இதை புரிஞ்சவன் இந்தியன்!

இதை புரிஞ்சவன் இந்தியன்!

அந்த சாஸ்த்ரம் இந்த சாஸ்த்ரம்னு சொல்றது எதையும் அது யாருகாக எழுதப்பட்டதா சொல்றாங்களோ அவங்க பாத்ததும் இல்ல படிச்சதும் இல்ல. கொஞ்சம் பேர் பாத்தாலும் படிச்சாலும் அத ஃபாலோ பண்றது இல்ல. பண்ற ஒருத்தர காட்டிட்டா பூமி தட்டைனு ப்ரூவ் பண்ண தயார்.

சம்பந்தமே இல்லாத சில பேரு அத எல்லாம் வரி விடாம படிக்கிறாங்க, அதுக்கு அர்த்தம் சொல்றாங்க (கரெக்டாத்தான்), ஏகப்பட்ட கேள்வி கேக்றாங்க, அப்றம் கிண்டல் பண்றாங்க.

வேற வேலயே இல்லயா, ப்ரோ?..னுதான் கேக்க தோணுது.

இதாண்டா இந்து மதம்..னு இவங்களுக்கு யார் எடுத்து சொல்றது?

இந்த மதத்துக்கு தலைவனும் கிடையாது, புனித நூலும் கிடையாது, விதிகளும் கிடையாது, அவ்ளோ எதுக்கு, இவர்தான் கடவுள்னு ஒருத்தர காட்றதும் கிடையாது.

விருப்பப்பட்ட ஆளையோ பொருளையோ கடவுள்னு சொல்லி கும்பிட்டா யாரும் தடுக்க மாட்டாங்க. யாரையும் எதையும் ஏத்துக்க மனசு இல்லையா? கடவுள்னு ஒருத்தர் இல்லவே இல்லைனு சொல்றியா? யு ஆர் வெல்கம். அதையும் இந்த மதம் ஏத்துக்குது.

யார் யாரோ எதுனா சொல்லிக்கலாம். அத எல்லாம் கண்டுக்கவே தேவை இல்ல. நாந்தான் அடுத்த முதல்வர்னு சொல்லிக்கிறதுக்கு யாருக்கு வேணா உரிமை இருக்குல்ல. அது மாதிரிதான் இதும்.

இதை புரிஞ்சவன் இந்தியன்!

கதிர்