32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2425 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 238 / 243
செய்திகள் வரிசை (பக்கம் 238)
கழிவுகளை அழித்து மனித குலத்தை காப்போம்! Running News

கழிவுகளை அழித்து மனித குலத்தை காப்போம்!

கழிவு என்பது எல்லா இடங்களிலும் எல்லோராலும் உருவாக்கப்படுவதே. நகரங்களில் மீதமாகும் கழிவுகளுக்கு வடிகாலாக கிராமங்களை மாற்றிவிடுவது என்பது இயற்கையின் சமநிலையை பாதிக்கும் முக்கிய விஷயங்களில் ஒன்றாகும்.தற்போது வேகமாக மாறிவரும் கலாசார மாற்றங்களினால் புதியன புகுதலும் பழையன கழிதலும் சாதாரணமான நிகழ்வு என்றாலும்கூட பழையவற்றை சுற்றுச்சூழல் மாசுபடாமல் கழிப்பதை மனித சமுதாயம் கற்றுக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் சுற்றுச்சூழல் மிகப்பெரிய பாடத்தை நமக்கு கற்றுக்கொடுக்கும். முந்தைய காலங்களில் கழிவுகளை ஒரு குழி வெட்டி அதில் கொட்டி அது மக்கியபின் விவசாயத்திற்குப் […]

November 15, 2013 admin
ஊழல்வாதிகளின் கழுத்தில் கல்லை கட்டி கடலில் வீச வேண்டும்!- போப் பிரான்சிஸ் பரபரப்பு பேச்சு Running News

ஊழல்வாதிகளின் கழுத்தில் கல்லை கட்டி கடலில் வீச வேண்டும்!- போப் பிரான்சிஸ் பரபரப்பு பேச்சு

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் போப் ஆக இருந்த 16ஆம் பெனடிக்ட் பதவி விலகியதை அடுத்து, புதிய போப்பாக ஆர்ஜெண்டீனாவைச் சேர்ந்த ஜார்ஜ் மோரியோ பெர்காக்லியோ தேர்வாகி. கடந்த மார்ச முதல் 266ஆவது போப்பாக பிரான்சிஸ் என்ற பெயருடன் அவர் பதவியேற்றுக் கொண்டார்.அந்த தலைமை பதவியேற்ற நாளில் இருந்து சர்ச்சைக்குரிய கருத்துகளையே கூறி வரும் பிரான்சிஸ் நேற்று முன்தினம் வாடிகன் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களிடையே தோன்றி சொற்பொழிவு ஆற்றினார்.அப்போது அவர்,” ஊழல் செய்து பணம் சம்பாதித்து, அதனை தானமாக கொடுப்பவர்களும், […]

November 14, 2013 admin
கற்பழிப்பை வரவேற்கலாம்  என்ற சி.பி.ஐ. இயக்குனர் மன்னிப்பு கோரினார் Running News

கற்பழிப்பை வரவேற்கலாம் என்ற சி.பி.ஐ. இயக்குனர் மன்னிப்பு கோரினார்

டெல்லியில் சி.பி.ஐ.யின் பொன் விழா மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா சூதாட்டம், கற்பழிப்பு, லாட்டரி மற்றும் கேளிக்கைகள் பற்றி பேசுகையில், “நீங்கள் பாலியல் பலாத்காரத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் அதனை நீங்கள் விரும்பி வரவேற்பதாக அர்த்தம்.இதில் முறைகேடுகளை தடுக்க சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்.” என்றார்.இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சிங்கா, செய்தியாளர்களிடம் தமது கருத்து தொடர்பாக வருத்தம் தெரிவித்தார். தாம் தெரிவித்த கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் […]

November 13, 2013 admin
நேருவிற்கும் பட்டேலுக்கும் இடையே விருப்பும் வெறுப்பும் கலந்த உறவே இருந்து வந்தது. Running News

நேருவிற்கும் பட்டேலுக்கும் இடையே விருப்பும் வெறுப்பும் கலந்த உறவே இருந்து வந்தது.

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் பற்றி சமீப காலமாக பரவலாக பேசப்படுகிறது. படேலின் கொள்கைகளுக்கு உண்மையான வாரிசு யார் என்ற விவாதத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டு அரசியல் மற்றும் மதவாத கோஷங்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. உண்மையில் நேருவும் படேலும் வெவ்வேறு தனித்தனியான கொள்கைகளை, தன்மைகளை, கருத்துக்களைக் கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் இருவருக்கும் இடையேயான வேறுபாடு அடிப்படையானது. நவீன இந்தியாவை உருவாக்க காங்கிரசை கட்டுப்பாடுள்ள ஜனநாயக அமைப்பாக மாற்ற வேண்டியது அவசியம் என்று […]

November 12, 2013 admin
அரசிடம் முனைப்பும், பொதுமக்களிடம் பொறுப்புணர்வும் இருந்தால் போதும் குப்பையும் காசாகும்! Running News

அரசிடம் முனைப்பும், பொதுமக்களிடம் பொறுப்புணர்வும் இருந்தால் போதும் குப்பையும் காசாகும்!

இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியாவின் நகரவாசிகள் தொகை 60 கோடியாகவும் அவர்கள் ஒரு நாளில் கழிக்கும் குப்பை ஆறு லட்சம் டன்னாகவும் உயரும் என ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. நகரங்களில் நிலத்தின் விலை வானளாவ உயர்ந்து விட்டது. நகராட்சிகளுக்குக் குப்பை கொட்ட இடம் கிடைக்கவில்லை. அடுத்த ஊரில் கொண்டு போய்க் கொட்ட நினைத்தால் அந்த ஊர்க்காரர்கள் ஒன்றுகூடிச் சண்டைக்கு வருகிறார்கள். மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் வேறு அவ்வப்போது ஏதாவது குறை சொல்லிக் கொண்டேயிருக்கின்றன. இதன் காரணமாகப் பல […]

November 11, 2013 admin
கள்ளத்தொடர்பு வலைதளத்துக்கு தடை போட்ட சிங்கப்பூர் ! Running News

கள்ளத்தொடர்பு வலைதளத்துக்கு தடை போட்ட சிங்கப்பூர் !

கனடாவை சேர்ந்த ஒரு பிரபல வலைதள நிறுவனம் (வெப்சைட்) கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவிகளும், மனைவிக்கு துரோகம் செய்யும் கணவன்களும் தனிமையில் சந்தித்து கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்ளும் சேவையை செய்து வருகிறது.மேற்கத்திய நாடுகளில் தற்போது பரவலாகி வரும் இந்த ‘டேட்டிங் சீட்டிங்’ கலாசாரத்தை கடைசரக்காக்கி லாபம் பார்க்கும் அந்த வலைதளம், இந்தியா உள்ளிட்ட ஏராளாமான நாடுகளில் பிரத்யேக ‘சேவை’யை செய்து வருகிறது. இவ்வகையில், சிங்கப்பூர் மக்களுக்கு என பிரத்யேக சேவையை தொடங்க இருப்பதாக சமீபத்தில் அந்த […]

November 10, 2013 admin
பலவீனமான வெளியுறவுக் கொள்கை! Running News

பலவீனமான வெளியுறவுக் கொள்கை!

நமது நாட்டின் நலன்களுக்கு உகந்த உலகளாவிய சூழலை உருவாக்குவதுதான் இந்திய வெளியுறவுக் கொள்கையின் மிக முக்கியமான ஒரே நோக்கம்’ என்று தில்லியில் அண்மையில் தொடங்கிய பிற நாடுகளுக்கான இந்தியத் தூதர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியுள்ளார். ஆனால், அவருடைய ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் நமது வெளியுறவுக் கொள்கையானது மிகவும் பலவீனமாகவும், நமது நாட்டின் நலன்களுக்கு எதிராகவும்தான் மாறியுள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அணுசக்தி ஒப்பந்தம், சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு, தொலைத்தொடர்புத் துறையில் அன்னிய […]

November 9, 2013 admin
தாய்மொழி வழிக் கல்வி என்பதே கூட ஒரு அறிவியல் கண்ணோட்டம்தான்.! Running News

தாய்மொழி வழிக் கல்வி என்பதே கூட ஒரு அறிவியல் கண்ணோட்டம்தான்.!

மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படையே, தெரியாத உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் முனைப்புதான். ஆதிமனிதர்கள் இயற்கையின் ரகசியங்களைக் கண்டறிந்து அடுத்த தலைமுறைக்கு வழங்கினார்கள். நமது முன்னோர்களது கண்டுபிடிப்புகளின் பலன்களை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு நமது கண்டுபிடிப்புகளின் பலன்களைத் தருவது நமது கடமை. இந்தத் தொடர்ச்சி அறுந்துவிடக்கூடாது. நமது நாட்டில் மதங்களும் சாதிகளும் பகுத்தறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகளும் மனித முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, அவ்வப்போது அந்தத் தொடர்ச்சியை அறுத்துவிட்டுள்ளன. நாட்டில் வறுமையும் பிணியும் கல்லாமையும் தொடர்கிற நிலையில், 450 கோடி […]

November 8, 2013 admin
100க்கு 4 மதிப்பெண் ! Running News

100க்கு 4 மதிப்பெண் !

ஆசிரியர் தகுதி தேர்வில் 4 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற செய்தியை கேட்டு மாணவர்கள்கூட மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். ஆகஸ்ட் மாதம் நடந்த இந்த தேர்வுகளில் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 6 லட்சத்து 70 ஆயிரம் பேர் பங்கேற்றனர். முதல் தாள் எழுதியவர்களில் 12,596 பேரும் (4.8 சதம்), இரண்டாம் தாள் எழுதியவர்களில் 12,496 பேரும் (3.62 சதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். 100க்கு 60 மதிப்பெண் வாங்கினால் தேர்ச்சி பெறலாம். தேர்வில் பங்கேற்றவர்களில் […]

November 7, 2013 admin
11–12–13 அன்று திருமணம் நடத்த திட்டமிடும் ஜோடிகள்! Running News

11–12–13 அன்று திருமணம் நடத்த திட்டமிடும் ஜோடிகள்!

உலகில் பல்வேறு அரிய நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடக்கின்றன. ஆனால் அரிய நாள் என்பது அத்தி பூத்தாற்போன்று எப்போதாவதுதான் வரும். அந்த அரிய நாள் வருகிற டிசம்பர் 11–ந்தேதி வருகிறது. 100 ஆண்டுகளுக்கு ஒரு தடவை வரும் அந்த அபூர்வ நாளாக இது கருதப்படுகிறது. அதுதான் 11.12.13 என்றழைக்கப்படும் 11.12.2013 ஆகும். இந்த நாளை அதிர்ஷ்ட நாளாக இளைஞர்களும், இளம் பெண்களும் கருதுகின்றனர். அதை தங்களின் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக விரும்புகின்றனர். எனவே, அன்று தங்கள் திருமணத்தை […]

November 6, 2013 admin
உடனடி செய்திகள்