32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11700 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 10 / 1170
செய்திகள் வரிசை (பக்கம் 10)
பெத்லகேம் குடும்ப யூனிட்: நிவின் பாலி – மமீதா பைஜூ புதிய காதல் கொண்டாட்டம்! Running News

பெத்லகேம் குடும்ப யூனிட்: நிவின் பாலி – மமீதா பைஜூ புதிய காதல் கொண்டாட்டம்!

பிரபல பாவனா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘பிரேமலு’ புகழ் இயக்குநர் கிரீஷ் ஏ. டி. இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் மமீதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பு செப்டம்பர் 4 ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாகிறது. இதனை முன்னிட்டு, தமிழ் ரசிகர்களுக்குப் படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் பிரமாண்ட பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ப்ரீமார்க் புரொடக்ஷன் மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் […]

September 2, 2026 admin
சர்தார் 2: உளவுத்துறை த்ரில்லரில் கார்த்தியின் அதிரடிப் பயணம்! Running News

சர்தார் 2: உளவுத்துறை த்ரில்லரில் கார்த்தியின் அதிரடிப் பயணம்!

பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ வி ஒய் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். லக்ஷ்மன் குமார் மற்றும் இஷான் சக்சேனா தயாரிப்பில், இயக்குநர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் சூர்யா, படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார். உளவுத்துறை அதிகாரிகளின் வாழ்வியல் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த ஆக்சன் என்டர்டெய்னர் […]

September 2, 2026 admin
’ஏன் என்னை ஏதோ செய்தாய்’  பிரி ரிலீஸ் ஈவண்ட் ஹைலைட்ஸ்! Running News

’ஏன் என்னை ஏதோ செய்தாய்’ பிரி ரிலீஸ் ஈவண்ட் ஹைலைட்ஸ்!

அந்தோனிஸ் அட்லியர் (Anthony’s Atelier) நிறுவனம் சார்பில் டி. ஆண்டனி தயாரித்து, எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் ’ஏன் என்னை ஏதோ செய்தாய்’. மனதை வருடும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக பெங்கால் நடிகை மதுமிதா தாஸ் நடித்திருக்கிறார். ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், ஆலம் ஷா, நவ்யா சுஜி, மாதங்கி சதீஷ், ரியா மனோஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள […]

August 31, 2026 admin
ஜி.வி.பிரகாஷின் “இம்மார்டல்” விழாச் செய்திகள்! Running News

ஜி.வி.பிரகாஷின் “இம்மார்டல்” விழாச் செய்திகள்!

தமிழ் திரையுலகில் புதுமையான முயற்சிகளுக்கு எப்போதும் பெயர் பெற்றவர் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார். அறிமுக இயக்குநர்கள் மற்றும் புதுமையான கதைக்களங்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்து வரும் அவர், தற்போது இந்திய சினிமாவில் மிகவும் அரிதான ‘வாம்பயர்’ ஃபேண்டஸி திரில்லர் பாணியில் உருவாகியுள்ள “இம்மார்டல்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ.கே. ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா அண்மையில் […]

August 31, 2026 admin
அருள்நிதி – அமீர் கூட்டணியின் வேட்ட சாமி ஃபர்ஸ்ட் லுக் பார்வை! Running News

அருள்நிதி – அமீர் கூட்டணியின் வேட்ட சாமி ஃபர்ஸ்ட் லுக் பார்வை!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக் களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதி மற்றும் முன்னணி இயக்குநர் மற்றும் நடிகரான அமீர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் வேட்ட சாமி. செவன் மைல்ஸ் பர் செகண்ட் புரோடக்ஷன்ஸ் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தை பம்பர் படத்தை இயக்கிய எம். செல்வகுமார் எழுதியும் இயக்கியும் உள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும்  கிளிம்ப்ஸ் காட்சி- களை பிரபல திரை ஆளுமைகளான ஆர்.ஜே. பாலாஜி மற்றும் லோகேஷ் கனகராஜ் […]

August 30, 2026 admin
மண்டாடி இசை வெளியீட்டு விழா சிறப்பம்சங்கள்! Running News

மண்டாடி இசை வெளியீட்டு விழா சிறப்பம்சங்கள்!

விடுதலை மற்றும் கொட்டுக்காளி படங்களின் வரிசையில் நடிகர் சூரியின் கதாநாயக அவதாரத்தில் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் மண்டாடி. வெற்றிமாறனின் எழுத்து வழிகாட்டலில், மதிமாறன் இயக்கத்தில், ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். நடுக்கடலில் பாய்மரப் படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை சிட்டி செண்டரில் மிக விமரிசையாக நடைபெற்றது. திரை உலகப் பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் பங்கேற்ற இந்நிகழ்வில் […]

August 30, 2026 admin
ஒன்ஸ் மோர்: பழைய கதையில் தடுமாறிய புதுமுக இயக்குநர்! Running News

ஒன்ஸ் மோர்: பழைய கதையில் தடுமாறிய புதுமுக இயக்குநர்!

கடந்த காலக் கசப்பான சம்பவங்களால் மன அழுத்தத்தில் வாழும் ரகுவரனின் (அர்ஜுன் தாஸ்) வாழ்வில், பள்ளித் தோழி அஞ்சலி (அதிதி சங்கர்) நுழைகிறாள். அவனது நிராகரிப்புகளையும் தாண்டி அன்பால் அவனை மாற்றுகிறாள். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயம் வரை செல்லும் வேளையில், ரகுவரனின் பழைய காதலி இந்திரா (சோனா ஒலிக்கல்) திடீரென போன் செய்து அவனைச் சந்திக்கிறாள். கொச்சியில் படித்த காலத்தில் தீவிரமாகக் காதலித்து, ஒரே இரவில் அவனைக் கைவிட்டுச் சென்ற இந்திரா, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு […]

August 29, 2026 admin
சூரியின் ‘மண்டாடி’ கடல் வேட்டை-செப்டம்பர் 10 திரைக்கு வருகிறது! Running News

சூரியின் ‘மண்டாடி’ கடல் வேட்டை-செப்டம்பர் 10 திரைக்கு வருகிறது!

காமெடி நடிகராகத் தனது திரைப் பயணத்தைத் தொடங்கி, இன்று அழுத்தமான கதைக் களங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாநாயகனாக உருவெடுத்துள்ள நடிகர் சூரி, இந்தப்  “மண்டாடி’’ படத்திற்காகத் தன் உடலையும் உழைப்பையும் முழுமையாக அர்ப்பணித்துள்ளார்.கடல் அலையின் கொந்தளிப்பில் பாய்மரப் படகை இயக்குவது என்பது சாதாரண விஷயமல்ல. இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்காகச் சூரி, எவ்வித டூப் கலைஞர்களின் உதவியுமின்றி நேரடியாகக் கடலில் இறங்கி நடித்திருக்கிறார். இதற்காகப் பல மாதங்கள் கடுமையான பாய்மரப் படகு பயிற்சி எடுத்துக்கொண்ட அவர், ஆழ்கடல் பகுதியில் […]

August 28, 2026 admin
ஹை (Hi)-திரை விமர்சனம்! Running News

ஹை (Hi)-திரை விமர்சனம்!

90களின் பிளாக்பஸ்டர் ஹீரோ கருப்பு வைரம் என்றழைக்கப்பட்ட இதயம் முரளி வெளிப்படுத்திய அந்த அமைதியான, சொல்லப்படாத காதலை இன்றும் நினைவில் வைத்திருக்கும் சினிமா ரசிகரா நீங்கள்? பார்த்தவுடன் வரும் காதலை விட, மனதிற்குள் மட்டுமே பூட்டி வைக்கப்படும் காதலை ரசிக்கும் தலைமுறை என்றால், இந்த ஹை திரைப்படம் உங்களை ஓரளவு கவரக்கூடும். மற்றவர்கள் இது ஓடிடி அல்லது சின்னத்திரையில் வரும் போது நேரம் கிடைக்கும் போது பார்க்கலாம் என்ற வரிசையில் தாராளமாக சேர்க்கலாம். கதையின் மையம் மற்றும் […]

August 28, 2026 admin
டாக்ஸிக் -விமர்சனம்:பிரம்மாண்டம்…ஆனால் சுவாரஸ்யமின்மை! Running News

டாக்ஸிக் -விமர்சனம்:பிரம்மாண்டம்…ஆனால் சுவாரஸ்யமின்மை!

கே.ஜி.எஃப் படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ராக்கிங் ஸ்டார் யஷ் நடிப்பிலும், மலையாளத்தின் குறிப்பிடத்தகுந்த பெண் இயக்குநரான கீது மோகன்தாஸ் இயக்கத்திலும் உருவாகியுள்ள திரைப்படம் டாக்ஸிக். போதைப்பொருள் கடத்தல், அதிகார மோதல், குடும்பப் பாசம் மற்றும் கேங்ஸ்டர் வன்முறை பின்னணியில் உருவான இத்திரைப்படம் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா என்று கேட்டால் ஊஹூம் என்று உரத்தக் குரலில் சொல்லி விடலாம். இத்தனைக்கும் கேங்ஸ்டர் ஒருவனின் தொழிலில் அடையும் வளர்ச்சியும், தனிப்பட்ட வாழ்க்கையில் அவனின் வீழ்ச்சியும் தான் […]

August 27, 2026 admin
உடனடி செய்திகள்