10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியீடு – அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியீடு – அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

மிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 6-ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெற்றது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது. பிளஸ்2 தேர்வில் 92.38 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்நிலையில், 10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டு செய்திக்குறிப்பில், “மார்ச், ஏப்ரல் 2023-ல் நடைபெற்ற 2022- 2023-ம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் இணையதளம் முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு காலை 10 மணிக்கும், 11-ம் வகுப்பு தேர்வு முடிவு பிற்பகல் 2 மணிக்கும் வெளியிடப்படும். tnresults.nic.in, dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தங்களது பதிவின் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்ற பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!