32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 221 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 221)
எழுத்தாளன் என்றால் என்ன? By  சாரு நிவேதிதா Running News

எழுத்தாளன் என்றால் என்ன? By சாரு நிவேதிதா

எழுத்தாளர்களைக் கொண்டாட வேண்டும் என்று அடிக்கடி நான் சொல்வதை ஒரு துளியளவும் புரிந்து கொள்ளாமல் யார் யாரிடமோ போய் விளக்கம் கேட்டு, அவர்களும் ஒன்றுமே புரியாமல் ஏதோ உளறி வைப்பதையெல்லாம் பிரசுரித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் சொல்வது புரியவில்லையா, அல்லது புரியாத மாதிரி நடிக்கிறார்களா என்று இப்போது எனக்குக் குழப்பமாக இருக்கிறது. எனவே அப்படிப்பட்டவர்களுக்காக இன்னும் விளக்கமாக எழுதுகிறேன். இப்போதாவது புரிந்து கொள்வார்களா அல்லது இப்போதும் புரிந்து கொள்ளாமல் தாத்தா பாட்டிகளிடம் போய் இதற்கு விளக்கம் கேட்பார்களா என்று […]

August 18, 2014 admin
கற்றல் குறைபாடு குறித்து விழிப்புணர்வு போதாது!By கதிர் Running News

கற்றல் குறைபாடு குறித்து விழிப்புணர்வு போதாது!By கதிர்

கற்றல் குறைபாடு உள்ள பள்ளிக் குழந்தைகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது கவலை அளிக்கும் விஷயம். எத்தனை பேருக்கு அந்த குறைபாடு இருக்கிறது என்பதில் ஒவ்வொருவரும் முரண்படுவது அந்த கவலையை அதிகரிக்கும் விஷயம்.லே(ர்)னிங் டிசபிலிடி (எல்டி) என்பதை கற்றல் குறைபாடு என அரசு குறிப்பிடுகிறது. 2ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களிடம் கற்றல் குறைபாடு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை கண்டறிய மாநிலம் தழுவிய ஆய்வு நடத்த தமிழக அரசு தீர்மானித்துள்ளது. […]

August 17, 2014 admin
கால மாற்றத்தின் கட்டாயம் By கதிர் Running News

கால மாற்றத்தின் கட்டாயம் By கதிர்

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று ஒருவர் பேசுகிறார். கேட்கும்போது சிரிப்பு வருகிறது. அரசியல் சாசனமும் பாட புத்தகமும் சொல்கிறதே தவிர, உண்மை நிலவரம் அப்படி இல்லை என்று தெரியும். அதனால் சிரிப்பு வருகிறது. அனுபவம் பெறாதவர்களுக்கு கோபம் வருகிறது.உலகம் அப்படித்தான். ஐ.நா சபை, சர்வதேச நீதிமன்றம் எல்லாம் இருந்தாலும் சில நாடுகள் மற்ற நாடுகளை விட கூடுதல் சமம். உலக வர்த்தக ஒப்பந்தம், பூமி சூடாவதை தடுப்பது போன்ற முயற்சிகளில் அந்த நாடுகள் கண்ணாமூச்சி விளையாடுவதை […]

August 16, 2014 admin
68வதுசுதந்திர தினம்! — கம்ப்ளீட் பிராகரஸ் ரிப்போர்ட் Running News

68வதுசுதந்திர தினம்! — கம்ப்ளீட் பிராகரஸ் ரிப்போர்ட்

ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947 ஆக., 15ல் விடுதலை பெற்ற இந்தியா, 68 ஆண்டுகளில், கல்வி, சுகாதாரம், உணவு உற்பத்தி, தொழில் வளர்ச்சி, விண்வெளி, போக்குவரத்து,அடிப்படை கட்டமைப்பு, இறக்குமதி உள்ளிட்ட பல துறைகளிலும் குறிப்பிடத்தக்கவளர்ச்சியை பெற்றுள்ளது.சமூக வளர்ச்சி:எந்த ஒரு நாடுமே கல்வி, சுகாதாரம், ஆண் – பெண் சம உரிமை, வாழ்க்கை தரம் போன்ற துறைகளில் முன்னேற்றம் அடைந்திருக்க வேண்டும். அதன்படி 1947ல் எழுத்தறிவு சதவீதம்18 ஆக இருந்தது. தற்போது 74 ஆக உயர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி: இந்தியா […]

August 15, 2014 admin
சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினம் -இன்று Running News

சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினம் -இன்று

சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் 1976ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம் இத்தினத்தை கடைபிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.உலகின் மொத்த மக்கள் தொகையில், 13 சதவீதம் பேர், இடது கை பழக்கம் உடையவர்களாக உள்ளனர் என்று ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது.ithan muulam தனித்துவமான போக்கினைக் கொண்ட இடக்கைப் பழக்கமுள்ளோரின் செயற்பாடுகளை கௌரவிக்கவும் மானசீகமான தாக்கங்கள் ஏற்படாமல் காப்பதற்கும் இத்தினம் விசேஷமாக கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பாக இத்தினத்தில் […]

August 13, 2014 admin
ஆறு நாளில் அமெரிக்கப் பல்கலைக் கழகப் பட்டம்! Running News

ஆறு நாளில் அமெரிக்கப் பல்கலைக் கழகப் பட்டம்!

ஆறே நாளில் புகழ் பெற்ற யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவது எப்படி எனத் தெரிந்து கொள்ள மத்திய மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை அணுகவும். ”என்னைக் கல்வியறிவு அற்றவர் எனக் கூறுபவர்கள் இருக்கிறார்கள். நான் யேல் பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்றிருக்கிறேன்” என ஒரு கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார் ஸ்மிருதி இந்த ஆண்டு ஜூன் 19ம் தேதி யேல் பல்கலைக்கழகத்திற்கு ஆறுநாள் பயிற்சித் திட்டத்திற்கு 11 எம்.பிகள் அனுப்பப்பட்டார்கள். அதில் ஒருவர் ஸ்மிருதி இது போல் எம்.பி,கள் […]

August 12, 2014 admin
மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் கூட்டணி By  கதிர் Running News

மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் கூட்டணி By கதிர்

சிண்டிகேட் பேங்க் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது. 2ம் தேதி கைதானவரை 6ம் தேதி சஸ்பெண்ட் செய்துள்ளது மத்திய அரசு. வேகமாகத்தான் நடக்கிறது வேலைகள்.‘இதெல்லாம் தப்பு’ என்ற விமர்சன குரல்களும் வேகமாகவே கிளம்பி விட்டன. ‘ஒரு பேங்கின் சேர்மன்-கம்-மேனேஜிங் டைரக்டரையே கைது செய்ய சி.பி.ஐ துணிந்து விட்டால் இனி எந்த அதிகாரியும் தைரியமாக வேலை பார்க்க முடியாது’ என்பது இந்த விமர்சகர்கள் வாதத்தின் சாராம்சம். இத்தகைய […]

August 11, 2014 admin
”ரக்ஷாபந்தன்” – தொடர்பான கதைகளும், உண்மையும்! Running News

”ரக்ஷாபந்தன்” – தொடர்பான கதைகளும், உண்மையும்!

சகோதர சகோதரிக்கிடையேயான உறவு பந்தத்தை மென்மேலும் இணைக்கவும், பலப்படுத்தும் பண்டிகையாகக் கொண்டாடப்படுவது தான் ‘ரக்ஷாபந்தன்’. இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் அதாவது, ஷ்ரவன் மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை, ‘ராக்கி’ என்றும் அழைப்பர். இத்திருநாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனிதமான மற்றும் மங்களகரமான கயிறைக் கட்டுவர். ரக்ஷா பந்தன் என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு’ என்றும், ‘பாதுகாப்பு பந்தம்’ என்றும் பொருள். இந்த விழா, தீய […]

August 10, 2014 admin
இந்தியாவில் இளைஞர்கள் ’குடி’க்கு அடிமையாகும் போக்கு 3 மடங்காக அதிகரிப்பு Running News

இந்தியாவில் இளைஞர்கள் ’குடி’க்கு அடிமையாகும் போக்கு 3 மடங்காக அதிகரிப்பு

இந்தியாவில் மது போதைக்கு இளைஞர்கள் அடிமையாவது 3 மடங்காக அதிகரித்துள்ளது என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இது குறித்து அமெரிக்காவின் கொலம்பியா பல்கலை கழகத்தின் பொது சுகாதார பிரிவை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்திய வமசாவளியை சேர்ந்த அரவிந்த் என்பவரது தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்பு குறித்து அவர் கூறுகையில், கடந்த 1956-1960ம் ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில் மதுவுக்கு அடிமையானவர்கள் 19.5 சதவீதமாக இருந்தனர். இந்த விகிதாச்சாரம் 1981-85ம் ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில் பிறந்த இளைஞர்களிடையே 74.3 […]

August 7, 2014 admin
எதிர்க்கட்சி தலைவர் பதவி அவசியமா? By  கதிர் Running News

எதிர்க்கட்சி தலைவர் பதவி அவசியமா? By கதிர்

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை எங்களுக்கு தந்தாக வேண்டும் என்று காங்கிரஸ் மல்லுக்கு நிற்கிறது. மக்களால் நிராகரிக்கப்பட்ட நீங்கள் பதவிக்காக வரிந்து கட்டுவது அநியாயம் என்று பிஜேபி தள்ளிவிடுகிறது. இவர்களின் சண்டை தேர்தலோடு முடிந்தது என்று நினைத்த மக்கள் இதென்ன கூத்து என்று வியப்புடன் வேடிக்கை பார்க்கிறார்கள்.நாடாளுமன்றத்தின் இரண்டு சபைகளிலும் எதிர்க்கட்சி தலைவர் பதவி உண்டு. ஆளும் கட்சிக்கு அடுத்த படியாக அதிக எம்.பி.க்களை பெற்றுள்ள கட்சியின் தலைவர் எதிர்க்கட்சி தலைவராக முன்வரிசையில் உட்காருவார். இதுவரை பிரச்னை […]

August 3, 2014 admin
உடனடி செய்திகள்