June 4, 2023

சிபிஎஸ்இ பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியீடு!

சிபிஎஸ்இ பிளஸ்–2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் சென்னை மண்டலத்தில் 97.40 சதவிகித மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் கடந்த பிப்ரவரி 15–ந்தேதி முதல் ஏப்ரல் 5–ந்தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வும் நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 16.9 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இதனிடையே, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி தொடர்பாக குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது.

இந்நிலையில், சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளங்களில் சென்று அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒட்டுமொத்தமாக 87.33 மாணவர்கள் தேர்ச்சிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கொரோனாவுக்கு முந்தைய 2019ம் ஆண்டு தேர்ச்சி விகிதமான 83.40ஐ விட அதிகம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பிளஸ்–2 தேர்வில் சென்னை மண்டலத்தில் 97.40 சதவிகித மாணவர்கள்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஏற்கனவே அறிவித்தபடி இந்த முறை முதல் 3 இடங்களை பிடித்த மாணவ– மாணவிகளின் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. மாணவர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.