Running News
நதிநீர் இணைப்பு பற்றிய கனவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது சரியா?
“ஆடிப் பட்டம் தேடி விதை’ என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால், ஒரு சராசரி விவசாயி ஆடி மாதம் நெருங்கும்போதே ஆடிப் போவார். தரகர்களைத் தேடி ஓடுவார். பணத்தை எங்கே தேடுவேன் என்று கலங்குவார். ஆடி மாதம் பிறந்தால் விவசாயச் செலவு ஒரு பக்கம் என்றால், சடங்கு, மரியாதைச் செலவு மற்றொரு பக்கம். கிடா வெட்டுவது, கூழ் ஊற்றுவது நிகழ வேண்டும். மாரியம்மனுக்கும் சடையாண்டிக்கும் படைக்க வேண்டும். சேமித்தவை செலவாகிவிடும். ஆடியில் வரவு இருக்காது; வறுமைதான் இருக்கும். […]