டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு:சச்சின் அறிவிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு:சச்சின் அறிவிப்பு

200வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக இந்திய நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பிசிசிஐ-க்கு எழுதிய கடிதத்தில் அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான 2வது போட்டி சச்சினுக்கு 200வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகும்.
10 - SACHIN-TENDULKAR-.mini
சமீபத்தில் ஒரு நாள் போட்டியிலிருந்து சச்சின் ஓய்வு பெற்றுள்ள நிலையில், தற்போது டெஸ்ட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதன் மூலம், கிரிக்கெட் விளையாட்டுக்கு சச்சின் முற்றிலும் விடை கொடுத்துள்ளார்.

ஓய்வு பெறும் முடிவு குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அவர் இன்று கடிதம் எழுதியுள்ளார்.அதில், 24 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுவது தனது கனவாக இருந்துள்ளதாகவும் கிரிக்கெட் இல்லாமல் தமது வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்றும், ஆதரவு தந்த கிரிக்கெட் வாரியத்துக்கும், ரசிகர்களுக்கும் நன்றி என்றும் கூறியுள்ள்தாக சச்சின் டெண்டுல்கர் சார்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ந் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம் பிடித்த சச்சின், 24 ஆண்டுகள் இந்திய அணிக்கு விளையாடியுள்ளார். 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 15,837 ரன்கள் எடுத்துள்ளார் என்பதுடன் .இதன் மூலம் அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சாதனை படைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sachin Tendulkar announces retirement
#####################################################
Sachin Tendulkar has announced his retirement after he plays his 200th test. Here is a statement from the Board of Control for Cricket in India.

error: Content is protected !!