விஜய் சேதுபதி விளம்பரப்படுத்தும் மண்டி ஆப்! – யாருக்கு ஆப்பு?

விஜய் சேதுபதி விளம்பரப்படுத்தும் மண்டி ஆப்! – யாருக்கு ஆப்பு?

சமீப காலமாக, வர்த்தகர் கூட்டமைப்பும், வணிகர் சங்கமும் எதிர்க்கும் ஒரே விஷயம் மண்டி மொத்த கொள்முதல் ஆன் லைன் வியாபாரம்!…. ஏன் எதிர்க்கிறார்கள்? எதிர்ப்பால் மக்களுக்கு நன்மையா என்று பார்ப்போம்!….

2017 நவ 8 க்கு முன், பருப்புகளின் விலை ஏகமாக இருந்தது.

து.ப. ₹90-100

உ.ப. ₹160-180.

பருப்பு உற்பத்தியில் வட இந்தியா முதலிடம் வகிக்கிறது. முக்கியமாக ம.பி, பீகார், உபி. ஆகியவையே பிரதான இடம் பெறுகிறது.

ஆனாலும் பற்றாக் குறை காரணமாக பருப்பு மியான்மாரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இது ஏறக்கிறைய 40% உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்து வந்தது.

இங்குதான் பருப்பு வணிகர்களின் மூளை பிரமாதமாக வேலை செய்தது. பருப்பு இறக்குமதி செய்ய அரசு அனுமதி அளித்த காலங்களில், வாங்கி ஸ்டாக் செய்து டிமாண்ட் உள்ள காலங்களில் விற்பனை செய்து வரி ஏய்ப்பு செய்து வந்தார்கள்…

இதற்காக கேஷ் எனும் கணக்கில் வராத ரொக்கப் பணத்தை பல வழிகளிலும் உபயோகித்து பருப்பு விநியோகம் எனும் தங்கப் புதையலை பத்திரமாகப் பார்த்துக் கொண்டார்கள்.

டிமானி வந்தது. இந்தத் தொழிலுக்கு ஆப்பு வைத்தது. ரொக்கப் பரிமாற்றம் இரண்டு லட்சத்திற்கு மேல் கிடையாது என்றதால், கறுப்புப் பணத்தை முடக்கி, ஸ்டாக் செய்யும் தொழில் மறைந்தது.

பருப்புகளை இறக்குமதி செய்த அன்றே விற்றால்தான் 10% லாபமாவது கிடைக்கும் என்ற நிலை உருவானபோது, பதுக்கல் ஒழிந்தது.

து.ப. ₹55 க்கும் உளுந்து ₹65க்கும் கிடைத்தது.

ஆனால் அதன் பின் என்ன புதிய உத்தியைக் கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. தற்போது பருப்புகளின் விலை தலா ₹90 மற்றும் ₹110.

லாபம் 35% – 45%.

மொத்த வியாபாரிகள் மௌனமாக ரகசியமாக எதையோ செய்து கொண்டிருப்பதால் சங்கங்களும் கூட்டமைப்பும் கூச்சலிடவில்லை.

ஆனால் தற்போது மண்டி ஆப் தொடங்கிய ஜெய்யம் க்ளோபல் ஃபுட்ஸ் கம்பெனி இந்த மொத்த வணிகர்கள் தலையில் குண்டு போட்டிருக்கிறது.

அதாவது, ஒரு விவசாயி தனது விளைபொருளை இவர்களிடம் விற்று உடனே பணத்தைப் பெறலாம் என்பதும், ஏனைய வியாபாரிகள் மண்டியில் வாங்கி (க்ரெடிட் வசதியுடன்) விற்பனை செய்யலாம் என்றும் விளம்பரம் செய்தது.

இதில் நகைச்சுவையான விஷயம் என்னவென்றால், பதுக்கல் பேர்வழிகள. ஜெயம் க்ளோபல் ஃபுட்ஸை எதிர்க்காமல் அந்த விளம்பரத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு மிரட்டல் விடுப்பதும், அவர் வீட்டிற்கு எதிரே கோஷம் எழுப்புவதும்…..

என்னய்யா? புலி பிடிக்கத் தெரியாதவன் எலிக்கெதிராகவா போராடுவீங்க?

எப்போது வர்த்தக கூட்டமைப்பு போராட்ட களத்தில் இறங்குகிறதோ, அப்போதே தெரிந்து கொள்ளலாம், அந்தப் போராட்டத்தில் எதிராளி பக்கமே நியாயம் இருக்கும் என்பதை.

பெப்ஸி, கோலா வை விற்க மாட்டோம் என்று முடிவெடுத்தார்கள். செய்தார்களா?

அதே நேரம் உள்ளூர் பவண்டோ எனும் அதே நச்சு திரவத்தின் வியாபாரத்தை பெருக்க உதவினர் வணிகர் சங்கமும், கூட்டமைப்பும்….

காரணம், பவண்டோ வின் காளி மார்க் கம்பெனி உரிமையாளர் நாடார்…. அவர்கள் இனத்தைக் காப்பாற்ற எப்படி வேண்டுமானாலும் போராடுவாரகள்… ஏன் பவண்டோவையும் விற்கக் கூடாது என்று முடிவெடுத்திருக்கலாமே!…

ஜெய்யம் க்ளோபல் கம்பெனி சேலம் ஓமலூர் அருகே தீவட்டிப் பட்டி அருகே உள்ளது. அதன் உரிமையாளர் ரத்தினவேல் என்று வலைத்தளங்கள் சொல்கிறது…

இவர் கவுண்டராக இருந்தால், இவரை தங்கள் வியாபாரத்திற்குள் வர விடாமல் தடுக்கும் போராட்டமே கூட்டமைப்பின் தற்கால குறிக்கோளாக இருக்கும்….

இவரே அண்ணாச்சியாக இருந்தால், தனி ஒருவரை டெக்னாலஜி கொண்டு பணம் சம்பாதிக்க அனுமதிக்க மாட்டோம் எனும் இரண்டு பணக்கார கும்பலுக்கு இடையே உள்ள ஒரு பங்காளிச் சண்டை!

ஆக, மக்களாகிய நமக்கு இவர்களது மண்டி வியாபாரமும் சரி, வர்த்தக கூட்டமைப்பின் போராட்டமாக இருந்தாலும் சரி, ஒரு பிரயோஜனமும் இல்லை.

அரசுக்கு, பொது மக்கள் சார்பில் ஒரு கோரிக்கை வைக்கிறேன்…. சப்ளை டிமாண்ட் மாறாத பட்சத்தில் பருப்பு விலை இத்தனை ஏகமாக உயர்ந்திருப்பதின் பிண்ணனியில் இருக்கும் கறுப்பு ஆடுகளைக் கண்டு பிடியுங்கள்…

கறுப்புப் பண முதலைகளை அழித்து ஒழியுங்கள்….

மண்டி ஆப் சண்டை, பிகில் படம் போல இல்லாமல் மக்களின் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி மட்டுமே….. கண்டு ரசிக்கிறோம்….

டிமிட்த் பெட்கோவ்ஸ்கி!

Related Posts