32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 49 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 49)
10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியீடு – அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு. Exclusive

10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியீடு – அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 6-ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெற்றது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது. பிளஸ்2 தேர்வில் 92.38 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், 10, 11ம் வகுப்பு […]

May 15, 2023 admin
‘ஏஐ ஸ்போக்கன் இங்கிலீஷ்’ பயிற்சி- சென்னை ஐஐடி மாணவர்கள் புதுமை! Exclusive

‘ஏஐ ஸ்போக்கன் இங்கிலீஷ்’ பயிற்சி- சென்னை ஐஐடி மாணவர்கள் புதுமை!

தற்போதைய காலகட்டத்தில் ஆங்கிலம் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமாகிவிட்டது. ஆனாலும் பெரும்பாலான பள்ளி குழந்தைகள்  சரளமாக ஆங்கிலம் பேசத் தடுமாறுகின்றனர். பல பள்ளிக்கூடத்தில் ஆங்கிலம் பேசி பழக சரியான வாய்ப்பு அமையாதது இதற்கு ஒரு முக்கியக் காரணம். இந்த நிலையை மாற்றக் குழந்தைகளுக்கு ’ஸ்போக்கன் இங்கிலீஷ்’ பயிற்சி வகுப்புகளுக்கு பெற்றோர் அனுப்பவது வாடிக்கையாகி விட்டது.. தற்போது ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ வகுப்பில் புதுமையைப் புகுத்தியுள்ளனர் சென்னை ஐஐடி மாணவர்கள் சிலர். வழக்கமான ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ வகுப்பாக […]

May 13, 2023 admin
சிபிஎஸ்இ பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியீடு! Exclusive

சிபிஎஸ்இ பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியீடு!

சிபிஎஸ்இ பிளஸ்–2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் சென்னை மண்டலத்தில் 97.40 சதவிகித மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் கடந்த பிப்ரவரி 15–ந்தேதி முதல் ஏப்ரல் 5–ந்தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வும் நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 16.9 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இதனிடையே, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி தொடர்பாக குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. இந்நிலையில், சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு […]

May 12, 2023 admin
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ரயில்வே & வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிச்சாச்சா? Exclusive

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ரயில்வே & வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிச்சாச்சா?

தமிழ்நாடு முதல்வரால் தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ‘போட்டி தேர்வு’ பிரிவானது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் ஒன்றிய அரசின் ரயில்வே பணியாளர் தேர்வுகள், வங்கி தேர்வுகள், இந்திய குடிமை பணி தேர்வுகள் போன்ற பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு சிறந்த முறையில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இலவசம். இத்திட்டத்தின் முதற்கட்டமாக ரயில்வே, SSC, வங்கி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி, மாவட்டந்தோறும் அளிக்கப்படும். மாவட்டத்திற்கு 150 […]

May 11, 2023 admin
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் கல்வி! Exclusive

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் கல்வி!

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி வரும் தனித்துவம் மிக்க நிறுவனமாகும். இந்தியாவிலேயே முதன் முறையாக திரைப்பட தொழில்நுட்பங்களுக்கென 2016-2017ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் […]

May 9, 2023 admin
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது! Exclusive

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த பெரம்பலூர் மாவட்டத்தை பின்னுக்கு தள்ளி விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. கடைசி இடத்தை ராணிப்பேட்டை மாவட்டம் பிடித்துள்ளது. தமிழகத்தில் 8,03,385 மாணாக்கர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் அதிகளவில் மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்தநிலையில் மாவட்ட வாரியாக மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதம் வெளியாகியுள்ளது. அதில் கடந்த ஆண்டு 97.95% மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்து முதலிடத்தில் இருந்த பெரம்பலூர் […]

May 8, 2023 admin
ஸ்டேட் பேங்கில் வேலையா? Exclusive

ஸ்டேட் பேங்கில் வேலையா?

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ) பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என இரண்டு கட்டங்களாகத் தேர்வுகள் நடைபெறும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் மே 19ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை இணைய வழியில் மட்டும் சமர்ப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் விவரம்: வங்கிப் பணியாளர்: 182 ஒப்பந்த அடிப்படையிலான பணிகள்: 35 மொத்த காலிப்பணியிடங்கள்: 217 தகுதி: இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் படிப்பை முடித்திருக்க வேண்டும். இதில் […]

May 6, 2023 admin
பொறியியல் படிப்புகளில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி? – Exclusive

பொறியியல் படிப்புகளில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி? –

தமிழகத்தில் உள்ள உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளால் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2023-24 ம் கல்வியாண்டில் முதலாமாண்டு B.E, B.Tech, B.Arch பட்டப்படிப்பில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் விவரம்: https://www.tneaonline.org அல்லது https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதள வாயிலாக […]

May 4, 2023 admin
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Exclusive

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக இருக்கும் ஒப்பந்த அடிப்படையிலான பல்வேறு பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் சென்னையில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். காலிப்பணியிடங்கள்: 82 சம்பள விவரம்: ரூ. 16,000 – ரூ. 70,000 தகுதி: இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் படிப்பை முடித்திருக்க வேண்டும். இதில் […]

May 3, 2023 admin
சென்னை ஆவடியில் உள்ள ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் பி.இ., டிப்ளமோ படித்தவர்களுக்கு ஓராண்டு அப்ரண்டீஸ்! Exclusive

சென்னை ஆவடியில் உள்ள ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் பி.இ., டிப்ளமோ படித்தவர்களுக்கு ஓராண்டு அப்ரண்டீஸ்!

சென்னை ஆவடியில் உள்ள ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் பி.இ., டிப்ளமோ படித்தவர்களுக்கு ஓராண்டு அப்ரண்டீஸ் பயிற்சி வழங்கப்படுகிறது. இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் – பயிற்சியின் பெயர் பட்டதாரி அப்ரண்டீஸ். மொத்த காலியிடங்கள் 104. இதற்கான கல்வி தகுதியாக பயிற்சி வழங்கப்படும், இன்ஜினீயரிங் பாடப்பிரிவில் பி.இ. பட்டம் பெற்றிருக்க வேண்டும். டெக்னீசியன் அப்ரண்டீஸ் பயிற்சி காலியிடம் 110. இன்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமோ இன்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி வழங்கப்படும் இன்ஜினீயரிங் பாடப்பிரிவுகள் பாட வாரியாக காலியிட […]

May 1, 2023 admin
உடனடி செய்திகள்