தமிழக இடைத் தேர்தல் முடிவுகள் பொதிந்து வைத்திருக்கும் சில செய்திகள்!

தமிழக இடைத் தேர்தல் முடிவுகள் பொதிந்து வைத்திருக்கும் சில செய்திகள்!

1. அதிமுக மீண்டெழுகிறது

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல், 2019 மக்களவைத் தேர்தல், அத்துடன் நடத்தப்பட்ட இடைத் தேர்தல், வேலூர் மக்களவைத் தேர்தல் எனத் தொடர்ந்து தோல்விகண்டு வந்தது அதிமுக. 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக பல தொகுதிகள் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது
( உ-ம்: கரூர் 420546, திருவண்ணாமலைத் தொகுதியில் 304187, மயிலாடுதுறை 261314 , காஞ்சிபுரம் 286632) இந்த நிலையிலிருந்து, மீண்டு, தாமதமாக நடத்தப்பட்ட வேலூர் மக்களவைத் தேர்தலில் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அப்போதே அது மீண்டெழுகிறது (Bouncing Back) என்ற கருத்துக்கள் ஊடக விவாதங்களில் பேசப்பட்டது. அதை இன்று வெளியான முடிவுகள் உறுதி செய்கின்றன. இன்று அதிமுக வென்ற தொகுதிகள் இரண்டும் 2016ல் திமுக கூட்டணி வென்ற தொகுதிகள் என்பது கவனிக்கத் தக்கது.

இந்த வெற்றியை பணபலத்தின் வெற்றி என திமுகவினரும் அவர்கள் பால் ஈடுபாடு கொண்ட ஊடகவியலாளர்களும் சொல்லிவருகிறார்கள். உண்மை என்னவெனில் இரு பெரும் கட்சிகளும் பணத்தைத் தண்ணீராகச் செலவிட்டன என்று களத்திற்குச் சென்று வந்தவர்கள் சொல்கிறார்கள். 2019ல் திமுக கட்டிய கூட்டணி என்பதே பணத்தால் வலுப்படுத்தப்பட்ட கூட்டணிதான்.ரூ 40 கோடியைக் கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்ததாக திமுக தேர்தல் ஆணையத்தில் சமர்பித்த கணக்குகளில் குறிப்பிட்டிருக்கிறது. சென்னையில் வசிக்கும் செல்வந்தர் ஒருவரை நான்கு னேரியில் தனது வேட்பாளராகக் காங்கிரஸ் களம் இறக்கியது. நாங்குனேரியில் திமுக எம்.எல்.ஏ ஒருவர் முறைகேடாகப் பணம் வைத்திருந்ததாக தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவை எல்லாம் பண பலம் என்பது திமுகவிடமும் இருந்தது என்பதைக் காட்டுகிறது

இடைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது வழக்கம் என்ற ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அன்று திண்டுக்கல்லிலும், அண்மையில் ஆர்.கே. நகரிலும் அது பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது

2. சாதியை வைத்து திருப்திபடுத்தவோ, பிளாக் மெயில் செய்யவோ முடியாது

இந்த தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் ஜாதியை வைத்து அந்தத் தொகுதியில் கணிசமாக உள்ள வாக்காளரை appease செய்ய திமுக முயன்றது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வன்னியர் களுக்கு உள் இட ஒதுக்கீடு என்று ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இரண்டு தொகுதி களில் வெல்வதன் மூலம் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற நிலையில் அந்த அறிக்கை  விடப் பட்டது என்பதைக் கவனிக்க வேண்டும். ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்புக் கொண்ட 22 தொகுதி களுக்கு இடைத்தேர்தலின் போது இத்தகைய வாக்குறுதி அளிக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. ஆனால் இந்த ஜாதி அரசியல் அந்த தொகுதியில் அதற்கு வெற்றியைக் கொடுக்கவில்லை
ஏழு உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததால் புதிய தமிழகம் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது. கறுப்புக் கொடிப் போராட்டம் நடத்தப்பட்டது. தேர்தல் புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதையெல்லாம் மீறி நான்குனேரியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது

3.திமுக தோற்கடிக்கப்பட முடியாத வலிமையைப் பெற்றுவிடவில்லை.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பரவலாக ஒரு கருத்து விதைக்கப்பட்டு வந்தது. 2021ல் வரக் கூடிய சட்ட மன்றத் தேர்தலில் திமுக எளிதாக வெற்றி பெற்று வி்டும் என்பதுதான் அது.அதன் அடிப்படையான வாதமாக மக்களவைத் தேர்தலில் அது பெற்ற வெற்றி சுட்டப்பட்டது. ஆனால் மக்களவைத் தேர்தல் மோதிக்கு எதிராக, மாற்றாக வாக்களிக்க விரும்பியோருக்கு ராகுல் பெயரை திமுக முன் மொழிந்திருந்தது. மோதி எதிர்ப்பு என்பது சட்டமன்றத் தேர்தலில் ஒரு factor இல்லை. அந்தச் சூழலில் திமுகவிற்கு வெற்றி என்பது எளிதாக இல்லை. திமுக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை மட்டுமல்ல, வேறு பல கட்சிகளையும் எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்பதும்ம் கவனிக்கத் தக்கது.

மாலன் 

Related Posts

error: Content is protected !!