32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 223 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 223)
மும்மதத்தினர் முக்கிய கவனத்திற்கு…! Running News

மும்மதத்தினர் முக்கிய கவனத்திற்கு…!

நமது பாரத தேசத்தின் தொன்மையான மதம் இந்து மதம். இன்றைய பாரதத்தில் பெரும்பான்மையினர் மதமும் இந்து மதமே. இதற்கு அடுத்தபடியாக அதிகம் பேர் பின்பற்றும் மதங்களாக கிறிஸ்துவ, இஸ்லாம் மதங்கள் உள்ளன. தவிர இன்னும் பல மதத்தினர் நம் தேசத்தில் ஆனந்தமாக இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சர் அவதரிப்பதற்கு முன் இருந்த இந்திய ஆன்மிக நிலை வேறு. அவர் அவதரித்த பின் உள்ள இந்திய ஆன்மிக நிலை வேறு. பாரதத்தில் முன்னர் இருந்த மதக் காழ்ப்புகள், […]

July 13, 2014 admin
தேரோடும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலினிலே… Running News

தேரோடும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலினிலே…

பால்யத்தில் என்னை பெரிதும் மிரட்சிக்கும், சந்தோசத்துக்கும் உள்ளாக்கியது நெல்லையப்பர்கோயில் தேரோட்டம் தான். திருநெல்வேலி டவுணில் வீடு இருந்தது.கொஞ்ச நேரத்தில் நடந்தே நெல்லையப்பர் கோயிலை அடைந்து விடும் துõரத்தில். ஆனி மாதம்தான் “சீசனுடன்’ தேரோட்ட வேலைகள் தொடங்கும். ஆம்…அந்த மாதத்தில் குற்றால சீசனும் களை கட்டும். நெல்லையில் விட்டு விட்டு சாரல் அடிக்கும். சாரம் என்பது மழை அல்ல. கல்யாண வீட்டு வாசலில் நின்று பன்னீர் தூவுவார்களே..அந்த மாதிரி அவ்வப்போது வானத்தில் இருந்து துõவுகிற விஷயம். முதலில் நெல்லையப்பர், […]

July 12, 2014 admin
பொறியியல் மோகம் மாணவர்களிடையே குறைய காரணமென்ன? Running News

பொறியியல் மோகம் மாணவர்களிடையே குறைய காரணமென்ன?

பொறியியல் கல்வி தொடர்பாக சமீபத்தில் வெளியாகியிருக்கும் சில செய்திகள் நம்முடைய மோசமான அடிப்படைக் கல்வி, அதன் ஆழமின்மை ஆகியவற்றை வெளிப்படுத்தியிருக்கின்றன. தமிழகத்தில் கடந்த பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 7.45 லட்சம். பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் உள்ள இடங்கள் 2.06 லட்சம். இந்த இடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் 1.74 லட்சம். மாற்றுத்திறனாளிகளுக்கான 6000 இடங்களுக்கு விண்ணப்பித்தோர் 400 பேர். தமிழகத்தில் உள்ள 578 பொறியியல் கல்லூரிகளில் கடந்த தேர்வில் 333 கல்லூரிகளில் மாணவர்களின் தேர்ச்சி […]

July 10, 2014 admin
இந்திய விவசாயம் எதிர்காலத்தில் ஜெயிப்பது நிச்சயம்! Running News

இந்திய விவசாயம் எதிர்காலத்தில் ஜெயிப்பது நிச்சயம்!

உலகிலுள்ள பிற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய விவசாயத்தின் இன்றைய நிலை பரவாயில்லை என்ற அற்ப சந்தோஷம் நிறைவுள்ள பேச்சு இல்லை. இந்திய விவசாயம் வழங்கக் கூடிய வாய்ப்புகளை முடிந்தவரை பயன்படுத்தினால் வர்த்தக ரீதியான வளர்ச்சியுடன் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் விவசாயத்தின் பங்களிப்பை உயர்த்த முடியும். விவசாய உற்பத்தி மதிப்பு உயர்வதற்குத் தடையாக உள்ள பிரச்னைகள் எவை? அத்தடைகளை உடைத்தெறிய அரசுகள் செய்ய வேண்டியவை எவை? இந்த இரு வினாக்களுக்கும் நாம் பெறக்கூடிய விடைகளில்தான் இந்திய விவசாயத்தின் […]

July 9, 2014 admin
அம்பேத்கர் பாடல் ஒலிபரப்பியதற்காக தாக்குதல்!- விருதுநகர் அதிர்ச்சி! Running News

அம்பேத்கர் பாடல் ஒலிபரப்பியதற்காக தாக்குதல்!- விருதுநகர் அதிர்ச்சி!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகில் உள்ள கிராமம் திருமலைபுரம். கடந்த 02.07.2014 அன்று மாலை 6.30 மணியளவில் சுமார் 50 பேர் கொண்ட வன்கொடுமை கும்பல் கத்தி, அரிவாள், வேல்கம்பு, உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தலித்துகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் மாரிமுத்து, ஜேசுமுடியப்பன், இருளாயி ஆகிய 3 தலித்துகள் படுகாயமடைந்து மதுரை மற்றும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். ஒன்பது வீடுகளும் வன்கொடுமை அடித்து நொறுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து […]

July 8, 2014 admin
வாசகர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைந்துவிட்டது – தினமணி கே.வைத்தியநாதன் Running News

வாசகர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைந்துவிட்டது – தினமணி கே.வைத்தியநாதன்

”தேவன், சாவி, பாக்கியம் ராமசாமி வரிசையில் இப்போது நகைச்சுவை எழுத்தாளர்கள் இல்லை. வாசகர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைந்துவிட்டதுதான் அதற்குக் காரணமாக இருக்க முடியும். உலகிலுள்ள உயிரினங்களில் மனித இனத்துக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு நகைச்சுவை உணர்வுதான். நம்மால் மட்டும்தான் வாய்விட்டுச் சிரிகக முடியும். பணம், வாழ்க்கை வசதிகள் என்று என்னதான் இருந்தாலும் அவை நகைச்சுவை உணர்வுக்கு ஈடாகாது. அதைத் தமிழ்ச் சமூகம் இழந்துவிடக் கூடாது. ” என்று “தினமணி’ ஆசிரியர் கே.வைத்தியநாதன் ஆசிரியர் சாவி நினைவுநாள் சொற்பொழிவில் […]

July 7, 2014 admin
பட்ஜெட் : நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு Running News

பட்ஜெட் : நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது கன்னி பட்ஜெட்டை ஜூலை 10ஆம் தேதி மக்களவையில் சமர்ப்பிக்க உள்ளார். பங்குச் சந்தையிலும் கார்ப்பரேட் உலகிலும் பட்ஜெட் பற்றிய பரபரப்பும், உற்சாகமும் தெளிவாகத் தென்படுகின்றன. ஆனால் விலைவாசி உயர்வுக்கும் பணவீக்கத்துக்கும் ஈடுகொடுக்க முடியாமல் தவிக்கின்ற மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள் பட்ஜெட்டை எதிர்பார்த்து அமைதியாகக் காத்திருக்கிறார்கள்.பெரும்பாலான நடுத்தர மக்கள் இந்த அரசு அமைய வேண்டும் என்று வாக்களித்தவர்கள்தான். எனவே, புதிய அரசு அளிக்கும் முதல் பட்ஜெட்டில் தாங்கள் எதிர்பார்ப்பது […]

July 6, 2014 admin
பணிப்பெண்களையே விற்பனை செய்யும் வணிக வளாகம் – சிங்கப்பூர் அதிர்ச்சி Running News

பணிப்பெண்களையே விற்பனை செய்யும் வணிக வளாகம் – சிங்கப்பூர் அதிர்ச்சி

சிங்கப்பூரில் உள்ள பிரபல வணிக வளாகம் ஒன்றில் சந்தைப் பொருட்களைப் போல் பணிபெண்களை காட்சிப்படுத்தி விலைக்கு விற்கும் அவலம் மனித உரிமையாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில், இந் தியா, இலங்கை, பாகிஸ் தான், வங்கதேசம், இந் தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த, இரண்டு லட்சம் பெண் கள் வீட்டு வேலை செய் யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.இதனிடையே அங்குள்ள புக்கிட் திம்மா ஷாப்பிங் சென்டரில் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மியான்மர் போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்கள், ‘வீட்டு […]

July 5, 2014 admin
பதினாலும் பெற்று பெருவாழ்வு…! Running News

பதினாலும் பெற்று பெருவாழ்வு…!

தென்னிந்தியாவிலேயே வீட்டில் 14 யானைகளை வளர்க்கும் பெருமையைப் பெற்றுள்ளது ஒரு தமிழ்க் குடும்பம்!வேழம், வழுவை, களபம், மாதங்கம், கைம்மா, உம்பல், அரசுவா, அல்லியன், ஆம்பல், இபம், எறும்பி, பெருமா, வாரணம், தந்தி இவை எல்லாம் என்ன என்று குழம்பாதீர்கள். இந்தப் பதினான்கும் யானைக்கு தமிழர்கள் சூட்டிய பொதுப்பெயர்கள். அப்படியே இதையும் படித்துவிடுங்கள். விஜயன், கணபதி, ஐயப்பன், கர்ணன், சரண ஐயப்பன், கணேசன், கஜேந்திரன், முகுந்தன், கிருஷ்ணன் குட்டி, ராமச்சந்திரன், குருவாயூரப்பன், ராஜன், கண்ணன், சிண்டுமோன் – இவையும் […]

July 4, 2014 admin
கிலியைக் கொடுக்கும் ஒலி மாசு! Running News

கிலியைக் கொடுக்கும் ஒலி மாசு!

சமீப காலமாக சென்னையில் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு வாகனங்களின் ஒலி மாசு அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களிடம் கவலையையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.ஒலி மாசுபாட்டால் உயர் ரத்தஅழுத்தம், படபடப்பு, காது கேட்கும்தன்மை போன்ற எல்லோரும் அறிந்த உடனடி பாதிப்புகள் மட்டுமில்லாமல் இன்சோம்னியா என்ற தூக்கமின்மை, குடல் அழற்சி, சிறுநீரகக் கோளாறுகள் போன்ற நீண்டகால உடல் உபாதைகளும் நமக்கு ஏற்படலாம். சென்னையில் சுமார் 37.6 லட்சம் வாகனங்கள் உள்ளன. இதில், 30,52,233 இரு சக்கர வாகனங்கள் இருக்கின்றன. தினமும் சுமார் 800 […]

July 1, 2014 admin
உடனடி செய்திகள்