சென்னை ஆவடியில் உள்ள ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் பி.இ., டிப்ளமோ படித்தவர்களுக்கு ஓராண்டு அப்ரண்டீஸ்!
சென்னை ஆவடியில் உள்ள ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் பி.இ., டிப்ளமோ படித்தவர்களுக்கு ஓராண்டு அப்ரண்டீஸ் பயிற்சி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் –
பயிற்சியின் பெயர் பட்டதாரி அப்ரண்டீஸ். மொத்த காலியிடங்கள் 104. இதற்கான கல்வி தகுதியாக பயிற்சி வழங்கப்படும், இன்ஜினீயரிங் பாடப்பிரிவில் பி.இ. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
டெக்னீசியன் அப்ரண்டீஸ் பயிற்சி
காலியிடம் 110.
இன்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமோ இன்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி வழங்கப்படும் இன்ஜினீயரிங் பாடப்பிரிவுகள் பாட வாரியாக காலியிட பகிர்வு விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை – பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரமும், டிப்ளமோ இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ரூ. 8 ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்படும்.
2020, 2021, 2022-ம் ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். www.mhr.dnats.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் தங்களை பற்றிய விவரங்களை முன்பதிவு செய்துகொள்ளவும். பின்னர் அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் Establishmentlistஐ கிளிக் செய்து அதிலிருந்து HEAVYVEHICLEFactoryAvadiஐ தேர்வு செய்து அதில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
மே 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்கள் பி.இ., டிப்ளமோ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் www.boat-srp.com என்ற இணையதளத்தில் மே 19ம் தேதி வெளியிடப்படும். நேர்முகத்தேர்வு மே 29ம் தேதி நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


