பணமதிப்பிழப்பால் ஏதாவது நன்மையுண்டா என்பது இதுவரை தெரியவில்லையே!

பணமதிப்பிழப்பால் ஏதாவது நன்மையுண்டா என்பது இதுவரை தெரியவில்லையே!

நவம்பர் 8.. நான்கு ஆண்டுகளுக்கு முன்..பணமதிப்பிழப்பு..இன்றைக்கு இந்தியா உலகின் வல்லரசாக திகழ்வதற்கு மோடி அடித்தளமிட்ட நாள்..கருப்பு பணத்தை கணக்கில் கொண்டு வரமுடியாமல் நாடுமுழுவதும் ஆயிரக்கணக்காண தொழிலதிபர்ள் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட நாள் .பேராசை பிடித்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பருப்பு இனி வேகாது என குடிசை தொழிலுக்கு மாறிய நாள்.

கனவு தெளிஞ்சு நிஜத்துக்கு வருவோம்.

– பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை மறுநாளே வரவேற்ற கும்பலில் நானும் ஒருவன்.. எதிர்ப்பாளர்களை சாந்தப்படுத்த பதிவுகளை போட்டவன்..நாள் நாள் ஆக ஆகத்தான் புரிந்தது, யாரையும் கலந்தா லோசிக்காமல், முன்னேற்பாடே இல்லாமல் மோடி, தான்தோன்றித்தனமாக அறிவித்திருக்கிறார் என்பது.. ஒரே வரியில் சொன்னால் காலி பெருங்காய டப்பா.

நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதித்துறையின் செயலாளர்கள் என எவரையும் கருத்து கேட்காமல் சில நிமிடங்களில் பேரழிவுக்கு வித்திட்டிருக்கிறார்..இரண்டு நாள் என்றார்கள். பத்து நாட்கள்கூட பொறுத்திருந்தோம்.. ஆனால் கையில் மை, திருமண செலவுக்கு கட்டுப்பாடு என எவ்வளவு தூரம் கேவலப்படுத்தினார்கள்..

நாலாயிரத்தை வாங்க நாடு முழுவதும் பிச்சைக்காரர்களாய் அலையவிடப்பட்ட கொடுமை,, பணப்பு ழக்கம் இல்லாததால் லட்சக்கணக்கில் அழிந்த சிறு தொழில்கள் மற்றும் குறு வணிகம்..மருத்துவ செலவுக்கு பணம் எடுக்கமுடியால் தவித்த மக்கள், வங்கி வாசலிலும் ஏடிஎம் கியூவிலும் நெரிசலில் சிக்கி மாண்டுபோன 165 சாமான்யர்கள்.. எந்த பெரும்புள்ளியும் சாகவில்லை..இரண்டு மாதங்கள் ஆகியும்கூட ஏடிஎம்களை புதிய நோட்டுக்களுக்கு ஏற்ப வடிவமைக்காமல் எவ்வளவு அலட்சியம்..

இன்றைக்கு அரசு தரப்பில் இவ்வளவு நன்மைகள் விளைந்துள்ளன என்று சொல்கிறார்கள்.. அரசு என்ன சப்பை கட்டு கட்டினாலும் சரி..அருமையாக ஒரு வாரத்தில் முடித்திருக்கவேண்டிய விஷயத்தை கையாள திறமையில்லாமல், 135 கோடி இந்தியர்களை, சொந்த பணத்திற்காக கையேந்த வைத்தது எந்த காலத்திலும் மறக்க முடியாத.. மன்னிக்கமுடியாத குற்றம்..!

டிரைவிங்கே தெரியாதவன் கையில் கன ரக வாகனம் ஓட்டுவதற்கு கிடைத்த கதைதான்.. திட்டமிடல் இல்லாமல் கோடிக்கணக்கானோரின் சிறு குறு தொழில்களை ஒழித்துக்கட்டிய அந்த மோடியை தான் இன்றும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.. ஆனால் பணமதிப்பிழப்பால் எவ்வளவு நன்மைகள் என்பதை மட்டும் சொல்ல மாட்டேன் என்பார்கள் ..!

ஏழுமலை வெங்கடேசன்

Related Posts

error: Content is protected !!