற்பங்கள், இசைப் பாடல்கள் இவைபோல திரைப்படங்களும் காலத்தைப் பிரதிபலிப்பவையே. கன்னத்தில் மரு இருந்தால் கண்ணாடி மருவையே காட்டும். மருவை மறைத்துக் காட்டும் தன்மை கண்ணாடிக்கு இல்லை. அதுபோன்றே நுண்கலைகளும் பிறந்த காலத்தைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் தகைமையுடையவை. காலத்தின் போக்கு ஒன்றாகவும், கலைகளின் போக்கு வேறொன்றாகவும் இருக்க முடியாது. காலத்தைத் தாண்டிப் பாயும் ஆற்றல் கலைகளுக்கு இல்லை. காலம் நல்லதாகவும் இருப்பதுண்டு; கெட்டதாகவும் இருப்பதுண்டு. காலத்தின் கருத்து என்பது அவ்வக் காலகட்டங்களில் வாழும் மனிதர்களின் […]

September 4, 2013 admin
உடனடி செய்திகள்