32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2455 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 124 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 124)
தமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ! Exclusive

தமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ!

மத்திய அரசு மனது வைத்தால் தான் மாநில அரசுக்கு உரிய நிதிப் பங்கை வழங்க முடியும். தற்போது மத்திய அரசும் மாநில அரசும் எதிரெதிர் அரசியல் நிலைகளை வகுத்து, வழிநடப்பதால் அரசுப் பணிகளில் அரசியல் தலையீட்டின் தாண்டவம் தவிர்க்க முடியாது என்றாகிவிட்டது. இந்த சூழலில் மத்திய அரசிடம் இருந்து மாநிலத்துக்குரிய பணப் பங்கைப் பெறுவது எப்படி? கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. “ஆடுற மாட்ட ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டப் பாடிக் கறக்கணும்” எனும் இப்பழமொழியைத் தான் நாம் […]

June 10, 2021 admin
நேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை!? Exclusive

நேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை!?

மாண்புமிகு மனதின் குரல் (மன்கிபாத்) பிரதமர் நமோ நேற்று அடிசினலாக மக்களிடம் உரையாற்றினார். அப்போது, “மாநிலங்கள் இனிமேல் தடுப்பூசிக்காக செலவழிக்க தேவையில்லை. இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசியில் 75 சதவீதத்தை ஒன்றிய அரசு வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யும். மீதமுள்ள 25 சதவீதத்தை தனியார் மருத்துவமனைகள் வாங்கி பயன்படுத்தலாம்” என்றார். தனியார் மருத்துவமனைகளுக்கு ஏன் 25 சதவீதம்.? என எழும் கேள்வியை அப்படியே ஓரங்கட்டி, வேறு விஷயத்தைப் பார்ப்போம். எங்கே தடுப்பூசி.?, எங்கே தடுப்பூசி.? என பாவப்பட்ட […]

June 8, 2021 admin
சமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்! Exclusive

சமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்!

தமிழ்நாடு அரசு நிதி அமைச்சராக பிடிஆர் தியாகராஜன் நியமனம் பெற்றதும் இந்திய அளவில் அவர் மீது விழைவு வெளிச்சம் குழைந்து தவழ்ந்தது. அமைச்சர்களின் வரிசையில் முன்னணி இடத்தைப் பிடிப்பவர்கள் தான் நிதியமைச்சர் பொறுப்பைப் பெறுவார்கள். ஆனால் இவரோ பின் வரிசையில் இடம்பிடிக்கும் அளவுக்கான ஜூனியர். பாரம்பரியப் பெருமை இவருக்குச சிவப்புக் கம்பளம் விரித்தது. பாட்டனார் பிடி ராஜன், தந்தை பழனிவேல் ராஜன் ஆகியோர் மறைந்தனர் எனினும் அவர்தம் பண்பு நலன்களும், நாகரிக நிலைப்பாடுகளும் இன்றும் பேசப்படுகின்றன. அந்த […]

June 7, 2021 admin
சீனாவின் ‘காய்ச்சல்’ வரலாறு…! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு Exclusive

சீனாவின் ‘காய்ச்சல்’ வரலாறு…! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

சீனாவின் வரலாறு பண்டையக் காலம் தொட்டே துவங்கியிருந்தாலும் அதன் சமீபத்திய நவீன வரலாறு செஞ்சீனப் புரட்சிக்குப் பின்னரே துவங்குகிறது. புரட்சியை மேற்கு உலகம் ஏற்கவில்லை என்ற போதும் சோவியத் ஒன்றியமும் பொதுவுடமை அகிலமும் சீனாவைத் தாங்கி நின்றன. மாவோவின் மறைவிற்குப் பிறகு சீனா தனது சமத்துவப் பாதையிலிருந்து விலகி முதலாளித்துவ அணுகுமுறைக்கு மாறி இப்போது பெரும் பொருளாதார சக்தியாக நிலைத்திருக்கிறது. உலக வல்லரசாகும் கனவெல்லாம் கூட உண்டு. ஆயினும் அவ்வப்போது சீனாவின் இருண்ட பக்கங்கள் வெளியே வந்து […]

June 5, 2021 admin
மாமணியும் கனவு இல்லமும்! Exclusive

மாமணியும் கனவு இல்லமும்!

தமிழ்நாடு அரசு ஏற்கெனவே வழங்கும் “கலைமாணி” விருது எழுத்தாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கலைஞரின் பிறந்தநாளை ஒட்டி, நேற்று வெளியிட்ட அறிவிப்பில் மூன்று எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருதும் 5 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. முந்தைய அரசு, கலைமாமணி விருதையே கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் அறிவிக்காமல் பிறகு மொத்தமாக வழங்கியது. பின்னரும்கூட, இரண்டு ஆண்டுகள் சேர்த்து வழங்கியிருக்கிறது. கலைமாமணி விருது வழங்கப்படுவர்களின் எண்ணிக்கையும் அது வழங்கப்படும் விதமும் சேர்த்து அதன் மீதான மதிப்பை நிகர் […]

June 4, 2021 admin
எழுத்தும் கழுத்தும் கலைஞரின் இரட்டைக் குழல் துப்பாக்கி! Exclusive

எழுத்தும் கழுத்தும் கலைஞரின் இரட்டைக் குழல் துப்பாக்கி!

தலைவருக்கும் தொண்டர்களுக்கும் இடையிலான ஈர்ப்புமிகுத் தொடர்புகளின் தமிழக அரசியல் வரலாறு பாசப்பூர்வமானது. ஆனால் தற்போது அந்த நடைமுறையே முடைமுறை என்றவாறு முடங்கி விட்டது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் தொண்டர்களையோ, பொதுமக்களையோ விளித்துப் பேசும்போது பயன்படுத்தும் வாசகங்கள் மிகமுக்கியமானவை. துவண்டு கிடக்கும் தொண்டனைத் துடித்தெழு வைக்கும் தாரக மந்திரம் அது. “பெரியோர்களே! தாய்மார்களே!” என்று இருந்த விளிப்பு சாதாரணமாகத் தொடங்கியது.  பெரியார் கூட தனது விடுதலை நாளிதழில் கட்டுரைகளிளோ தன் கையொப்பமிட்டக் கடித அறிக்கைகளிலோகூட இதில் கவனம் செலுத்தவில்லை. அண்ணா […]

June 3, 2021 admin
தமிழக அரசு என்றும் தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்றழைப்போம்! Exclusive

தமிழக அரசு என்றும் தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்றழைப்போம்!

Govt of Tamilnadu என்பதை தமிழ்நாடு அரசு என்று நம் மாநில அரசு அலுவல் பூர்வமான ஆவணங்களிலும், பொது வழக்கிலும் குறித்து வருகிறது. அதற்கு மாற்றாக தமிழக அரசு என்றும் தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்றும் குறிக்குமாறும் அழைக்குமாறும் நாம் கோருவோம். அகம் என்ற சொல்லுக்கு மனம், இல்லம், வதிவிடம் எனப் பல இனிய அர்த்தங்கள் உண்டு. தமிழை அகத்தே கொண்ட பகுதி தமிழகம். தமிழகம் என்ற சொல் தமிழின் இல்லம் என்பதைக் குறிக்கும். ஒரு […]

June 3, 2021 admin
எங்கே கருணை? எங்கே நிதி? அரசின் சிக்கலுக்கானத் தீர்வு என்ன? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு! Exclusive

எங்கே கருணை? எங்கே நிதி? அரசின் சிக்கலுக்கானத் தீர்வு என்ன? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

சமீபத்தில் நடந்த ஜி எஸ் டி கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பேசும் போது மாநிலங்கள் அன்றி ஒன்றியம் இல்லை; எனவே வேண்டா வெறுப்புடன் நிதிப்பகிர்வை ஒன்றிய அரசு செய்யக்கூடாது என்று பேசியுள்ளார். இந்தியாவில் மொழி வாரி மாகாணங்கள் அமைக்கப்பட்ட வரலாற்றை அறிந்த யாவரும் ஒன்றியத்திலிருந்துதான் மாநிலங்கள் உருவானதை ஒப்புக்கொள்வார்கள். இது ஒரு புறம். ஆனால் நிதி விஷயத்தில் அதுவும் ஜி எஸ் டியின் வடிவமைப்பே தவறு என்றும் பெரிய மாநிலங்களுக்கு, அதாவது அதிக வருவாய்க் கொண்ட […]

June 2, 2021 admin
இந்திய நாடு என் நாடு : தமிழக மக்கள் எம் மக்கள்! Exclusive

இந்திய நாடு என் நாடு : தமிழக மக்கள் எம் மக்கள்!

பல தடவை சொல்லி விட்டோம், இந்தியா என்பது ஒரு நாடு அல்ல. பல்வேறு தேசிய இனங்கள் கொண்ட ஒரு துணைக்கண்டம். அரசியல் சாசன சட்டப்படி அதன்பெயர் யூனியன் ஆப் இந்தியா. இந்த பாரத் மாதா கி ஜே என்பதெல்லாம், பிரிட்டிஷ்காரன் நம்மை அடிமைப்படுத்திய போது அவனை எதிர்த்து போராட ஆரம்பித்தபோது வந்தவைதான். மன்னர்கள் ஆண்டபோது பாரதமாதா கான்செப்ட் எல்லாம் இல்லை.. பல்வேறு தேசங்களாக சமஸ்தானங்களாய் சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த பகுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக அடிமைப்படுத்தினான் வியாபாரி வடிவில் […]

May 31, 2021 admin
ஒரு பார்ப்பனப் பொறுக்கி கிடைத்தால் மொத்துவீர்கள், திராவிடப் பொறுக்கிகளென்றால் ஒத்துவீர்களோ!! 😠. Exclusive

ஒரு பார்ப்பனப் பொறுக்கி கிடைத்தால் மொத்துவீர்கள், திராவிடப் பொறுக்கிகளென்றால் ஒத்துவீர்களோ!! 😠.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெண்களின் மீதான பாலியல் சீண்டல்கள்/வன்முறை மீண்டும் பேசுபொருளாகி யிருக்கிறது. இந்தமுறை புண்ணியம் கட்டிக் கொண்டது பத்மா சேசாத்ரி பள்ளி. பாரம்பரியம் மிக்கதாகவும் சமூகத்தில் உயர்படியில் இருப்பதாகவும் தோற்றத்தைக் கொண்ட பள்ளி அசிங்கப்பட்டு நிற்கிறது.வெட்கக்கேடு ! 😠. இதற்கு விளக்கம் வேறு தேவையா ? 😡. முன்னாள் மாணவிகள், விதயத்தைத் துணிந்து இணையத்தில் வெளியிட, தீ பற்றிக் கொண்டது. நல்லதுதான்…வேண்டியதுதான். ஆசிரியக் கோமகன் இராசகோபாலன் தற்போது சிறையில் !. எவ்வளவு வேகமான நடவடிக்கை!கண்டிப்பாக […]

May 28, 2021 admin
உடனடி செய்திகள்