32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 148 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 148)
எல்லாருக்கும் நல்லவனா இருப்பதில் இப்படி ஒரு சோகம் இருக்குதா? Running News

எல்லாருக்கும் நல்லவனா இருப்பதில் இப்படி ஒரு சோகம் இருக்குதா?

திருமணமாகி மூன்றாண்டுகள் வரை குழந்தை இல்லாததால் என் மனைவி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் குழந்தை பாக்கியம் கேட்டு வேண்டுதல் வைத்திருந்தார். அதன் பின் பிறந்த மகளுக்கு குல தெய்வ கோவிலில் காதுகுத்து முடிந்ததும், இரண்டு வருடம் கழித்து நேர்த்திக் கடனுக்காக திருப்பரங்குன்றத்தில் மொட்டை போட வேண்டியிருந்தது. மனைவியின் அண்ணனிடம் தகவல் தெரிவித்த போது, வந்தால் செலவோ என நினைத்து நீங்களே அப்படியே போய் பண்ணிக்குங்க என்றார். என் வீட்டாரிடம் கேட்டதற்கு, நீங்க வேண்டினது தானே, முடியறப்போ போய் […]

November 21, 2019 admin
தியேட்டரில் திருடு போன காருக்கு பொறுப்பேற்க முடியாது என்று தியேட்டர் நிர்வாகம் சொல்ல முடியாது! Running News

தியேட்டரில் திருடு போன காருக்கு பொறுப்பேற்க முடியாது என்று தியேட்டர் நிர்வாகம் சொல்ல முடியாது!

நமது வண்டிகளை திரையரங்குகள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் நிறுத்தி விட்டு செல்லும் பொழுது நமக்கு கொடுக்கப்படும், ரசீதுகளில் “வண்டி தொலைந்தால், அதற்கு நிறுவனம் பொறுப்பு ஏற்காது” போன்ற வாசகம் குறிப்பிட்டிருக்கும். ஆகவே, ஒரு வேளை அவர்களின் நிறுத்தத்தில் வண்டி தொலைந்து விட்டால், அவர்களை சட்டப்படி நாம் கேட்க இயலாது என்பதே நமது புரிதலாக இருக்கும். இதனை அடிப்படையாக கொண்ட ஒரு வழக்கில் நேற்றைய முன்தினம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. வழக்கு என்னவென்றால், வாதிகள் இருவர், 1998ஆம் […]

November 17, 2019 admin
இனியொரு ஃபாத்திமாவை நாங்கள் இழக்க தயாரில்லை..! Running News

இனியொரு ஃபாத்திமாவை நாங்கள் இழக்க தயாரில்லை..!

சென்னை ஐஐடியில் எம்ஏ முதலாம் ஆண்டு மனிதம் மற்றும் சமுதாயம் பயின்று வந்தவர் பாத்திமா லத்தீப். இவர் கடந்த வாரம் ஐஐடி வளாகத்திற்குள் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஒரே ஒரு பாடத்தில் தோல்வி அடைந்த காரணத்தினால் பாத்திமா இந்த முடிவை எடுத்துவிட்டதாக கூறினார்கள். ஆனால் பாத்திமாவின் செல்போனை ஆராய்ந்த போது அவரது தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. தனது செல்போனில் நோட் எனும் பிரிவில் […]

November 13, 2019 admin
கவனச்சிதறல் இல்லாதவன்தான் சூப்பர்மேன்..! Running News

கவனச்சிதறல் இல்லாதவன்தான் சூப்பர்மேன்..!

ஓர் எழுத்தாளர் எதிரெதிர் கருத்துகளைப் பேசுகிற இரண்டு புத்தகங்களை வெவ்வேறு காலகட்டங் களில் எழுதுகிறார். இரண்டுமே பெரிய அளவில் கவனம் ஈர்க்கின்றன. இப்படியெல்லாம் நடப்பது மிக அரிது. தமிழில் அரசியல் சார்பு எழுத்துகளில் இப்படி நிகழ்வது உண்டு. உதாரணங்கள் தேவை யில்லை. ஆனால் இது ஆங்கில நூல். எழுத்தாளரின் பெயர் நிர் எயல் (Nir Eyal). தொழில்நுட்பம் சார்ந்த எழுத்துகளில் கில்லாடி. கேமிங் மற்றும் விளம்பரத்துறையில் பல ஆண்டு அனுபவம் பெற்றவர். கன்ஸ்யூமர் சைக்கலாஜி பயின்றவர். இவருடைய […]

November 10, 2019 admin
மாண்டி இல்லை என்றால் இதே சாயலில் ஆயிரம் ஆப்ஸ் வரபோகின்றது! Running News

மாண்டி இல்லை என்றால் இதே சாயலில் ஆயிரம் ஆப்ஸ் வரபோகின்றது!

விஜய் சேதுபதி மான்டி எனப்படும் பலசரக்கு மளிகைக்கான ஆப்ஸ் விளம்பரத்துக்கு வந்ததை கண்டிக்கின்றார்கள், இதெல்லாம் வியாபாரிகளை ஒழித்துவிடும் இவர் படத்தை ஆண்லைனில் ஓடவிடுவாரா என ஏக இம்சைகள்.. இவர்கள் எந்த காலத்தில் இருக்கின்றார்கள் என்பதே தெரிய வில்லை, காலத்தோடு ஓடாத எதுவும் நிலைக்காது, மாட்டு உழவுகள் டிராக்டர் முன் நிற்காது. பழைய பாகவதர் கால படங்களை இனி எடுக்க முடியாது ஏன் பிலிம் கம்பெனியே மூடபட்டு டிஜிட்டல் உலகமாகிவிட்டது அந்த பிலிம் கம்பெனி தொழிலாளர் கதி என்ன? […]

November 6, 2019 admin
விஜய் சேதுபதி விளம்பரப்படுத்தும் மண்டி ஆப்! – யாருக்கு ஆப்பு? Running News

விஜய் சேதுபதி விளம்பரப்படுத்தும் மண்டி ஆப்! – யாருக்கு ஆப்பு?

சமீப காலமாக, வர்த்தகர் கூட்டமைப்பும், வணிகர் சங்கமும் எதிர்க்கும் ஒரே விஷயம் மண்டி மொத்த கொள்முதல் ஆன் லைன் வியாபாரம்!…. ஏன் எதிர்க்கிறார்கள்? எதிர்ப்பால் மக்களுக்கு நன்மையா என்று பார்ப்போம்!…. 2017 நவ 8 க்கு முன், பருப்புகளின் விலை ஏகமாக இருந்தது. து.ப. ₹90-100 உ.ப. ₹160-180. பருப்பு உற்பத்தியில் வட இந்தியா முதலிடம் வகிக்கிறது. முக்கியமாக ம.பி, பீகார், உபி. ஆகியவையே பிரதான இடம் பெறுகிறது. ஆனாலும் பற்றாக் குறை காரணமாக பருப்பு மியான்மாரிலிருந்து இறக்குமதி […]

November 4, 2019 admin
மோடி அரசின் புதுச் சாதனைக்கான திட்டம் தயாராகுது – நியூ பார்லிமெண்ட் ஹவுஸ் வரப் போது!! Running News

மோடி அரசின் புதுச் சாதனைக்கான திட்டம் தயாராகுது – நியூ பார்லிமெண்ட் ஹவுஸ் வரப் போது!!

இந்திய நாடு சுதந்திரம் பெற்றதற்கு பிறகு முதன் முதலாக, புதிய பாராளுமன்ற கட்டிடம், மத்திய அரசின், தலைமை செயலகம், பிரதமர் இல்லம், பிரதமர் அலுவலகம் போன்ற கட்டிடங்கள் கட்டுவதற்கான, முதல் கட்ட பணிகள் துவங்கப்பட்டிருக்கின்றன. இந்திய பாராளுமன்றத்திற்கான கட்டிட மாதிரி வடிவங்களை, அகமதாபாத்தை சேர்ந்த கட்டிடக் கலை, வடிவமைப்பு நிறுவனம் தயாரித்து வருகின்றது. பாராளுமன்றத்திற்கான கட்டிடத்திற்கு, இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றது. தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடமானது, இந்திய அரசியலமைப்பின் அருங்காட்சியகமாக மாற்றப்பட இருக்கின்றது. இந்திய […]

October 31, 2019 admin
நவம்பர் 1 = தமிழ்நாடு நாளா? வரலாறு முக்கியம் அமைச்சரே! Running News

நவம்பர் 1 = தமிழ்நாடு நாளா? வரலாறு முக்கியம் அமைச்சரே!

தமிழக அரசின் சார்பில் நவம்பர் 1-ம் தேதி, முதல்முறையாக தமிழ்நாடு நாள் கொண்டாடப் படுகிறது. இதற்காக ரூ.10 லட்சத்தை தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கியுள்ளது. சட்டப்பேரவையில் இந்த நிதியாண்டுக்கான மானிய கோரிக்கை விவாதத்தின்போது, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், ‘‘தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதியை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவ.1-ம் தேதி ’தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும்’’ என்று அறிவித்தார். அதன்படி, இந்த ஆண்டு முதல் தமிழக […]

October 29, 2019 admin
சுர்ஜித் மீட்புப் பணியில் சுணக்கம் ஏன்? போர்வெல் தோண்டும் அதிகாரம் யாருக்கு? Running News

சுர்ஜித் மீட்புப் பணியில் சுணக்கம் ஏன்? போர்வெல் தோண்டும் அதிகாரம் யாருக்கு?

அப்பப்பா.. கடந்த இரண்டு,மூன்று நாட்களாக சோஷியல் மீடியாக்களில் ஒரு பக்கம் சுர்ஜித்-துக்கு ஆதரவாக பிரே பண்ணியும்., இன்னொருப் பக்கம் மீட்பு பணியில் ஈடுப்பட்டிருக்கும் துறை எது? என்று தெரியாமலே அவர்களை சகட்டுமேனிக்கு திட்டுவோரின் குரலும் கொஞ்சம் எல்லை மீறிதான் போய் விட்டது. இது போன்ற மீட்புப் பணியில் முதலில் இறங்கி தொடர்ந்து ஈடுப்பட்டு வருவது தீயணைப்பு துறை ஆகும். நம் தமிழக காவல் துறையிலிருந்து பிரிந்து வந்த துறையே தீயணைப்பு துறை, ஆரம்பத்தில் விரல் விட்டு எண்ணக் […]

October 27, 2019 admin
தமிழக இடைத் தேர்தல் முடிவுகள் பொதிந்து வைத்திருக்கும் சில செய்திகள்! Running News

தமிழக இடைத் தேர்தல் முடிவுகள் பொதிந்து வைத்திருக்கும் சில செய்திகள்!

1. அதிமுக மீண்டெழுகிறது ஆர்.கே. நகர் இடைத்தேர்தல், 2019 மக்களவைத் தேர்தல், அத்துடன் நடத்தப்பட்ட இடைத் தேர்தல், வேலூர் மக்களவைத் தேர்தல் எனத் தொடர்ந்து தோல்விகண்டு வந்தது அதிமுக. 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக பல தொகுதிகள் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது ( உ-ம்: கரூர் 420546, திருவண்ணாமலைத் தொகுதியில் 304187, மயிலாடுதுறை 261314 , காஞ்சிபுரம் 286632) இந்த நிலையிலிருந்து, மீண்டு, தாமதமாக நடத்தப்பட்ட வேலூர் மக்களவைத் தேர்தலில் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் […]

October 24, 2019 admin
உடனடி செய்திகள்