32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11700 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1161 / 1170
செய்திகள் வரிசை (பக்கம் 1161)
ஒரு குழந்தைக்கு தாய்ப்பாலை விடவும் மருந்துகளே அதிகம்! Running News

ஒரு குழந்தைக்கு தாய்ப்பாலை விடவும் மருந்துகளே அதிகம்!

ஆரோக்கியத்தை ஹார்லிக்ஸ் பாட்டில்களிலும் அன்றாட சந்தோஷத்தை சாட்டிலைட் சானல்களிலும் அடகு வைத்துவிட்ட இன்றைய சமூகம் நிழலைத் தொடரும் நிஜமாக இருக்கிறது.பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்தாலும் குழந்தைப் பிறப்பில் எப்போதும் ஏற்றத்துடன்தான் இருக்கிறது. விஞ்ஞானம் இன்று ஒவ்வொரு பெண்ணின் வயிற்றைக் கிழித்து விட்டுதான் குழந்தையை வெளியில் எடுக்கிறது. ஒரு குழந்தைக்கு தாய்ப்பாலை விடவும் மருந்துகளே அதிகம் புகட்டப்படுகின்றன என்பது புரையோடிக் கொண்டிருக்கும் ஒரு புற்றுநோயாக சமூகத்தில் ஆகிக் கொண்டிருக்கிறது. திரைக்கடல் ஓடி திரவியம் தேடுகிறோமோ இல்லையோ, திரைப்படத்திற்காக தற்கொலை செய்து கொள்ளத் […]

October 15, 2013 admin
‘அல்லா’ என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்தக கூடாது:மலேசியா கோர்ட் தீர்ப்பு Running News

‘அல்லா’ என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்தக கூடாது:மலேசியா கோர்ட் தீர்ப்பு

‘அல்லா’என்ற சொல்லை முஸ்லிம் அல்லாத பிறமதத்தினர் பயன்படுத்த முடியாது என மலேசியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது, மலேசிய சிறுபான்மை மக்களின் உரிமை விவகாரத்தில் தலையிடும் முடிவு என்ற அளவில் மத ரீதியான பதற்றம் உருவாக வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது. மலேசியா நாட்டில் உள்ள அனைத்து மதத்தினரும் தங்களது கடவுள்களை குறிக்கும் வகையில் மலாய் மொழியில் ‘அல்லா’ என்ற சொல்லையே பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சொல் அரபு மொழியில் இருந்து மலாய் மொழிக்கு மருவி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், […]

October 15, 2013 admin
‘ஜில்லா’ நாயகன் விஜய் நடத்திய ரகசிய மீட்டிங்! Running News

‘ஜில்லா’ நாயகன் விஜய் நடத்திய ரகசிய மீட்டிங்!

நடிகர் விஜய்க்கும் ஆட்சியாளர்களுக்கும் பனிப்போர் நடந்து வருவது தமிழகத்துக்கே தெரியும். முந்தைய ஆட்சியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார் என்பதற்காகவே அவருடைய சுறா, வேட்டைகாரன், காவலன் போன்ற படங்களை அன்றைய ஆட்சி முடக்கியதால், அவர் அதிமுகவிடம் சென்று சரண் அடைந்தார். பின்னர் ஆட்சி மாறியபின், அவருடைய பிறந்தநாள் அன்று நடக்க இருந்த கூட்டத்திற்கு அனுமதி மறுத்து கூட்டத்தை நடத்தவிடாமல் அதிமுக ஆட்சியும் கடந்த ஆட்சி போல தொந்தரவு செய்தது, தலைவா படத்துக்கு தொடர்ந்து இடைஞ்சல் கொடுத்துவந்து படத்தை […]

October 14, 2013 admin
பாய்லின் புயல் தாக்கியதில் ஒடிசாவில் 90 லட்சம் பேர் பாதிப்பு:ரூ. 2400 கோடி சொத்துக்கள் நாசம் Running News

பாய்லின் புயல் தாக்கியதில் ஒடிசாவில் 90 லட்சம் பேர் பாதிப்பு:ரூ. 2400 கோடி சொத்துக்கள் நாசம்

வங்கக் கடலில் உருவான பாய்லின் புயல் கடந்த சனிக்கிழமை இரவு ஒடிசா மாநிலம் கோபால் பூருக்கு அருகில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. மிக பலத்த மழை பெய்தது.பாய்லின் புயல் வரலாறு காணாத அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டதால் ஒடிசா மாநில அரசு எல்லாவித நடவடிக்கைகளையும் எடுத்தது. சுமார் 9 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதன் […]

October 14, 2013 admin
ஆந்திராவில் அனைத்து பஸ்களுக்கும் ரூட கிளியர்! Running News

ஆந்திராவில் அனைத்து பஸ்களுக்கும் ரூட கிளியர்!

ஆந்திராவில் போராட்டம் வாபஸ் பெற்றதையடுத்து மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது. நேற்று இரவு முதல் கோயம்பேட்டில் இருந்து பஸ்கள் ஓடத்தொடங்கின.அத்துடன் திருப்பதி, சித்தூர், நெல்லூர், விஜயவாடா, ஐதராபாத், கடப்பா, கர்ணூல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் பஸ் போக்குவரத்து தொடங்கியது. தெலுங்கானா தனி மாநிலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தன. இதனால் தமிழகத்தில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக […]

October 14, 2013 admin
ஏர்டெல், ஐடியா சர்வதேச அழைப்புக் கட்டணங்கள் விர்ர்ர்! Running News

ஏர்டெல், ஐடியா சர்வதேச அழைப்புக் கட்டணங்கள் விர்ர்ர்!

தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள், சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளன.ஏர்டெல் நிறுவனம், சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணத்தை 80% உயர்த்தியுள்ளது. அதேப்போல, ஐடியா நிறுவனம் தனது சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணத்தை 25 சதவீதம் அளவுக்கு உயர்த்தியுள்ளன. இந்த மாதம் ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் காரணமாக இந்த கட்டண உயர்வு அறிவிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஐடியா நிறுவனமும் தனது சர்வதேச அழைப்புக்களின் கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தி விட்டது அமெரிக்கா, ஐரோப்பா, […]

October 14, 2013 admin
கௌரவக் கடனாளியாக்கும் தவணைகளைத் தவிர்ப்போம்! Running News

கௌரவக் கடனாளியாக்கும் தவணைகளைத் தவிர்ப்போம்!

உலகமயமாக்கல், நவீனமயமாக்கல் போன்ற சூழலால் தற்போது கிராமங்கள் நகரங்களாக மாறி வருகின்றன. அதற்கேற்ப மக்களின் வாழ்க்கைத் தரமும் மாறிவருகிறது. இதனைப் பயன்படுத்தி சிறிய, பெரிய நகரங்களில் பெருகிவரும் தனியார் வர்த்தக நிறுவனங்கள் ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் தங்கள் நிறுவனத்தின் பொருள்களை வாங்க வேண்டும் என்ற நுகர்வுக் கலாசாரத்தைத் திட்டமிட்டு வளர்க்கின்றன. மின்னணு சாதனங்களில் தொடங்கி மின்னும் தங்க நகைகள் வரையில் இப்படி தவணையில் விற்கப்படுகிறது. “0 சதவீதம்’ வட்டி, […]

October 14, 2013 admin
அதள பாதாளத்தை நோக்கி அமெரிக்கா பொருளாதாரம்?! Running News

அதள பாதாளத்தை நோக்கி அமெரிக்கா பொருளாதாரம்?!

அமெரிக்காவில் நிதி மசோதா நிறைவேறாததால் பல அரசு துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் அமெரிக்க பொருளாதாரம் பெரும் ஆபத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாக உலக வங்கி தலைவர் ஜிம் யெங் கிங் கூறியுள்ளார். இதற்கிடையில் கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டாலும், நிதிச் செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டாலும் அமெரிக்காவின் பொருளாதாரம் முடங்கும் நிலை ஏற்படும் என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார். நிதி நெருக்கடியால் அமெரிக்காவில் தொடர்ந்து 12வது நாளாக அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.அமெரிக்க அரசின் […]

October 14, 2013 admin
இறந்த குழந்தையை 2 நாட்கள் வயிற்றில் சுமந்த இந்தியப் பெண்- இங்கிலாந்து சோகம் Running News

இறந்த குழந்தையை 2 நாட்கள் வயிற்றில் சுமந்த இந்தியப் பெண்- இங்கிலாந்து சோகம்

சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் குமரேசன் என்ற பொறியியல் வல்லுநர் பணிநிமித்தம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவி நிரஞ்சனாவுடன் இங்கிலாந்திற்கு சென்றார். அவர்களுக்கு ஏற்கனவே 9 வயதில் ஒரு மகள் உண்டு. 33 வயதான நிரஞ்சனா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தபோது அவருக்கு செப்டம்பர் 18 ஆம் தேதி பிரசவத்துக்கான நாள் குறிக்கப்பட்டது. குறிப்பிட்ட தேதியைத் தாண்டி மூன்று நாட்கள் சென்றபின்னரும் அவருக்கு பிரசவத்திற்கான அறிகுறி எதுவும் தோன்றவில்லை. மேலும், குழந்தையின் அசைவும் அவருக்குப் புலப்படவில்லை. இதனால் […]

October 14, 2013 admin
ரெப்கோ வங்கியில் கிராஜூவேட் டிரெய்னி பணி வாய்ப்பு Running News

ரெப்கோ வங்கியில் கிராஜூவேட் டிரெய்னி பணி வாய்ப்பு

ரெப்கோ வங்கியின்கீழ் செயல்பட்டு வரும் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பெங்களூர் Yelanhanka கிளையில் கிராஜூவேட் டிரெய்னி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 25 பணி: கிராஜூவேட் டிரெய்னி கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கனடம் மற்றும் ஆங்கிலம் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் வயதுவரம்பு: 01.10.2013 தேதிப்படி 25-க்குள் இருத்தல் வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.10.2013 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.repcohome.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

October 14, 2013 admin
உடனடி செய்திகள்